"தமிழக அரசியலில் உள்ள அழுக்கு களை சுத்தம் செய்யும் கட்சி பா.ஜ.க.' என திராவிட இயக்கங்களின் தவறுகளை சுட்டிக்காட்டி வந்த பா.ஜ.க., ஒரு ஊழல் பெருநெருப்பில் சிக்கித் தவிப்பதாக கட்சியின் சீனியர் தலைவர் ஒருவர் பிரதமர் மோடியிடமும் அமித்ஷாவிடமும் சீரியஸாக பேசிவருகிறார். அவர் இல.கணேசன். அவர் எழுப்பும் குற்றச்சாட்டுக்களுக்கு பா.ஜ.க.வின் ஒட்டுமொத்த சீனியர்களும் ஆதரவு தெரிவிக்கிறார்கள். "இல.கணேசன் பேசுவது மிகச் சரி என வானதி சீனிவாசன் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு எழுத்துப்பூர்வமாகவே புகார் கடிதம் அனுப்பியிருக்கிறார்' என்கிறது பா.ஜ.க. வட்டாரங்கள்.
அண்ணாமலை மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டபோதே கடும் எதிர்ப்பு தெரிவித்தவர் இல.கணேசன். "பா.ஜ.க.வின் எத்தனையோ சீனியர் தலைவர்கள் இருக்கும்போது எப்படி நீங்கள் புதிதாக வந்த ஒருவருக்கு மாநிலத் தலைவர் பதவி கொடுப்பீர்கள்?' என கட்சியின் தேசிய பொறுப் பாளர் பி.எல்.சந்தோஷிடம் நேரடியாக கேள்வி கேட்டவர் இல.கணேசன். அந்த கோபத்தால் சமீபத் தில், இல.கணேசன் இல்ல விழாவில் மு.க.ஸ்டா லின், மம்தா பானர்ஜி ஆகியோர் கலந்துகொண்ட நிலையில்... அந்த விழாவை அண்ணாமலை புறக்கணித்தார். இப்பொழுது "இல.கணேசன், அண்ணாமலையை பழிவாங்க கங்கணம் கட்டிக்கொண்டு களத்தில் குதித்திருக்கிறார்' என்கிறார்கள் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள்.
இல.கணேசன் எழுப்பும் குற்றச்சாட்டுக்கள் மிகவும் சீரியஸானவை. அதை அவர் தமிழக ஆளுநர் ரவியின் உதவியுடன் திரட்டியிருக்கிறார். அதில் முக்கிய இடம் பெறுபவர் அண்ணாமலை யின் ஆல் இன் ஆல் ஆன அமர் பிரசாத் ரெட்டி. சமீபத்தில் தமிழக அரசு, ராஜசேகர், ஹரீஷ், மைக் கேல் ராஜ், வேத நாரா யணன், ஜனார்த்தனன், மோகன்பாபு, லட்சுமி நாராயணன், அலெக்சாண் டர், சௌந்தரராஜன் உட்பட பத்து பேரை தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்தது. இதில் ராஜசேகர் சென்னை வில்லிவாக்கததைச் சேர்ந்தவர். ஹரீஷ் காஞ்சிபுரம் சித்திவிநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர். மைக்கேல்ராஜ் விருதுநகரைச் சேர்ந்தவர். நாராயணன் சென்னையைச் சேர்ந்தவர்.
