தீப்பற்றி எரிகின்றன அமெரிக்காவின் பல நகரங்கள். பல இடங்களில் கருப்பினத்தவர் போராடிக்கொண்டிருக்கின்றனர். போராட்டங்களை முடிவுக்குக் கொண்டுவர வெள்ளை மாளிகை நடவடிக்கைகளை தொடர்ந்துகொண்டிருக்கின்றது. பல மாகாணங்களில் அதன் ஆளுநர்கள் போராட்டக்காரர்களை அமைதிப்படுத்தும் கோரிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றனர். கொரோனாவால் கடும் பாதிப்புக்குள்ளான அமெரிக்காவில் இன்னொரு பாதிப்பை உருவாக்கியிருக்கிறது, ஃப்ளாய்டு எனும் கறுப்பினத்தவரின் கஸ்டடி மரணம்.

d

இந்தியாவில் சாதியரீதியிலான அடக்குமுறை காலம் காலமாகத் தொடர்வதுபோல இன-நிற ரீதியிலான பேதங்கள் அமெரிக்காவில் நீடிக்கிறது. 46 வயதான ஜார்ஜ் ஃப்ளாய்டு, ஹூஸ்டனிலிருந்து மின்னபோலிஸ் நகருக்கு வேலைதேடி வந்தவர். அங்கே பவுன்சராக வேலைபார்த்து வந்தவருக்கு. கொரோனாவால் வேலை பறிபோன நிலையில் புதிய வேலை தேடிக்கொண்டிருந்தார். மே 25ந் தேதி வழக்கம்போல கப் ஃபுட்ஸ் கடையில் சிகரெட் பாக்கெட் வாங்கினார். அதற்காக அவர் கொடுத்த 20 டாலர், கள்ளநோட்டு என சந்தேகித்த பணியாளர் போலீஸுக்குத் தகவல்கொடுத்தார். சிகரெட் வாங்க வரும்போது மது அருந்தியிருந்ததாகவும், தன்னிலை மறந்து காணப்பட்டதாகவும் அந்த ஊழியர் கூறுகிறார். கள்ளநோட்டு என்பதால் சிகரெட் பாக்கெட்டைத் திரும்பக் கேட்டதாகவும், அப்படித் தராததால் போலிஸுக்குத் தகவல் தந்திருக்கிறார். ஆனால், கடை உரிமையாளரான மைக், நட்பான முகம் கொண்டவரென்றும், அவரால் கடையில் இதுவரை எந்த தொந்தரவும் வந்த்தில்லை என ஃப்ளாய்டு பற்றி செய்தி ஊடகம் ஒன்றுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

Advertisment

சற்றுநேரத்தில் அங்குவந்த போலீஸ் கார் நிறுத்துமிடத்தில் காணப்பட்ட ஃப்ளாய்டை அங்கிருந்து இழுத்து கைவிலங்கிட்டது. அதுகுறித்து எதிர்ப்புத் தெரிவித்த ஃப்ளாய்டிடம் கள்ளநோட்டைப் பயன்படுத்தியதற்காக அந்தக் கைது என விவரித்தது. அவரை போலீஸ் வேனில் ஏற்ற முயன்றபோது, ப்ளாய்டு ஏறமறுத்து அடம்பிடிக்க அப்போதுதான் டெரேக் ஜாவின் என்ற போலீஸ் அதிகாரி அங்குவந்தார். ப்ளாய்டைப் பிடித்திழுத்து தரையில் முகம்பதியும்படி அழுத்தினார். அத்துடன் ப்ளாய்டின் கழுத்தில் தனது கால்முட்டியை வைத்து அழுத்தியபடி

ஆக்ரோஷம் காட்டியிருக் கிறார். கிட்டத்தட்ட ஆறு நிமிட நேரம் நீடித்த இந்தப் போராட்டத்தில் பலமுறை ஃப்ளாய்டு தன்னால் மூச்சுவிட முடிய வில்லை, தயவுசெய்து என்னைக் கொன்றுவிடா தீர்கள் என மன்றாடி யிருக்கிறார். ஆனால் ஜாவின் அதைக் கண்டு கொள்ளவில்லை.

அங்கு கூடியிருந்தவர்கள் ஜாவினை, ப்ளாய்டின் கழுத்திலிருந்து காலை அகற்றும்படியும், அவரது நாடித்துடிப்பை சோதிக்கும்படியும் வற்புறுத்த, கடைசியில் ஜாவினுடன் வந்த ஜேஏ குயுங் என்ற அதிகாரிதான் அவரைச் சோதித்து விட்டு அவசரமாக ஆம்புலன்ஸில் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டுபோக ஏற்பாடு செய்திருக்கிறார். மருத்துவமனையில் ஃப்ளாய்டு இறந்துவிட்டதாக அறிவித்துவிட்டனர்.

