கொடநாடு கொலை வழக்கின் புலன்விசாரணை வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. கடந்த வாரம் இந்த வழக்கின் சேலம் பகுதியில் நடந்த விவகாரங்களைக் கவனிக்க மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர், சேலம் சரக டி.ஐ.ஜி. மகேஸ்வரி, எஸ்.பி. அபினவ், ஆத்தூர் பகுதி டி.எஸ்.பி. ஆகியோர் அடங்கிய டீம் களமிறங்கியது. அவர்கள் முதலில் தூக்கியது ரமேஷ் என்கிற நபரை.
கனகராஜின் சித்தி மகன்தான் இந்த ரமேஷ். ரமேஷின் வீட்டருகே உள்ள ஆத்தூர்- பெரம்பலூர் நெடுஞ்சாலையில்தான் கொடநாடு கொள் ளையில் சம்பந்தப்பட்ட கனகராஜ் இறந்துகிடந் தார். அவரை கடைசியாக உயிருடன் பார்த்தவர். இவரிடம் ஏற்கனவே நக்கீரன் பேட்டி எடுத்தது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kondanadu_1.jpg)
"விபத்து நடந்த அன்று என் வீட்டிற்கு வந்த கனகராஜ், குடிப்பதற்காக அருகிலுள்ள ஒயின் ஷாப் பாருக்குச் சென்றார். குடித்துவிட்டு 70 கி.மீ. வேகத்தில் வந்த கனகராஜ், சர்வீஸ் ரோட்டிற்கு செல்ல முயன்றார். எதிரே பெங்களூரூவைச் சேர்ந்த மல்லிகா நல்லுசாமியின் காரை ஆத்தூருக்குப் பக்கத்தில் உள்ள தம்மம்பட்டியைச் சேர்ந்த ரபீக் ஓட்டிவந்தார். அந்தக் காரில் கனகராஜ் மோதி இறந்தார். அவர் இறந்ததை நான் பார்த்தேன். அதிக வேகத்தில் காரில் மோதி, காரின் மேல்புறம் விழுந்த கனகராஜ், காரின் பின்புறம் பல்டியடித்து விழுந்தார். அவர் பக்கவாட்டில் செல்போன் விழாமல் இருந்தது. அதை நான் சில நாட்கள் கழித்து போலீசாரிடம் கொடுத்தேன்'' என்ற அவர், அதற்குத் துணையாக கனகராஜின் அண்ணன் தனபால் உதவி செய்தார் என்றார்.
தனபாலிடம் நக்கீரன் பேட்டி எடுத்தபோது, அவர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான அவரது உறவினர் பணிக்கனூர் பன்னீர்செல்வம் மூலமாக பணம் பெற்று, இருவரும் சேர்ந்து கோடிக்கணக்கான ரூபாய் கட்டிடங்களும், நிலமும் வாங்கிப் போட்டிருக்கிறார். அதற்காக கனகராஜின் மனைவி கலைவாணியை எடப்பாடிக்கு ஆதரவாக பேட்டி கொடுக்கச் சொல்லி மிரட்டினார். கனகராஜின் செல்போனில், கனகராஜ் கொடநாடு சம்பவத்தின்போது எடப்பாடியிடம் பேசிய பேச்சுகள் தொடர்பான தகவல்களை அந்த போனை மறைத்து வைத்து அழித்தார். இவை தொடர்பான கேள்விகளைக் கேட்டோம். அவர் அதை மறைத்தார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kondanadu1_0.jpg)
காரை கனகராஜ் மீது மோதிய டிரைவர் ரபீக்கும் காரின் உரிமை யாளரான மல்லிகா நல்லுசாமியும் எங்களுக்கு கனகராஜ் யார் என்றே தெரியாது என மறுத்தார்கள். இந்த வழக்கை விசாரிக்கும் போலீசார் நக்கீரனில் வெளிவந்த வீடியோ பேட்டி களை உன்னிப்பாக கவனித்தார்கள். ரமேஷ், தனபால், ரபீக், மல்லிகா ஆகியோர் சொல்வது உண்மையா? என ஆராய்ந்தார்கள். கனகராஜ் சாலை விபத்தில் இறந்த பிறகு ரமேஷ் வசதியானவ ராகிவிட்டார். பல லட்ச ரூபாயில் வீடு, தொழில் நடத்த டிராக்டர்கள், ஃபைனான்ஸ் தொழில், அ.தி.மு.க.வில் பதவி என ஆத்தூர் அ.தி.மு.க. செயலாளர் மோகன், ஒன்றியச் செயலாளர் ரஞ்சித், எடப்பாடிக்கு நெருக்கமான இளங்கோவன் என கட்டப்பஞ்சாயத்து நடத்தி வந்தார். எந்த வேலையும் இல்லாத கனகராஜின் அண்ணன் தனபால், கனகராஜ் மறைவுக்குப் பிறகு காரில்தான் ஊரில் சுற்றிவந்தார்.
