டந்த சிலநாட்களாக காலிஸ்தான் விவகாரம் தொடர்பாக கனடாவுக்கும் இந்தியாவுக்குமான உறவில் திடீர் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. "கனடாவில் சில அமைப்புகள் இந்தியாவுக்கு எதிரான உணர்வுகளைப் பரப்பிவரும் அசாதாரணமான சூழல் காரணமாக கனடாவிலுள்ள இந்தியர்களும், இந்திய மாணவர்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்' என்று இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதேபோல், இந்திய எதிர்ப்பாளர்கள் மிகுதியாக உள்ள இடங்களுக்கு பயணிப்பதைத் தவிர்க்க வேண்டு மென்றும் கேட்டுக்கொண்டுள்ளது. கனடாவுக்கு பயணிக்கும் இந்தியர்களுக்கும் இதே எச்சரிக்கையை அளித்துள்ளது.

c

அப்படியென்ன பிரச்சனை கனடாவுக்கும் இந்தியாவுக்கும் எனத் தெரிந்துகொள்வதற்கு முன்பாக, காலிஸ்தான் விவகாரம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். நம் தமிழ் நாட்டிலும், ஈழத்திலும் ஒலிக்கின்ற தனி ஈழத்துக்கான குரலைப் போலவே, இந்திய சுதந்திரத்துக்கும் முன்பிருந்தே இந்தியப் பகுதியி லுள்ள பஞ்சாப்பையும், பாகிஸ்தான் பகுதியிலுள்ள பஞ்சாப்பையும் இணைத்து காலிஸ்தான் என்ற தனி நாடாக உருவாக்க வேண்டுமென்ற கோரிக்கையை சீக்கிய அமைப்புகள் எழுப்பின. ஆனால் அதை மீறித் தான் இந்தியா பாகிஸ்தான் பிரிவினையும், சுதந்திரமும் கிடைத் தது. அப்போதிருந்தே காலிஸ்தான் தனி நாட்டுக்கான குரல் ஒலித்த படியே இருந்தது.

Advertisment

காலிஸ்தான் தனிநாட்டுக்காகக் குரலெழுப்பிய பஞ்சாப் தலைவர்களில், ஜலந்தர் மாவட்டத்திலுள்ள பர்சிங்புரா கிராமத்தைச் சேர்ந்த ஹர்தீப்சிங் நிஜ்ஜார் முக்கியமானவர். இந்தியாவில் காலிஸ்தான் தனி நாடு கோரிக்கைக்கான போராட்டங்கள் ஒடுக்கப்பட்ட சூழலில், இங்கிருந்து கனடாவுக்கு இடம்பெயர்ந் தது நிஜ்ஜாரின் குடும்பம். அங்கே ஓர் மாணிக் பாட்சா போல் பிளம்பர் பணியைச் செய்துவந்தார். பின்னர், சர்ரே நகரிலுள்ள குருநானக் சீக்கிய குருத்வாராவுக்கு தலைமைப்பொறுப்பை ஏற்றார் ஹர்தீப்சிங் நிஜ்ஜார். அடுத்த தாக, "காலிஸ்தான் டைகர் ஃபோர்ஸ்' என்ற அமைப்பைத் தொடங்கி தலைமைப் பொறுப்பை ஏற்றதோடு, சர்வதேச அளவிலான "சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ்' அமைப்பின் கனடா பிரிவுக்கு தலைமைப் பொறுப் பையும் ஏற்றார். கனடாவிலிருந்தபடியே காலிஸ்தான் தனி நாட்டுக்காகக் குரல் கொடுத்த தோடு, ஜெர்மனி, அமெரிக்கா எனப் பல்வேறு நாடுகளிலும் அதற்கான ஆதரவைத் திரட்டும் பணியில் ஈடுபட்டதாக நிஜ்ஜார் மீது குற்றம்சாட்டப்பட்டது. அதையடுத்து, 2020ஆம் ஆண் டில், இவ்விரு அமைப்புகளையும் தடைசெய்யப்பட்ட தீவிரவாத அமைப்பாக இந்தியா அறி வித்தது. மேலும், ஹர்தீப்சிங் நிஜ்ஜாரை சட்டவிரோத நட வடிக்கைகள் தடுப்பு சட்டத் தின்படி பயங்கரவாதி என்று இந்தியா அறிவித்ததோடு, அவர் எங்கிருக்கிறார் என்பது குறித்து துப்பு கொடுப்போருக்கு 10 லட்ச ரூபாய் பரிசளிக்கப்படும் என்றும் அறிவித்தது.

