நான்கரை ஆண்டுகளுக்கு முன் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய பெயர் மது. வயிற்றுப்பசியைத் தாங்கிக்கொள்ள முடியாமல் உணவைத் திருடித் தின்றதற்காக அரசியல் பிரமுகர்களால் அடித்தே கொல்லப்பட்ட பழங்குடியினத்தை சேர்ந்த மதுவின் கொலைக்குக் கிடைக்கவேண்டிய நீதிக்கான விசாரணை நீண்டுகொண்டே போகிறது. இச்சூழலில்தான், அதே பழங்குடியினத்தைச் சேர்ந்த திரௌபதி முர்முவை ஜனாதிபதியாக்கி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.

mm

பாலக்காடு மாவட்டம், அட்டப்பாடி அகழி கடுகுமன்னா ஆதிவாசிக் கிராமத்தைச் சேர்ந்த 27 வயதான மது, சிறிது மனநலம் பாதித்த நிலையில் 2018, பிப்ரவரி 22ஆம் தேதி, பசியால் பலரிடமும் உணவு கேட்டுக் கையேந்தியிருக்கிறார். யாருமே உணவளிக்காத நிலையில், ஒரு பலசரக்குக் கடையிலிருந்து ஒரு பிடி அரிசியைத் திருடியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பா.ஜ.க.வைச் சேர்ந்த அந்த கடை உரிமையாளரும் மற்றும் சிலரும் சேர்ந்து, மதுவைப் பிடித்து, கை, கால்களைக் கட்டிப்போட்டு அடித்து உதைத்து சித்ரவதை செய்தே கொன்றதோடு, அதை வீடியோ வாக்கி சமூக வலைத்தளங்களிலும் பரவ விட்டனர்.

இந்த சம்பவம், இந்தியா முழுக்க அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து கடை உரிமையாளர் முனீர், சி.ஐ.டி.யு. நிர்வாகியான கார் டிரைவர் சம்சுதின், மா.கம்யூனிஸ்ட் நிர்வாகியான வியாபாரி ஹுசைன் உட்பட 16 பேர் மீது அகழி போலீசார் வழக்குப்பதிவு செய்து 90 நாட்களில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனர். மன்னார் காடு எஸ்.சி./எஸ்.டி. சிறப்பு நீதி மன்றத்தில் நடந்துவரும் இந்த வழக்கில், தற்போது சாட்சிகள் எல்லாம் மாறிவிட்டதாகவும் இதற்கு காரணம் போலீசும் அரசும்தான் எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

Advertisment

bb

இதுகுறித்து நம்மிடம் பேசிய ஆதிவாசிகள் கூட்டமைப்பு தேசிய செயலாளர் சுரேஷ் சாமியார் காணி, "மது, குறும்பர் பழங்குடியினப் பிரிவைச் சார்ந்தவர். மதுவை கொலை செய்த வர்களுக்கு விரைவில் தண்டனை கிடைக்கு மென்று முதல்வர் பினராய் விஜயன் கூறியிருந் தார். ஆனால் நான்கரை ஆண்டுகளாகியும் விசாரணை சரிவர நடக்கவில்லை. போலீசாரின் 55 சாட்சிகளும் மாறிவிட்டனர். இவ்வழக்கில் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகுதான் ரகுநாத் என்ற அரசு வழக்கறிஞர் நியமிக்கப்பட்டார். அவரும் 8 மாத காலத்தில் விலகிக்கொள்ள, ராஜேந்திரன் என்பவரை நியமித்தனர். இவரோ இந்த வழக்கில் நெருக்கடிகள் இருப்பதாகக்கூறி ராஜினாமா செய்தார். கடைசியாக 2021-ஆம் ஆண்டில் ராஜேஷ்மேனன் என்பவரை அரசு வழக்கறிஞராக நியமித்தனர். விசாரணைக்கு அழுத்தமும், நெருக்கடியும் இருப்பதால்தான் விசாரணை நீண்டுகொண்டே போகிறது. மதுவுக்கு ஆதரவான சாட்சிகளும் மாறிக் கொண்டே போகிறார்கள். இதற்கு காவல் துறையே முக்கிய காரணம்.

