அமைச்சரவை மாற்றத்தை அடுத்து முதல்வர் ஸ்டாலினின் முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன் உட்பட 14 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது அரசியல் ரீதியாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உதயசந்திரன் மாற்றப் பட்டதை அமைச்சர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலரும் ஸ்வீட் எடு கொண் டாடு என கொண்டாடியுள்ள னர். அந்த அளவுக்கு உதய சந்திரனின் அதிகார திமிர் தலைவிரித்தாடியிருக்கிறது என் கிறார்கள் உயரதிகாரிகள். அதேசமயம், உதயசந்திரனால் தயாரிக்கப்பட்ட இந்த இடமாற்றப் பட்டியலால் எந்த ஒரு நிர்வாக சீர்த்திருத்தமோ, ஆட்சிக்கு நல்லதோ நடந்துவிடப்போவதில்லை என்கிற விமர்சனங்களும் எதிரொலிக்கின்றன.
கோட்டையிலுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிடம் இந்த மாற்றம் குறித்து விசாரித்தபோது, "தி.மு.க. ஆட்சியைப் பிடித்ததும் முதல்வரின் செயலாளர்களாக யார் வரப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு அதிகாரிகளிடம் இருந்தது. தி.மு.க.தான் ஆட்சியைப் பிடிக்கும் என தெரிந்ததும் சில உறவுகள் மூலம் முதல்வர் ஸ்டாலினை நெருங்கியிருந்தார் உதயசந்திரன்.
நேர்மையானவர் என்ற பிம்பம் அவரை சுற்றி உருவாக்கப்பட்டிருந்ததால் அதில் மயங்கிய முதல்வர், தனது முதன்மைச் செயலாளராக அவரை நியமிக்க முடிவு செய்துவிட்டு, மற்ற செயலாளர்களை நியமிக் கும் பொறுப்பையும் அவரிடமே கொடுத்தார். அப்போதே அவருக்கு அதிகார போதை தலைக்கு ஏறிவிட்டது. உடனே தனக்கு நெருக்கமான உமாநாத், சண்முகம், அனுஜார்ஜ் மூவரையும் தனக்கு அடுத்த நிலையில் முதல்வரின் செயலாள ராக கொண்டுவந்தார்.
அனைத்துத் துறைகளின் செயலாளர்களையும் மாற்றியமைக்க வேண்டிய சூழலில், தனக்கு வேண்டப் பட்ட அதிகாரிகளை மட்டும் முக்கிய பொறுப்புகளில் நியமித்து கோட்டையி லேயே வைத்துக்கொண்டார் உதய சந்திரன். சீனியர்கள், திறமையானவர் கள், தம்மை கேள்வி கேட்பவர்கள் என பலரையும் கோட்டைக்கு வெளியே தூக்கியடித்தார் அவர். இது அப்போதே சர்ச்சையானது. தலைமைச் செயலாளர் இறையன்புவின் பெயரில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்ற பட்டியல் வெளிவந்தாலும், அதில் 99 சதவீதம் உதயசந்திரனின் தலையீடும் விருப்பமும் இல்லாமல் வெளிவந்ததில்லை. அந்தளவுக்கு அவரின் ஆதிக்கம் ஆட்சி நிர்வாகத்தில் சூழ்ந்திருந்தது.
முதல்வருக்கு அவரது சோர்ஸ் மூலம் சில தகவல் கிடைத்து அவர் களை குறிப்பிட்ட துறையின் உயரதி காரியாக நியமிக்க வேண்டியிருந்தால், அதை உதயசந்திரனிடம் அவர் சொல்கிறபோது, உடனே சம்மந்தப்பட்ட அதிகாரி மீது இல்லாததையெல்லாம் சொல்லி தடுத்து விடுவார் உதய சந்திரன். மொத்தத்தில் ஆட்சி நிர்வாகத்தில் உதயசந்திரன் வைத்தது தான் சட்டம். இதனாலேயே நிர்வாகத்தில் நிறைய பிரச்சினைகள் எதிரொலித்தபடியே இருந்தன. அதனால் சீனியர் அதிகாரிகள் அதிருப்தியடைந் தனர்.
இதனை முதல்வர் ஸ்டாலினிடம் சொல்ல அதிகாரிகள் முயற்சித்தால், உதயசந்திரன் தடுத்து விடுவார். முதல்வரின் மற்ற செயலாளர்கள் மூவரும் உதயசந்திரன் ஒத்துஊதிய தால் நிர்வாகத்தில் நடக்கும் தவறுகள், அதிருப்திகள், பிரச் சினைகள் எதுவும் முதல்வர் ஸ்டாலினின் கவனத்துக்கு செல்வதேயில்லை. நேர்மையானவர் என்ற பிம்பத்தை வைத்துக் கொண்டு முதல் வரை தவறாக வழிநடத்தி னார் உதய சந்திரன். உண் மையில் அவர் நேர் மையானவராக இல்லை. அவர் மீது முதல்வர் வைத்த நம்பிக்கைக்கு துரோகம் செய்து விட்டார் உதயசந்திரன்.
