மாணவி ஸ்ரீமதி மரண விவகாரத்தில் அப்பாவி இளைஞர்களைக் கைது செய்ததாகக் கூறி வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் கள்ளக்குறிச்சி யில் ஆகஸ்ட் 13-ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரி குலேஷன் பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரத்தில் நீதி கேட்டு நடைபெற்ற தொடர் போராட்டத்தில் காவல் துறையினரால் 320-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப் பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறியும், கலவரத்தில் சம்பந்தப்படாத அப்பாவி பட்டதாரி இளைஞர்கள் பலர் மீது காவல்துறையினர் பொய் வழக்கு போட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகக் கூறியும், மாணவி ஸ்ரீமதி மர்ம மரணத்திற்கு காரணமான உண்மையான குற்றவாளிகளைக் கைதுசெய்யக் கோரியும் கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.

tt

Advertisment

ஆயிரக்கணக்கான விடுதலை சிறுத்தை கட்சித் தொண்டர்கள் கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பங்கேற்று, கண்டன உரையாற்றினார். அப்போது அவர், "ஸ்ரீமதி மூன்றாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டிருந்தால் தலையில் பலத்த காயம் ஏற் பட்டிருக்கவேண்டும். தலை நொறுங்கி யிருக்க வேண்டும். சமூக ஊடகங்களில் மாணவி இறந்தபிறகு அவரை தூக்கிச் செல்லும் அனைத்துக் காட்சிகளும் வெளியாகும்பொழுது, அவர் மாடியிலிருந்து விழுந்த காட்சிகள் ஏன் வெளியாகவில்லை...?''’என கேள்வி எழுப்பினார்.

"சம்பவம் நடந்த அன்று பள்ளியிலிருந்த விடுதிக்காப்பாளர், பள்ளிக் காப்பாளர், வாட்ச்மேன் மற்றும் பள்ளித் தாளாளர் ஆகியோரை காவல்துறை முழுமையாக விசாரிக் காதது ஏன்?'' எனவும் கேள்வி எழுப்பினார். "ஸ்ரீமதியின் உயிரிழப்பு சம்பவம் கொலையாக இருந்தாலும் அல்லது தற்கொலைக்கு தூண்டப் பட்டிருந்தாலும் அதற்கு காரண மானவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதுசெய்வதோடு, வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி கைது செய்யப்பட்டுள்ள அப்பாவி இளைஞர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்யவேண்டும். ஸ்ரீமதியின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்குவதோடு அரசு வேலை வழங்க வேண்டும்''’என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

மாணவியின் மர்ம மரணத்திற்கு நீதி கேட்டு கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி வேப்பூரில், சி.பி.ஐ. சார்பில், உழைக்கும் பெண்கள் அமைப்பின் தலைவர் வகிதா நிஜாம் தலைமையில் நீதி கேட்டு கண்டன ஆர்ப்பாட்டமும் 5-ஆம் தேதி சி.பி.எம். கட்சியின் மாநில தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் மாணவியின் மரணத்தில் உரிய நீதி வேண்டும் எனக்கூறி போராட்டமும் நடைபெற்றது.

tt

Advertisment

மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலுள்ள முக்கிய நகரங்களில் சி.பி.ஐ. கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

வெப்பூர் ஆர்ப்பாட்டத்தில் பேசிய மாநில தலைவர் பாலகிருஷ்ணன், “"ஜூலை 17-ஆம் தேதி பள்ளியில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் குறித்தும் முறையான விசாரணையினை காவல்துறை மேற்கொள்ளவேண்டும். மாணவியின் மரணம் தொடர்பான தடயங்களை அழிக்கும் நோக்கத்தோடு இந்த வன்முறை திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளதாக வலுவான செய்திகள் உள்ளது

எப்படியிருந்தபோதிலும் நடைபெற்ற வன்முறை ஏற்புடையதல்ல. அதில் சம்பந்தப்பட்ட உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும். அதேசமயம், இந்த வன்முறையைக் காரணம் காட்டி சம்பந்தமில்லாத பலரை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. சம்பவத்தன்று ஊரில் இல்லாத பல இளைஞர்களையும், மாணவர்களையும் கைது செய்தது அவர்களது எதிர்கால வாழ்வை சீர்குலைத்துவிடும் என்பதையும் கவனத்தில் கொண்டு, அப்பாவிகளை விடுதலை செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்''’என்று பேசினார்.