"நடைபெறப்போகும் ராஜ்யசபா எம்.பி. தேர்தல் அ.தி. மு.க.வில் ஏகப்பட்ட விவாதங் களை கிளப்பியுள்ளது. வழக்கம் போல புகார்க் கடிதங்கள் தலை மைக்கும் மீடியாக்களுக்கும் பறந்தவண்ணம் இருக்கின்றது' என்கிறார்கள் அ.தி.மு.க. ர.ர.க்கள்.
அதில் முக்கியமானது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பற்றி ஏராளமான புகார்க் கடிதங்கள் பறக்கிறது. ஜெயக்குமார் எம்.எல்.ஏ. தேர்தலில் ராயபுரம் தொகுதியில் வெறும் 34,000 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். மு.க.ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூரில் போட்டியிட்ட ஆதிராஜா ராம் 35,000 வாக்குகள் பெற்ற நிலையில்... அவரை விட குறைவாக சென்னையிலேயே குறைந்த வாக்குகள் பெற்றவராக தோல்வியைத் தழுவினார். இவர் சமீபத்தில் உள்ளாட்சித் தேர்தலின்போது தி.மு.க. தொண்டர் ஒருவர் கள்ள ஓட்டு போட முயன்றார் என அவரது ஆடைகளைக் களைந்து தாக்கியதாக போலீசாரால் கைது செய்யப்பட்டார். அது, பொய்வழக்கு என அ.தி.மு.க., தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதனால் மாநிலம் முழுக்க கவனிக்கக்கூடிய தலைவராகி விட்டார்.
"நான் ராஜ்யசபா தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடப்போகிறேன். அடுத்து நான் எம்.பி. நடைபெறப்போகும் அ.தி.மு.க. பொதுக் குழுவில் கட்சியின் அவைத்தலைவராகிவிடுவேன். அதன்பிறகு ஒட்டுமொத்த சென்னையும் எனது கண்ட்ரோலில்தான் வரும். சென்னையில் நான் வைத்ததுதான் சட்டம்' என தனது ஆதரவாளர் களிடம் கூறிவருகிறார். அத்துடன் பத்திரிகை களில் தன்னுடைய படம் பெரிதாக வரும்படி பார்த்துக்கொள் கிறார். ஜெயக்குமார் வாழ்க என கோஷம் போடுவதற்காக அவரது ஆதரவாளர்கள் ஒவ்வொருவருக்கும் 300 ரூபாய் கொடுத்து ஆட்களைத் திரட்டுகிறார். இதுவரை தனது அரசியல் வாழ்வில் ஒரு பொதுக்கூட்டத்தைக்கூட தனது செலவில் நடத்தாதவர் ஜெயக்குமார். இப்பொழுது அ.தி. மு.க.வில் அசைக்க முடியாத தலைவர் போல நடந்துகொள் கிறார். இவர் எம்.பி., அவைத்தலைவர் என பதவிகளைப் பெற்றால், ஏற்கனவே ஐம்பது சதவிகிதம் மட்டுமே வலுவுடன் சென்னையில் இயங்கும் அ.தி.மு.க. எய்ட்ஸ் நோயாளி போல படுத்துவிடும் என குமுறுகிறார்கள் அ.தி.மு.க.வினர்.
அந்தக் குமுறலின் தொடர்ச்சியாக புகார்க் கடிதங்கள் அனுப்பத் தொடங்கிவிட்டார்கள். ஜெயக்குமாருக்கு எல்லா வகையிலும் காட்பாதர், சசிகலாவின் சகோதரர் திவாகரன் தான். சசிகலா மூலமாக அமைச்சரான ஜெயக்குமார், திவாகரன் மூலமாகத்தான் மகனை எம்.பி.யாக்கினார். அதற்காக அடையாறு பகுதியில் 6 கிரவுண்ட் நிலத்தை திவாகரனுக்கு எழுதிக் கொடுத்தார். அதே திவாகரனின் ஆலோசனைப் படிதான் டி.டி.வி.தினகரனை எதிர்த்தார். அது காலப்போக்கில் சசிகலா எதிர்ப்பாக மாறிப்போனது.
சிறையில் இவர் இருந்தபோது இவரை சசிகலா சந்திக்க வருகிறார் என புரளியைக் கிளப்பினர். அதனால் எடப்பாடி, ஓ.பி.எஸ். போய் அவரை சந்தித்தார்கள் என சசிகலாவுக்கும் ஜெயக்குமாருக்கும் உள்ள தொடர்பு பற்றி ஒரு புகார்க் கடிதம் பொதுவெளியில் சுற்றிவருகிறது.
இன்னொரு புகார்க் கடிதம் ரொம்ப விவகாரமாக ஜெயக்குமாரின் லீலைகளை வர்ணிக்கிறது. சுமார் பல நூறு கோடி சொத்து சேர்த்திருக்கும் ஜெயக்குமார், தனது பொழுதுபோக்காக சில விஷயங்களில் தலையிடுகிறார்.
இதுபற்றி ஜெயக்குமாரிடன் கேள்வி கேட்டால், "மடியில் கனம் இருப்பவர்களுக்குத்தானே வழியில் பயம்' என தன்மீது பாய்ந்து வரும் புகார்களுக்கு கேஷுவலாக பதில் தருகிறார்.
"பினாமிகள் மூலம் தொழில் நடத்தும் ஜெயக்குமார், தமிழகத்திலேயே மிகப்பெரிய மீன் ஏற்றுமதியாளர், தமிழகத்திலேயே மிகப்பெரிய வலை தயாரிப்பாளர் எனவும், பா.ஜ.க.வுடன் உள்ள நெருக்கத்தால் ஆந்திராவில் ஏகப்பட்ட தொழில்களை நடத்தும் அவர் ஆந்திர மாநில தொழிலதிபர் அவதாரமும் எடுத்துள்ளார்.
மேலும், "மதுசூதனனைப் போல அவைத்தலைவர், மத்திய மந்திரியாக வாய்ப்புள்ள ராஜ்யசபா எம்.பி. என வளர நினைக்கும் ஜெயக்குமார், தனது லீலைகளால் போலீஸ் பிடியில் சிக்காமல் இருக்க... ஆளுங்கட்சி முக்கிய பிரமுகரிடம் சரணடையவும் மறுக்கவில்லை ஜெகஜ்ஜால ஜெயக்குமார்' என்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.