ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் கொடூர சம்பவங்களை தோலுரித்து வரும் நக்கீரனின் துணிச்சலை பாராட்டிப் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன், ஜக்கி ஒரு கொலையாளி என்றது அதிர்வலைகளை ஏற்படுத்தி யுள்ளது.
ஈஷா யோகா மையம் மீது அடுத்தடுத்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துவரும் நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் தலையிட காவல் துறையினர் உள்ளிட்ட அரசு அதிகாரி கள் அந்த மையத்தில் ஆய்வு மேற் கொண்டனர். ஆய்வின் போது கைப் பற்றப்பட்ட பொருட்கள் மற்றும் கிடைத்த தகவல்கள் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்த தடையில்லை என உச்ச நீதிமன்றமும் தெரிவித்தது.
இந்நிலையில் ஈஷா யோகா மையம் தொடர்பான குற்றச்சாட்டுகளில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கும் தமிழக அரசைக் கண்டித்தும், உடனடியாக விசாரணையை துவங்க வேண்டும் என வலியுறுத்தியும் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் அமைப்பினர் கோவை சிவானந்தா காலனி பகுதியில் சனிக்கிழமையன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின்பொழுது ஈஷா யோகா மையத்தில் தங்கி இருக்கும் பெண்களைப் போல வேடம் அணிந்தபடியும், கும்மி அடித்தபடியும் நூதன முறையில் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
ஆர்ப்பாட்டத்தை துவக்கிவைத்து பேசிய முத்தரசனோ, "நில ஆக்கிரமிப்பு, வன ஆக்கிரமிப்பு, யானை வாழ்விடத்தை ஆக்கிரமித்தது, தகன மேடை, மொட்டை அடிக்கப்படும் பெண்கள் என ஈஷா குறித்து பல கேள்விகளை நான் எழுப்பினேன். ஆனால் ஈஷா சார்பாக ஆக்கிரமிப்பு குறித்து மட்டுமே பதில் அளித்துள்ளனர். மற்ற கேள்விகளுக்கு எந்த பதிலும் கூறவில்லை. வருவாய்த்துறை முழுக்க முழுக்க ஈஷாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஈஷாவில் நடக்கும் அக்கிரமம் குறித்து எந்த பத்திரிகையும் பதிவு செய்யவில்லை. என்ன காரணம், பயமா என்று தெரிய வில்லை. ஆனால் நக்கீரன் மட்டுமே தொடர்ச்சியாக ஈஷா குறித்து பல்வேறு செய்திகளை துணிச்ச லாக வெளியிட்டுள்ளது.
ஈஷாவில் போதை மருந்து உபயோகம் இருக்கிறது. சிலர் பைத்தியமாக திரிகின்றனர். ஜக்கி ஒரு கொலையாளி. மனைவி விஜி முதல் நேற்றைய சுபஸ்ரீ வரை எத்தனையோ பேர் மர்மமாக மரணித்துள்ளார்கள். தனது மகள் மரணத்தின்போது ஜக்கி தான் கொலை செய் தவர் என விஜியின் தந்தை கூறியது இன்றுவரை விசாரணையில் உள்ளது. நடவடிக்கைதான் இல்லை. இந்த யோக மையத்தில் தகனமேடை எதற்கு? வெளிநாட்டிலிருந்து இங்குவரும் பலர் விசா காலாவதி ஆகியும் உள்ளேயிருக்கிறார்கள். சிலர் இங்கேயே இறக்கிறார்கள். இப்பொழுது அவர்களது உடலை வெளியே கொண்டு சென் றால் தெரிந்துவிடும் என்பதாலேயே இங்கு தகன மேடை அமைத்துள்ளார் ஜக்கி வாசுதேவ்.
பல பாலியல் துஷ்பிரயோகங்கள் ஈஷா யோகா மையத்தில் தொடர்ச்சியாக நடை பெற்று வருகிறது. இதற்கு பல சாட்சிகள் உள் ளன. பெண் குழந்தைகளை மேலாடையின்றி வரவழைத்து தீட்சை கொடுக்கிறார்கள். அதுவும் தீட்சை என்னும் பெயரில் பிறப்புறுப்பில் கால் வைத்து தீட்சை கொடுக்கிறார்களாம். எனக்குத் தெரிந்தவரை தீட்சை என்பது தலையில் கை வைத்து ஆசீர்வாதம் செய்வது. ஆனால் இங்கு நடப்பது புது மாதிரியான தீட்சை. இதனையும் நக்கீரன் அம்பலப் படுத்தி உள் ளது'' என்றவர் தொடர்ந்து, "இங்கு ஒருத்தன் அமைப்பு என்ற பெயரில் ஒன்றை வைத்துக்கொண்டு, ஈஷா மையத்தில் நடை பெறும் அட்டூழியங்கள் குறித்து பல்வேறு செய்திகளை துணிச்சலாக வெளியிட்டு வரும் நக்கீரன் ஆசிரியர் குறித்து பேசியுள்ளார். அது காவல்துறையால் வழக்கு பதிவு செய்யப்பட்டு நடைமுறையில் உள்ளது. ஆனால், நான் ஒன்றை மட்டுமே கேட்கின்றேன். அந்த அமைப்பை நடத்திவரும் அந்த நபருக்கு அம்மா, அக்கா, மகள், மனைவி என யாரும் இல்லையா?! அப் படியிருந்தால் இப்படி பேசுவாரா?!. அதுபோல் இங்கு பா.ஜ.க. சார்பில் ஒரு எம்.எல்.ஏ. இருக்கிறார். அவர் என்ன செய்தார்?'' என சீறினார் அவர்.
தொடர்ச்சியாக பத்திரிகையாளர்களை சந்தித்தவர், "அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரின் பினாமி சொத்துகள் முழுவதும் ஈஷா யோகா மையத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதனால்தான் கடந்த காலங்களில் ஈஷா மையம் மீது நடவடிக்கை எடுக்கவில்லை'' என குறிப்பிட்டார் அவர்.
ஈஷாவிற்கு எதிராக மக்கள் போராட்டம் தொடங்கியுள்ளதை இங்கே நாம் பார்க்க முடிகிறது.