நாகர்கோவில் திட்டுவிளை யில், கேரளாவைச் சேர்ந்த 6-ஆம் வகுப்பு மாணவன் ஆதில் முகமது கொலையில் ஓராண்டாகியும் குற்றவாளியைக் கண்டறியாதது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கொல்லம் நிலமேல் பகுதியைச் சேர்ந்த நஜீம்-சுஜிதா தம்பதியினரின் மகனான ஆதில் முகம்மது, ஆண்டு விடுமுறைக்காக திட்டுவிளை பாட்டி வீட்டிற்கு வந்திருந்தபோது, கடந்த மே 6ஆம் தேதி, மணதிட்டை பாறை குளத்தில், பயங்கர வெட்டுக் காயத்துடன் கொல்லப்பட்டு மிதந்த சம்பவத்தில், இதுவரை குற்றவாளி யாரென்ற மர்மம் தொடர்கிறது.
ஆதில் முகம்மதுவின் தாய்மாமன் சுனில் கூறுகையில், "மே 6-ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு வீட்டில் டி.வி. பார்த்துக்கொண்டிருந்த ஆதில் முகம்மதுவை, அஸீஸ்தான் விளையாட அழைத்துச் சென்றான். மாலை 5.30 மணிக்கு அஸீஸ் மட்டும் தனியா நடந்துவந்தான். ஆதில் முகம்மது எங்கேன்னு கேட்டபோது திருதிருனு முழிச்சிட்டு முன்னுக்குப் பின் முரணா பேசினான். 'மொபைல் கேம் ப்ரண்ட் ஒருத்தனோடு ஆதில் போனான்', 'இறச்சகுளத் தில் ஒரு கோவிலில் சாமியாட்டம் பார்க்கப் போனான்' என மாற்றி மாற்றிப் பேசினான். ஆதில் பிணமாக மீட்கப் பட்ட பிறகு, போலீஸ் விசாரணையில், "குளத்தின் அருகில் உட்கார்ந்து இரு வரும் மாங்காய் தின் னோம். மிளகுப் பொடி ஆதிலின் பனியனில் பட்டதால் அதைக் கழுவ குளத்துக்குச் சென்றான். மீன் வளர்க்க முட்டை பாசி எடுக்க குளத்துக்கு போனான்...' என்றும் முரணாகக் கூறினான். ஆதிலின் செருப்பு குறித் தும் முரண்பாடாகப் பேசினான். ஆதிலின் பாடி கிடைத்தபோது துபாயி லிருந்து வந்த அஸீஸின் தந்தையோ, திருவிதாங்கோட்டில், முக்கிய போலீஸ் அதிகாரிகளுக்கு நெருக்கமான உறவினரின் வீட் டில் மட்டும் இரு நாட்கள் இருந்துவிட்டுச் சென்றார்'' என்றார்.
ஆதில் முகம்மதுவின் தந்தையும் கேரளா காங்கிரசின் முக்கிய பிரமுகருமான நஜீம் நம்மிடம், “"போலீசாரின் விசா ரணை திருப்தியில்லாததால் கேரள சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சதீஷன், அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் எம்.பி. ஆகியோர் இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினர். முதல்வர் பினராய் விஜயனை யும் நேரில் சந்தித்து முறையிட் டேன். அதன்பிறகும் விசா ரணையில் ஒரு சதவிகிதம்கூட முன்னேற்றமில்லை. இதனால் மீண்டும் முதல்வர் பினராய் விஜயனின் செயலாளர்களின் கவனத்துக்கு கொண்டு சென் றோம். தமிழக முதல்வரின் முதன்மைச் செயலாளர் உதய சந்திரனிடம் முறையிட்ட பின், சி.பி.சி.ஐ.டி.க்கு வழக்கு மாற் றப்பட்டது. எனினும் இதுவரை குற்றவாளியைக் கண்டறிய வில்லை. இன்னும் எஃப்.ஐ.ஆர். கூட பதியவில்லை. என் மகன் இனி உயிரோடு வரப்போற தில்லை என்றாலும் யார் கொலை காரன்னு தெரிஞ்சுக்கத்தான் போராடுறோம்'' என்றார்.
சி.பி.சி.ஐ.டி. போலீசாரோ, "முதற்கட்ட விசாரணை முடிந்துவிட்டது. இரண்டாம் கட்ட விசாரணையில் குற்ற வாளியை உறுதிப்படுத்தி விடு வோம்''’என்றனர்.