இந்த நாலுபேரும் ஆருத்ரா தங்க நகை கடன் திட்டம் என்ற பேரில் ஒன்பதாயிரத்து இருநூற்றி ஐம்பத்தி ஐந்து பேரிடம் இரண்டா யிரத்து நானூற்றி முப்பத்தெட்டு கோடி ரூபாய் வசூலித்துவிட்டு, அந்தப் பணத்தோடு தலைமறை வானவர்கள். இதுதவிர, ஒஎந என்கிற நிதி நிறு வனத்தின் மூலம் ஒரு லட்சம் பேரிடம் ஆறாயிரம் கோடி ரூபாயை நான்குபேர் ஏமாற்றியிருக்கிறார் கள். ஐஒஓஆய என்கிற நிதிநிறுவனம் மூலம் நாலா யிரத்து ஐநூறு பேரிடம் அறுநூறு கோடியை இரண்டுபேர் ஏமாற்றி இருக்கிறார்கள். மொத்தம் ஒன்பதாயிரம் கோடி ரூபாயை தமிழக மக்களிடம் ஏமாற்றியிருக்கிறார்கள். இவர்களை தேடப்படும் குற்றவாளிகளாக தமிழக அரசின் பொருளாதாரக் குற்றப்பிரிவு அறிவித்திருக்கிறது. இதில் ஹரீஷ் என்பவர் "ஆருத்ரா கோல்ட் டிரேடிங் கம்பெனி' என்கிற மோசடி நிறுவனத்தின் டைரக்டராக இருக்கிறார். இந்த ஹரீஷ், மே மாதம் 26ம் தேதி பிரதமர் சென்னை வந்தபோது அவரை வரவேற்கும் குழுவில் நியமிக்கப்பட்டிருந்தார். பா.ஜ.க.வின் விளையாட்டு மற்றும் திறமை வளர்ச்சிக் குழுவின் சார்பில் பிரதமரை வரவேற் கும் குழுவில் இடம் பெற்றிருந்தார். ஆனால், "ஹரீஷ், பொதுமக்களிடம் பணத்தைப் பெற்று ஏமாற்றினார்' என மே 24ம் தேதியே தலைமறைவாகிவிட்டார். அவர்மீது மே முதல் வாரத்திலேயே மோசடி வழக்கு பதியப்பட்டது. அதை ஒரு அரசியல்ரீதியான பழிவாங்கும் நடவடிக்கை என தமிழக பா.ஜ.க. அறிவித்தது.
விளையாட்டுப் பிரிவின் தமிழகத் தலைவர், அண்ணாமலைக்கு நெருக்கமான அமர்பிரசாத் ரெட்டி. அவரிடம் "தேடப்படும் குற்றவாளியான ஹரீஷ் எப்படி பிரதமரை வரவேற்கும் கமிட்டியில் இடம்பெற்றார்' என கேட்டபோது, "“ஹரீஷ் ஒரு விளையாட்டு வீரர். அவர் தமிழ்நாடு கிக் பாக்சிங் அசோசியேஷனின் மாநிலத் தலைவர். அது மத்திய மற்றும் மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அமைப்பு. அதனால் அவர் பா.ஜ.க.வின் விளையாட்டுப் பிரிவின் மாநில நிர்வாகியாக சேர்க்கப்பட்டார். அந்த அடிப்படையில் பிரதமரை வரவேற்கும் கமிட்டியிலும் இடம்பெற்றார்''’என விளக்கம் அளித்தார்.
இந்த அமர்பிரசாத் ரெட்டி ஏற்கெனவே சிறுவாச்சூர் கோவில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டிருக்கின்றன என்று அந்த சிலைகளை புனரமைக்க பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் நிதி வசூல் செய்த கார்த்திக் கோபிநாத் என்பவரை ஆதரித்தார். “"பா.ஜ.க. நிர்வாகியான கார்த்திக் கோபிநாத் வசூலித்த நிதி எங்களுக்குத் தேவையில்லை'’என இந்து சமய அறநிலையத்துறை சமீபத்தில் சென்னை உயர்நீதி மன்றத்தில் அறிவித்துவிட்டது. அந்த சிலைகளை நல்லபடியாக தமிழக அரசே சீரமைத்து விட்டது. சிலைகள் சேத மடைந்துவிட்டது என வசூலித்த பணத்தை தமிழக அரசு ஏற்க மறுத்துவிட்டது. இதுதவிர மத்திய அமலாக்கத் துறை "நாலாயிரம் கோடி ரூபாய்க்கு தங்க மோசடி செய்தார்' என வழக்குப்பதிவு செய்துள்ள ‘ரன்வி சுரானா வுக்குச் சொந்தமான கட்டி டத்தில்தான் பா.ஜ.க.வின் தமிழகப் பிரிவின் ஐ.டி.விங் செயல்பட்டு வருகிறது.
