அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக உரிமையியல் நீதிமன்றம், அதை நடத்த தடையில்லை என எடப்பாடிக்கு க்ரீன் சிக்னல் கொடுத் தது. அதேநேரத்தில் உயர்நீதிமன்றத்தில் நீதியரசர் கிருஷ்ணன் ராமசாமி, "பொதுக்குழுவுக்கு தடை விதிக்க முடியாது, பொதுக்குழு என்பது ஒரு கட்சியின் தனிப்பட்ட விவகாரம், அதில் கோர்ட் தலையிட முடியாது' என இரவு ஏழரை மணிக்கு தீர்ப்பளித்தார்.

admkGMmeet

Advertisment

உடனடியாக ஓ.பி.எஸ். டீம், நீதியரசர் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் தலைமையிலான பெஞ்சை அணுகியது. அவர்கள், "பொதுக்குழு வில் நீதிமன்றம் தலையிடலாம். ஓ.பி.எஸ். கையெழுத்துப் போட்ட 23 தீர்மானங்களைத் தவிர, வேறு தீர்மானங்கள் பற்றி விவாதிக்கலாம், ஆனால் அதுபற்றி எந்த முடிவும் எடுக்கக்கூடாது'' என தீர்ப்பளித்தார் கள். இத்தனைக்கும் ஓ.பி.எஸ். ஸுக்காக மனோஜ்பாண்டியனின் சகோதரர் அரவிந்த் பாண்டியன் வாதாடினார். இ.பி.எஸ்.ஸுக்காக ராஜகோபால், முன்னாள் அட்வகேட் ஜெனரல் விஜயநாராய ணன் ஆகியோர் கோர்ட்டில் வாதாடினார்கள். அவர்களது வாதம் எடுபடவில்லை. இந்தத் தீர்ப்பு வந்தபோது அதிகாலை நாலரை மணி. 23-ஆம் தேதி பத்து மணிக்கு பொதுக்குழுவைக் கூட்டிவிட்டு, அதில் பொதுச்செயலாளர் எடப்பாடி என முடிவு செய்துவிட்டுக் காத்திருந்த எடப்பாடிக்கு இந்த தீர்ப்பு பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது.

எடப்பாடி கடுகடுவென வழக்கறிஞர்களிடம் கோபத்தைக் காட்டினார். அதன்பிறகு எடப்பாடிக்கு நெருக்கமான முன்னாள் நீதியரசர் சதாசிவத்திடம் ஆலோசனை செய்தார். அவர் "இந்த பொதுக்குழுவில் ஓ.பி.எஸ். முன்மொழிந்த தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டாம், மீண்டும் ஒரு பொதுக்குழுவை அடுத்த மாதம் கூட்டுங்கள். அதில் ஒற்றைத் தலைமை குறித்த தீர்மானங்களை நிறைவேற்றுங்கள்'' என சொன்னார். "அது நீதிமன்ற அவமதிப்பாகாதா?' என எடப்பாடி கேட்டார்.

Advertisment

dadmkGmeet

"இந்தத் தீர்ப்பு இப்போது நடக்கும் பொதுக்குழுவுக்குத்தான் பொருந்தும். அடுத்த மாதம் நடக்கப்போகும் பொதுக்குழுவுக்குப் பொருந்தாது. அந்தப் பொதுக்குழுவுக்காக மறுபடியும் ஓ.பி.எஸ். நீதிமன்றங்களை நாட வேண்டும். இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்வதை விட புதிய பொதுக் குழுவை நடத்துவது நல்லது'' என சதாசிவம் ஆலோசனை சொன்னார்.

அந்த ஆலோசனையைக் கேட்டு முடித்து விட்டு எடப்பாடி காலை 8:00 மணிக்கு வீட்டிலிருந்து பொதுக்குழுவுக்குப் புறப்பட்டார். அவர் வழிநெடுக வரவேற்புகளை நின்று நிதானித்து பெற்றுக்கொண்டு வருவதற்குள் மணி 11:00-ஐ தாண்டிவிட்டது. தி.நகர் சத்யா, வடசென்னை லட்சுமிநாராயணன் ஆகியோர் பாதுகாப்பில் மண்டபத்திற்குள் நுழைந்த எடப்பாடி, கடுகடுவென முகத்தை வைத்திருந்தார்.

இரங்கல் தீர்மானத்தை தமிழ்மகன் உசேன் தவறாகப் படிக்க, அவரை மேடையிலேயே எடப்பாடி திட்டினார்.