மது கொலை வழக்கின் முக்கிய குற்ற வாளியான ஹுசைன், ஓர் ஆண்டுக்குமுன் மா.கம்யூனிஸ்டில் அந்த ஏரியா செயலாளராக நியமிக்கப்பட்டார். நீதியைப் பெறுவதற்கான பண பலம் ஆதிவாசிகளுக்கு இல்லை. அரசும் இதுகுறித்து அக்கறை செலுத்தாததால் மீண்டும் மீண்டும் நசுக்கப்பட்டுக்கொண்டே இருக் கிறோம். மது திருடினாரா என்பதிலேயே எங்க ளுக்கு சந்தேகமிருக்கிறது. அவனது உடற் கூராய்வில், உடலுக்குள் உணவுப் பொருளே இல்லையென்று கூறப்பட்டுள்ளது'' என்றார்.

மதுவின் தாயார் மல்லி, "மகனின் கொலைக்குப் பிறகு அங்கன்வாடியில் ஆயா வேலை போட்டுத் தந்தார்கள். மது, மனி தர்களிடம் நெருங்காமல், காடு தான் சாமின்னு கும் பிட்டுக்கிட்டு வாழ்ந்தான். யாரைப் பார்த்தாலும் உணவு கேட்பான், ஆனால் திருட மாட்டான். என் மகனுக்காகப் போராடியவர்களெல்லாம் இப்போது கைவிட்டுவிட்டதால் என்னமாதிரி நீதி கிடைக்குமென்றே தெரியவில்லை. குற்றவாளிக்கு ஆதரவான அரசியல் பிரமுகர் அப்பாஸ் உட்பட பலர் என்னை மிரட்டுகிறார்கள். லட்சம் பணமும், வீடும் கட்டித் தருவதாக பேரம் பேசுகிறார்கள். அப்பாஸ் மிரட்டுவதை நீதிமன்றத்தில் கூறியதால் அவரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். நாங்க இதுவரையிலும் கை நிறைய பணம் வச்சிருந்தது இல்ல, அதனால பணத்தாசை இல்லை. என் மகனின் கொலைக்கு நீதியும், கொலையாளிகளுக்கு கடுமையான தண்டனையும் தான் வேண்டும். மகனின் கொலைக்கான நீதிக்காக தேவைப்பட்டால் ஜனாதிபதியையும் சந்திப்பேன்'' என்றார்.

Advertisment

dd

கேரளா காங்கிரஸ் எம்.பி. கொடிகுந்நில் சுரேஷ், "இந்த வழக்கு மீது தீவிரம் காட்ட வேண்டுமென்று காவல்துறைக்கும் அரசுக்கும் எந்தவித அக்கறையும் இல்லை. ஆதிவாசிகள் மீது பினராய் விஜயனுக்குள்ள வெறுப்பைத் தான் இந்த வழக்கின் போக்கு காட்டுகிறது. எனவே இதை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்'' என்றார். அகழி போலீசார் கூறும்போது, "அரசு வழக்கறிஞர்கள் மாறியது சொந்தக் காரணம். அது விவாதமாக இல்லை. அரசும் காவல்துறை யும் இதில் அதிக அக்கறை கொண்டிருப்பதால் தான் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டு இருக்கும் குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை கிடைக்கும்'' என்றார்கள்.

நாகரிகம் வளர்ந்த நாட்டில் இயற்கையாக வரும் பசிக்கு உணவைத் திருடித் தின்றுவிட்டார் என்பது கொல் லப்படக்கூடிய குற்றத்தில் வருமா? இது போன்ற வழக்கு களில் குறிப்பிட்ட காலத் திற்குள் விசாரணையை நடத்தி முடிக்க கண்டிப் பான ஒரு சட்டம் தேவை என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.