இப்படி ஆயிரக்கணக் கான கோடிகளை பொது மக்களிடமிருந்து மோசடி செய்யும் நிதி நிறுவனங்கள் எல்லாம் தமிழக பா.ஜ.க.வின் பாதுகாப்பில்தான் இயங்கு கின்றன. இவற்றை எல்லாம் அண்ணாமலைக்கு நெருக்க மானவர்கள் பாதுகாக்கின் றார்கள். அதில் முக்கிய மானவர் அமர்பிரசாத் ரெட்டி. இவர் தன்னை ஒரு பேராசிரியர் என்று சொல் லிக்கொள்கிறார். மத்திய சுகாதாரத்துறை அமைச்ச ருக்கு அட்வைசராக இருந்ததாக சொல்லி, மத்திய அரசின் அடை யாளத்தோடு விசிட்டிங் கார்டு போட்டிருக்கிறார். இதுபோல "பொதுமக்களை ஏமாற்றும் நிதி நிறுவனங்களை தமிழக பா.ஜ.க. காப்பாற்றும்' என அந்த நிறுவனங்களுக்கு தமிழக பா.ஜ.க. சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
"தலைமறைவான ஹரீஷ், செங்கல்பட்டைச் சேர்ந்த ஒரு ரகசிய நண்பர் மூலம் அமர்பிரசாத் ரெட்டியிடம் டீலிங் வைத்திருக்கிறார்' என சொல்லப்படுகிறது. அண்ணாமலை இதுபோல பலரிடம் சட்டவிரோதமாக பண வசூல் செய்துவருகிறார். அதனால் சீனியர் தலைவர்கள் யாரையும் அவர் மதிப்பதில்லை. அமர்பிரசாத் ரெட்டி, திருச்சி சூர்யா போன்ற சிலர் அண்ணாமலையின் பேரைச் சொல்லி சீனியர் தலைவர்களை ஓரம்கட்டி வருகிறார்கள். சமீபத்தில் திருச்சி சூர்யா, மைனாரிட்டி பிரிவுத் தலைவர் டெய்சியிடம் மிகவும் ஆபாசமாக பேசினார். அதை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கேள்வி கேட்டது. "திருச்சி சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என ஆர்.எஸ்.எஸ்.அமைப்பு வலியுறுத்தியது. "சூர்யா மீது நடவடிக்கை எடுக்க மாட்டேன்; வேண்டு மென்றால் நான் ராஜி னாமா செய்துவிடு கிறேன்'’என்று அண் ணாமலை அடம்பிடித் தார். இறுதியில் பொன். ராதாகிருஷ்ணன், கேசவ விநாயகம், வானதி சீனிவாசன் உட்பட சீனியர் தலைவர்கள் தேசியத் தலைமையிடம் கோரிக்கை வைத்த பிறகுதான்... சூர்யா சிவா மீது நடவடிக்கை எடுக்கப் பட்டது. இப்படி "சீனியர் தலைவர்கள் ஒருமுகமாகவும் அண்ணாமலையின் அடி வருடிகள் ஒரு முகமாகவும் பா.ஜ.க. இரண்டாகப் பிளந்து கிடக்கின்றது' என இல.கணேசன் பிரதமரிடமும் அமித்ஷாவிடமும் நேரடி யாக புகார் தெரிவித் திருக்கிறார்.
இந்தத் தகவலைக் கேள்விப்பட்ட காயத்ரி ரகுராமும், கே.டி.ராகவனும் பா.ஜ.க.வின் தலைவர் களை சந்தித்து, "அண்ணாமலைக்கு எதிராக இல.கணேசன் எழுப்பும் புகார் உண்மையானது' எனக் கூறிவருகிறார்கள். இப்படி அண்ணாமலைக்கு எதிராக பா.ஜ.க.வில் வீசும் அனல்காற்றில் பாதிக் கப்பட்டு அண்ணாமலைக்கு ஜுரம் வந்துவிட்டது. அவர் மிகவும் நொந்து நூலாகிப் போய்விட்டார். முதல்கட்டமாக, "காயத்ரி ரகுராம் மீதான ஒழுங்கு நடவடிக்கையை நான் ரத்து செய்துவிடுகிறேன்' என அவரை எதிர்க்கும் சீனியர் தலைவர்களிடம் சமாதானத் தூது அனுப்பியிருக்கிறார். பா.ஜ.க.வின் இமேஜை உயர்த்த பி.எல்.சந்தோஷ் என்கிற தேசிய தலைவரால் நியமிக்கப்பட்ட அண்ணாமலையின் செயல்பாடுகள், அவரது அடிப்பொடிகளால் அதலபாதாளத்துக்கு சென்றுகொண்டிருக்கின்றது. அதைக் காப்பாற்ற சீனியர்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றிபெறுமா என்பதுதான் பா.ஜ.க.வில் எழுந்திருக்கும் கேள்வி!