இத்தனைக்கும்... பொதுக்குழு முழுவதிலும் எடப்பாடியின் ஆட்கள்தான் நிறைந்திருந்தனர். வழக்கமாக ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் யார் வந்தார்கள் என மாவட்ட வாரியாக ஸ்கேன் செய்து அடையாள அட்டைகளை பொதுக்குழு மண்டபத்தில் வழங்குவார்கள். இந்த முறை மண்டபத்திற்குள் வரும்போதே அடையாள அட்டையுடன்தான் பொதுக்குழு உறுப்பினர்கள் நுழைந்தார்கள். எந்தவிதமான ஸ்கேனும் அதற்கான மாவட்ட வாரியான பதிவேடுகளும் அங்கு காணப்படவில்லை. அதேபோல் எடப் பாடிக்கு வரவேற்பு கொடுத்தது காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம் போன்ற வட மாவட்டங் கள்தான். சென்னை மாவட்டம் முழுவதுமாக வரவேற்பில் மிஸ்ஸிங்காக இருந்தது.

admkGmeet

பொதுக்குழு முழுவதையும் "நியூஸ் ஜெ' தொலைக்காட்சி லைவ்வாக கவர் செய்தது. மற்ற தொலைக்காட்சிகள் லைவ்வுக்குப் போகவில்லை. வந்தவர்கள் எல்லாம் வட மாவட்ட தொண் டர்கள் மற்றும் எடப்பாடியின் ஆதரவாளர்கள். ஒருவர்கூட ஓ.பி.எஸ். வாழ்க என சொல்ல வில்லை. இருபுறமும் கருத்துக்கள் வராமல் எப்படி லைவ் செய்வது என மற்ற சேனல்கள் லைவ் நிகழ்வைப் புறக்கணித்து விட்டன.

இந்நிலையில்... ஓ.பி.எஸ். தைரியமாக பொதுக்குழு

வுக்கு வந்தார். அவருடன் வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன், ஜெ.சி.டி. பிரபாகரன், மனோஜ்பாண்டி யன் ஆகியோர் வந்தனர். ஓ.பி.எஸ்.ஸின் காரை பொதுக் குழு அரங்கத்தில் நிற்க வைக்க இ.பி.எஸ். ஆட்கள் மறுத்

தனர். இதையெல்லாம் மீறி ஓ.பி.எஸ். பொதுக்குழுவில் அமர்ந்திருந்தார்.

சி.வி.சண்முகம், ஒற்றைத் தலைமை குறித்து புதிய அவைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்மகன் உசேனிடம் கோரிக்கை கடிதத்தை வழங்க... அதை அவர் ஏற்றுக்கொண்டு புதிய பொதுக்குழு கூடும் நாளை அறிவிக்க, டென்ஷனான ஓ.பி.எஸ்., வெளிநடப்பு செய்தார். அவருடன் பெரும்பான்மையான அ.தி.மு.க. தொண்டர்கள் சைலண்ட்டாக வெளியே சென்றார்கள். பொதுக்குழுவில் ஓ.பி.எஸ். கலந்துகொண்டதும், வெளிநடப்பு செய்ததும் சட்டரீதியாக அடுத்தகட்ட நகர்வுக்காகத்தான் என்கிறார்கள் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள்.

gg

உடனடியாக சசிகலாவுடன் ஆலோசித்து விட்டு, பா.ஜ.க.வுடன் பேசிவிட்டு, தேர்தல் கமிஷனிடம் புகார் செய்ய ஓ.பி.எஸ். தரப்பு திட்டமிட்டுள்ளது. அடுத்த பொதுக் குழுவிற்குள் எடப்பாடிக்கு செக் வைக்க அனைத்து வேலைகளுடன் ஓ.பி.எஸ். தரப்பு தயாராகி வருகிறது. ஆனால் வெளிப்படை யாகப் பார்த்தால், ஜெ.வுக்கு வரும் ஆதரவை விட பிரம்மாண்டமான ஆதரவு எடப்பாடிக்கு இருப்பது போலத்தான் பொதுக்குழு காட்சிகள் அமைந்திருந்தன. இது உண்மை யான ஆதரவா? இல்லையா? என்பது போகப் போகத்தான் தெரியும் என்கிறார்கள் அ.தி.மு.க. தொண்டர்கள்.

படங்கள்: ஸ்டாலின், அசோக் & குமரேஷ்