இப்படி ஒட்டுமொத்தமாக கனகராஜின் குடும்பமே அவர் மறைவைப் பற்றி கவலைப்படாமல் இருந்தனர். எடப்பாடி தரப்பிடம் பணம் கேட்டபொழுது சரியாகத் தரவில்லையென்றால் கனகராஜின் சாவுக்கு எடப்பாடிதான் காரணம் என அ.ம.மு.க. பிரமுகருடன் சேர்ந்து மிரட்டிவந்த தனபால், இறுதியாக ஆட்சி மாறியதும், தி.மு.க.வில் சேர, சண்முகசுந்தரம் என்பவர் மூலம் முயற்சி செய்துவந்தார்.
இவை தொடர்பான நக்கீரன் செய்திகளை ஒரு ஆவணமாக எடுத்துக்கொண்ட காவல்துறை, உண்மையில் கனகராஜ் இறந்தது எப்படி, ரமேஷ் எப்படி அங்கு வந்தார் என விசாரித்தது.
கனகராஜ் இறந்த அன்று, ரமேஷுடன் அமர்ந்து பார் ஒன்றில் குடித்தார். அங்கே வந்த எடப்பாடியின் நிழலான இளங்கோவனின் அடியாட்கள், அவரை பாரிலேயே கொலை செய்ய துரத்தினார்கள். கனகராஜை கொன்றுவிட்டு அதை விபத்தாக மாற்றினார்கள். அவர்கள் கொலைக்குப் பிறகு தேடியது கனகராஜின் செல்போனை. அதை பத்திரமாக போலீசார் கைக்கு கொடுக்காமல் அதிலிருந்த தடயங்களை அழித்த பிறகு ரமேஷ் மற்றும் தனபால் மூலம் போலீசார் பெற்றுக்கொண்டார்கள் என, கனகராஜின் மனைவி கலைவாணி உட்பட பலரிடம் பின்புல கதைகளாக கேட்டு உறுதி செய்துகொண்ட பின், சமுத்திரம் கிராமத்திலிருந்து தன பாலையும் ஆத்தூரிலிருந்து ரமேஷை யும் தூக்கினார்கள். இதற்கு நடுவே லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனைக்குள்ளான இளங்கோவனிடமும் விசாரித்தார்கள்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kondanadu2_0.jpg)
ரமேஷும் தனபாலும், கனகராஜ் விபத்தில் சாகவில்லை என ஒத்துக் கொண்டார்கள். கொலை செய்துதான் விபத்து என்ற நாடகம் நடத்தப்பட்டது என்றும், கனகராஜின் செல்போனில், கொடநாடு கொள்ளையின்போது பேசிய விவரங்களை அழித்து, அதை போலீசுக்குத் தராமல் மறைத்ததை ஒப்புக்கொண்டார்கள். ஆனால் இதையெல்லாம் யாருக்காக செய்தார்கள். இந்தச் செயலை செய்வதற்கு எடப்பாடி அல்லது இளங்கோவன் பணம் கொடுத்தாரா என்பதை மட்டும் சொல்ல மறுத்துவிட்டார்கள்.
