விலங்குகள் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் துன்புறுத்தப்படுகின்றன என்ற வாதத்தோடு, 2017-ல் தமிழ்நாட்டின் கலாச்சார நிகழ்வாகக் கொண்டாடப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகளை தடைசெய்ய முயற்சிகள் மேற்கொண்ட நிலையில் தமிழ்நாடு மட்டுமின்றி உலகமெங்கும் வாழும் தமி ழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மெரினா கடற்கரையில் தமிழ்நாடு முழுவதும் இருந்து ஆர்வலர்களும், இளைஞர்களும், மாணவர்களும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு உலகையே திரும்பிப் பார்க்கவைத்தனர். "மெரினா புரட்சி' எனப் பேசப்படும் அளவுக்கு இந்தப் போராட்டம் பாராட்டப்பட்டது.

dd

கீரமங்கலம் மெய்நின்றநாதர் சுவாமி ஆலயத்தில் உள்ள தலைமைப் புலவர் நக்கீரர் சிலை இப்பகுதியில் பிரசித்தி பெற்றது. இவரிடம் மனு கொடுத்தால் அக்காரியம் வெற்றியாகும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை. எனவே, கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த இளைஞர் கள், மாணவர்கள், பொதுமக்கள் உண்ணாவிரதம், பேரணி போன்ற போராட்டங்கள் நடத்தி ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வேண்டும் என்று புதுக்கோட் டை -கீரமங்கலம் மெய்நின்றநாதர் சுவாமி ஆலயத் தில் உள்ள தலைமைப் புலவர் நக்கீரர் சிலையிடம் மனு கொடுக்கும் போராட்டமும் நடத்தினார்கள்.

ஜல்லிக்கட்டுப் போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உண்ணாவிரதம் போன்ற அற வழிப் போராட்டங்கள் வெடித்தன. நாளுக்கு நாள் போராட்டங்கள் அதிகரித்த நிலையில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த நீதிப்போராட்டத்தில் கிடைத்த வெற்றியின் சின்னமாக, ஜல்லிக்கட்டு காளைகள், வாடிவாசல்கள், காளையர்கள் அதிகமுள்ள புதுக்கோட்டையில் காளை நினை வுச் சின்னம் அமைக்கப்பட்டது. அதேபோல 2017-ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைத்த நிலையில் அதன் நினைவாக புதுக்கோட்டை பஸ் நிலையத்தில் அத்திமரக்கன்று நடப்பட்டது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து முறையான ஏற்பாடுகளுடன், மாநில அரசின் கண்காணிப்புடன் முறையாக ஜல்லிக்கட்டு நடந்து வரும் நிலையில், பீட்டா அமைப் பும் வேறுசில விலங்குகள் நல அமைப்பும் மீண்டும் ஜல்லிக்கட்டை தடைசெய்யக் கோரும் கோரிக்கையுடன் உச்சநீதிமன் றத்தை அணுகின.

இந்த நிலையில் வழக்கை விசாரித்துவந்த கே.எம். ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பில் ஜல்லிக்கட்டுக்குத் தடையில்லை என்று தீர்ப்பு வழங்கியது. இதைக் கொண்டாடும் விதமாக, 2017-ல் ஜல்லிக்கட்டு போராட்டம் நினைவாக நடப் பட்ட அத்திமரத்திற்கு மாலை அணிவித்தும் தலைமைப் புலவர் நக்கீரர் சிலைக்கு மாலை அணிவித்தும் இளைஞர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கிக் கொண்டாடினார்கள்.

புதுக்கோட்டையில் உச்சநீதி மன்ற தீர்ப்பை அறிந்ததும் அ.தி.மு.க.வினர் மற்றும் ஜல்லிக் கட்டு ஆர்வலர்கள் ஜல்லிக்கட்டு காளை சிலைக்கு மாலை அணி வித்ததுடன் அருகில் ஒன்றுகூடி பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினார்கள்.

தி.மு.க. கூட்டணிக் கட்சி யினரும் தி.மு.க புதுக்கோட்டை வடக்கு மா.செ. செல்லப்பாண்டி யன் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் முத்துராஜா, சின்னத்துரை மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டணிக் கட்சி யினர் காளைகள், முட்டுக்கிடா ஆகியவற்றுடன் வந்து அவற்றுக்கு மாலை அணிவித்து துண்டுகள் போர்த்தி மரியாதை செய்ததுடன் இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினார்கள். "இந்த வெற்றி தி.மு.க. அரசுக்கு கிடைத்த வெற்றி'' என்று மா.செ. செல்லப்பாண்டியன் கூறினார்.

dd

Advertisment

ஜல்லிக்கட்டு ஆர்வலர்களோ, “"பீட்டா போன்ற அமைப்பு கள் வழக்கு தொடுத்தபோது அப்போது இருந்த அ.தி.மு.க. அரசும் நீதிமன்றத்தில் வாதாடியது. இப்போதைய தி.மு.க. அரசும் தீவிரமாக வாதாடியதுடன் இது எங்கள் கலாச்சாரம், பண்பாடு என்பதை அழுத்தமாக எடுத்து வைத்ததால் இந்த வெற்றித் தீர்ப்பு கிடைத்துள்ளது. மேலும் பல தன்னார்வ அமைப்புகளும், ஜல்லிக் கட்டு ஆர்வலர்களும் வழக்கிற்கு தேவையான ஆவணங்களை திரட்டிக் கொடுத்தனர். எது எப்படியோ, தமிழர்களின் பாராம்பரிய விளையாட்டிற்கு எந்த தடையும் இல்லாமல் செய்தது அனைவரையும் மகிழச் செய்திருக்கிறது. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதுதான் நம் முன்னோர் சேதி. ஜல்லிக்கட்டு காளை வளர்க்கும் விவசாயிகள் மட்டுமின்றி இதற்காக போராடி சிறைசென்ற அனைவருக்கும் இந்த வெற்றி சேரும்''’என்றனர்.

அதே நேரத்தில் ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி கொடுத்திருந்தாலும் ஆன்லைன் டோக்கன் முறையால் சாதாரண காளை வளர்ப்போருக்கு டோக்கன் கிடைப்பதில்லை. அதனைச் சரிசெய்ய வேண்டும். போதிய பாதுகாப்புகளையும் செய்து கொடுக்கவேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.

Advertisment