Advertisment

போலீஸ் அதிகாரி ஜாவின் ப்ளாய்டின் கழுத்தில் கால்முட்டியை வைத்து அழுத்தியதை அங்கிருந்த பல மொபைல் போன்கள் படம்பிடித் திருந்ததால், சில நிமிடங்களில், அமெரிக்கா முழுவதையும் இந்த இதயம் பதைக்கவைக்கும் அநீதி ஒரு சுற்று சென்று சேர்ந்திருந்தது.

a

இந்த அநீதிக்கு எதிராக அமெரிக்காவின் 30-க்கும் அதிகமான நகரங்களில் போராட்டங்கள் வெடித்தன. சில இடங்களில் தீவைப்பாகவும், கொள்ளையாகவும், கடைகளின் மேலான தாக்குதலாகவும் வெடித்தது. ஃபளாய்டின் மரணத்துக்குக் காரணமான டெரேக் ஜாவின் மீது கொலைமுயற்சி வழக்கு பதியப்பட்டுள்ளது. அப்போது அங்கிருந்த வேறு சில அதிகாரிகளும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

லாஸ் ஏஞ்சல்ஸ் போராட்டத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியா மாகாணம் அவசரநிலை பிரகடனம் செய்துள்ளது. பல இடங்களில் ரப்பர் புல்லட்டுகளும், லத்தி சார்ஜும் போராட்டக்காரர்களை பதம் பார்த்துள்ளன. நியுயார்க்கில் 20க்கும் அதிகமான போலீஸ் கார்கள் எரிக்கப்பட்டுள்ளன. சிகாகோ மேயர் லோரி, “காவலர்கள் மீது தண்ணீர் பாட்டில், பாட்டிலில் அடைக்கப்பட்ட சிறுநீர், இன்னும் சொல்லமுடி யாத அசிங்கங்கள் எல்லாம் வீசப்பட்டுள்ளன’’ என வருத்தம் தெரிவித்துள்ளார்.

மிக்சிகனின் ஃப்ளின்ட் நகரத்தில் நெஞ்சைத் தொடும் ஒரு விஷயம் நடந்திருக்கிறது. அந்நகரின் ஷெரிப்பான கிறிஸ் ஸ்வான்சன் தனது காவலர் களை ஹெல்மெட்டை நீக்கிவிட்டு லத்தி உள்ளிட்ட ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு, போராட்டக் காரர்கள் விரும்பினால் தங்களை என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம் என அறிவிக்க, போராட்டக்காரர்கள் மனம்நெகிழ்ந்து காவலர்களைத் தழுவி எதிர்ப்பு போராட்டத்தில் காவலர்கள் கலந்துகொண்டு தங்களுடன் நடந்துவருமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

சர்ச்சைக்குப் பேர்போன அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தனது ட்விட்டர் அறிக்கையொன்றில், ""நல்லவேளை போராட்டக்காரர்கள் வெள்ளை மாளிகை வேலியைத் தாண்டவில்லை. தாண்டி யிருந்தால் நாய்களையும் பயங்கர ஆயுதங்களையும் சந்திக்கவேண்டியிருந்திருக்கும்"" என கூறியிருக்கிறார். போலீஸ் அதிகாரி டெரக் மீது தேர்ட் டிகிரி கொலைக் குற்றச்சாட்டு பதியப்பட்டுள்ளது. ஃப்ளாய்டின் குடும்பத்தவர்கள் டெரக் மீது பர்ஸ்ட் டிகிரி கொலைமுயற்சி வழக்கு பதியப்படவேண்டுமென கூறுகிறார்கள். போஸ்ட்மார்ட்டம் அறிக்கையில் ஃப்ளாய்டின் உடலில் காணப்படும் போதைப் பொருளும் மரணத்திற்கு காரணமாயிருக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டிருப்பது, டெரக் குறைந்த தண்டனையுடன் நழுவ வழிவகுக்கும் என்கிறார்கள்.

அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த வர்கள் அநீதியாகக் கொல்லப்படுவது ஒன்றும் புதிதல்ல… ஒவ்வொரு பத்தாண்டுக்கும் ஒருமுறை இப்படி அநீதியாக ஒன்றிரண்டு பேர் காவல்துறையாலோ, இனவெறுப்பு மிகுந்த வெள்ளையர்களாலோ கொல்லப்படுவது வழக்கம்தான் என்கிறார்கள் அமெரிக்க வரலாற்றை உற்றுக் கவனித்து வரும் வரலாற்றாசிரியர்கள்.

-க.சுப்பிரமணியன்