அதன் தொடர்ச்சியாக, இந்தியாவில் நிஜ்ஜாருக்கு சொந்தமான அசையா சொத்துக்கள் அனைத்தையும் என்.ஐ.ஏ. அமைப்பு பறிமுதல் செய்தது. இப்படியான சூழலில் கடந்த ஜூன் 18ஆம் தேதி, கனடாவின் சுரே நகரிலுள்ள குருத்துவாரா அருகில் காரில் பயணம் செய்துகொண்டிருந்த நிஜ்ஜார் மீது அடையாளம் தெரியாத இரண்டு மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் குண்டு பாய்ந்து காரினுள்ளேயே கொல்லப்பட்டார் நிஜ்ஜார்.

c

Advertisment

இந்தியாவால் தீவிரவாதி என்று அறிவிக்கப்பட்டவர் கனடா நாட்டில் கொல்லப்பட் டது தான் தற்போது பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள் ளது. நிஜ்ஜார் மர்மமாகக் கொல்லப்பட்டதில் இந்தியாவின் பங்களிப்பு இருப்பதாகவும், அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் குற்றம்சாட்டிய கனடா பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ, இப்படுகொலையை கனடாவின் இறையாண்மை மீதான இந்தியாவின் தாக்குதல் என்றும் குறிப்பிட் டார். அவரது குற்றச்சாட்டை மறுத்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், "இந்தியா சட்டதிட்டங்களை மதித்துச் செயல்படும் நாடு. இந்தியாவை குற்றஞ்சாட்டும் கனடாதான் காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவளிக்கிறது'' என்று பதிலடி கொடுத்தார். இதன் எதிர் நடவடிக்கையாக, கனடாவிலுள்ள இந்தியத் தூதரக அதிகாரி பவன்குமார் ராயை உடனடியாக கனடாவை விட்டு வெளியேற வேண்டுமென்று அந்நாட்டு பிரதமர் சார்பாக வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி அறிவித்தார். உடனடியாக பதிலடி கொடுத்த இந்தியா, டெல்லியிலுள்ள கனடா நாட்டு அதிகாரி ஒலிவியர் சில்வஸ்டர் மற்றும் கனடா தூரதரகத்திலுள்ள கேமரூன் மேக்கே ஆகியோரை ஐந்து நாட்களுக்குள் இந்தியா வை விட்டு வெளியேற வேண்டுமென்று கெடு விதித்தது. இதையடுத்து கேமரூன் மேக்கேவ் உடனடியாக கனடாவுக்கு சென்றுள்ளார்.

இவ்விவகாரம் குறித்து, அமெரிக்க தரப்பில் வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் அட்ரியன் வாட்சன், "கனடா பிரதமர் ட்ரூடோவின் குற்றச்சாட்டைக் கேட்டு கவலையடைகிறோம். இவ்விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை சட்டத்தின்முன் நிறுத்தவேண்டியது அவசியம்'' எனக் குறிப்பிட்டுள்ளார். தூதரகங்களுக்கிடையிலான மோதல்களுக்கு மத்தியில், செப்டம்பர் 21ஆம் தேதி, சுக்துல் சிங் என்ற இன்னொரு காலிஸ்தான் தீவிரவாதி கனடாவில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம், இரு நாடுகளுக்கிடைப்பட்ட பதட்டத்தை மேலும் அதிகரித்துள்ளது. கனடாவின் வின்னிபெக் நகரில் நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் இவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இரு நாடு களுக்கிடைப்பட்ட நல்லுறவு பாதிக்கப்பட்ட சூழலில், கனடாவிலிருந்து இந்தியாவுக்கு வருவதற்கான அனைத்து விசா நடவடிக் கையையும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இந்தியா அறிவித்துள்ளது. கனடாவில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசிக்கும் சூழலில், இரு நாடுகளுக்கிடைப்பட்ட பதட்ட சூழல் இந்தியர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.