மூன்று நாட்கள் கடுமையான விசாரணையில் அவர்கள் செய்த குற்றங்களை ஒத்துக்கொண்டார்கள். ஆனால் அதன் பின்னணி பற்றி வாய் திறக்க மறுத்து விட்டார்கள். எல்லாவற்றையும் செய்யச் சொல்லி தனபால் சொன்னார், நான் செய்தேன் என ரமேஷும், நான்தான் செய்யச் சொன்னேன் என தனபாலும் ஒத்துக்கொண்டார்கள்.
தற்பொழுது விசாரணையை அந்த அளவிலேயே நிறுத்திக்கொண்ட போலீசார், இளங்கோவனின் திருச்சி கல்லூரியில், கொடநாட்டில் ஜெ. பூஜை செய்த வெள்ளியிலான லட்சுமி சிலை எப்படி வந்தது என அவரிடம் தோண்ட ஆரம்பித்தனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kondanadu3.jpg)
இந்த வழக்கில் கால்வாசி கிணறு தாண்டிவிட்டோம். விசாரணையில் ரமேஷும் தனபாலும் எடப்பாடியின் பெய ரைச் சொல்லவில்லை. ஆனால் அவரது நிழலான சேலம் இளங்கோவனுக்கும் கொடநாடு கொள்ளையில் உள்ள தொடர்பு பற்றி நிறைய தகவல்களைச் சொல்லவிருக் கிறார்கள். இதுவரை விபத்து வழக்காக இருந்த கனகராஜ் மரணம், கொலை வழக்காக மாறுகிறது. அத்துடன் ரமேஷை யும் தனபாலையும் முக்கிய வழக்கான கொடநாடு வழக்கிலும் சேர்க்க யோசித்துக் கொண்டிருக்கிறோம் என்கிறார்கள் காவல்துறையைச் சேர்ந்தவர்கள்.
ஒட்டுமொத்தமாக சேலம் ஆத்தூரிலுள்ள அ.தி.மு.க. பிரமுகர்கள், அப்போது வேலை பார்த்த போலீசார், ரவுடிகள், சேலம் இளங்கோவன், வழக்கறிஞர்கள் என குற்றவாளிகள் பட்டியல் நீளுகிறது. தனபாலையும் ரமேஷையும் கஸ்டடியில் விசாரிக்கும்போது எல்லா உண்மைகளும் வரும் என்ற நிலையில்... அவர்கள் இருவரையும் போலீஸ் கஸ்டடிக்கு அனுப்பக்கூடாது என உயர்நீதிமன்றத்தில் பெரிய வழக்கறிஞர் படையையே எடப்பாடி இறக்கியிருக்கிறார்.
கொடநாட்டில் கொள்ளையடித்த பொருட்களை இளங்கோவன் மூலமாக கனகராஜ் கொடுத்திருக்கிறார். அந்த வேலை முடிந்ததும் அவரை தீர்த்துக்கட்டியிருக் கின்றனர். இந்தக் கொலையை விபத்தாக்கிய போலீசார், போஸ்ட்மார்ட்டம் செய்த டாக்டர், விபத்துக்குள்ளான காரின் உரிமையாளர் மல்லிகா, கனகராஜ் ஓட்டிவந்த பைக்கின் உரிமையாளர் என அனைவருக்கும் சம்மன் அனுப்பி விசாரிக்க முடிவு செய்துள்ள போலீசார், 2019-ஆம் ஆண்டில் மூடப்பட்ட ஃபைலைத் திறந்து, விசாரித்து, இரண்டு வருடம் கழித்து புதிய ரத்தத்தைப் பாய்ச்சியிருப்பது, ஒட்டு மொத்த தமிழகத்திலும் அதிர்ச்சி கலந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-10/kondanadu-t_0.jpg)