இதற்கு சிறிய உதாரணம்... பா.ஜ.க.வின் தேசிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக கமிட்டி தலைவர் ஜவகர்நேசனை அறிக்கை தயாரிக்க மிரட்டியது, தொழிலாளர்கள் 12 மணி நேர சட்டத் திருத்தம் கொண்டு வந்தது, உள்துறையை ஆரோக்கியமாக கையாளாததால் பல சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகள், தனக்கு பிடிக்காத அதிகாரிகளை பற்றி முதல்வரிடம் போட்டுக் கொடுப்பது என பல விவகாரங்களை சொல்லலாம். மொத்தத்தில், முதல்வரின் நம்பிக்கைக்குரியவர் அல்ல உதயசந்தி ரன்’என்று விவரிக்கின்றனர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்.
தி.மு.க. அமைச்சர்களிடம் விசாரித்தபோது, "உதயசந்திரனின் மாற்றம் பலருக்கும் நிம்மதியை தந்திருக்கிறது. இருப்பினும் அவர் கோட்டையிலேயே முக்கிய துறையில்தான் (நிதித் துறை) உட்கார்ந்திருக் கிறார். அவரது நண்பர் முருகானந்தத்தை முதல்வரின் முதன்மைச் செயலாளராக கொண்டுவந்துவிட்டார். இவர்மூலம் ஆட்சி நிர்வாகத்தினையும், முதல்வரையும் கட்டுப்படுத்தலாம் என்ற திட்டம் உதயசந்திரனிடம் இருக்கிறது.
முதல்வரின் செயலாளர்களாக இருப்பவர்கள் தி.மு.க. ஆட்சிக்கும் அந்த ஆட்சி அமைந்ததற்கு காரண மான தி.மு.க. அமைச்சர்கள் மற்றும் கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும் இடையே ஒரு பாலமாக இருக்க வேண்டும். ஆனால், தி.மு.க.வினரையே வெறுத்தார் உதயசந்திரன். கட்சிக்காரர்கள் யாரும் என்னை வந்து பார்க்கக்கூடாது; உங்களுக்கு ஏதேனும் காரியம் ஆகணும்னா முதல்வர் வழியாக வரவேண்டும் என கடுப்படித்தார். இதனாலேயே, முதல்வருக்கும் தி.மு.க.வினருக்கும் நெருக் கம் குறைந்தது. ஏன், சீனியர்கள் ஓரிருவரைத் தவிர அமைச்சர்கள் கூட அவ்வளவு எளிதாக கோட்டை யில் முதல்வரை சந்தித்துவிட முடியாது. எல்லாவற்றிற்கும் முட்டுக்கட்டையாக இருந்தார் உதயசந்திரன்.
இதையெல்லாம் சகிக்க முடியாமல்தான், ஒருமுறை முதல்வரிடமே, தமிழ்நாட்டில் நடப்பது உதயசூரியன் ஆட்சியா? உதயசந்திரன் ஆட்சியா? என கேள்வி எழுப்பினார் துரைமுருகன். இத்தனைக்கும் உதயசந்திரனை வைத்துக்கொண்டேதான் அந்த கேள்வியை கேட்டார். இதனை ஜீரணிக்க முடியாத உதயசந்திரன், தமிழ்நாடு அரசின் அண்ணா விருது ஒருமுறை துரைமுருகனுக்கு முடிவானபோது அதனை தடுத்து துரைக்கு பதிலாக நாஞ்சில் சம்பத்துக்கு கொடுக்க வைத்தார்.
சீனியர் அமைச்சர்கள் அனுப்பும் கோப்புகள் பலவற்றை நிலுவையில் வைத்துக்கொள்வது உதயசந்திரனின் வழக்கம். ஒருமுறை மூத்த அமைச்சர் ஒருவர், தனது துறைசார்ந்த முக்கிய கோப்பில் முதல்வரின் ஒப்புதல் பெறவேண்டும். ப்ரோட்டகால்படி உதயசந்திரன் வழியாக முதல்வருக்கு அந்த கோப்பு செல்லவேண்டுமென்பதால் சீனியர் உதயசந்திரனுக்கு அனுப்பி வைத் தார். உதய சந்திரனோ அதன்மீது முடிவெடுக் காமல் அலட் சியமாக கிடப்பில் போட்டுவிட்டார். சீனியரும் பலமுறை நினைவுபடுத்தியபோது, முதல்வரிடம் கேட்டுவிட்டு க்ளியர் பண்ணுகிறேன் என்றே சொன்னாரே தவிர க்ளியர் செய்யவில்லை.
இதனால் கோபப்பட்ட அந்த சீனியர், கோட்டையில் முதல்வர் இருப்பதை அறிந்து அவரது அறைக்கு சென்றவர், உதயசந்திரனை முதல்வர் அறைக்கு வரவழைத்தார். அவரும் வந்தார். அவரைப் பார்த்து, "எப்பப் பார்த்தாலும் முதல்வரிடம் கேட்டு சொல்றேன்னு சொல்வீங்கல்ல முதல்வர் இங்குதானே இருக்கார். இப்போ கேளுங்க?' என சீனியர் சொல்ல, உதயசந்திரனுக்கு சப்தநாடியும் ஒடுங்கிவிட்டது.
"மிஸ்டர் உதயசந்திரன், இந்த ஆட்சி எங்களுடை யதா? உங்களுடையதா? தி.மு.க. ஆட்சி அமைவதற்காக ஒரு சிறு துரும்பையாவது நீங்க கிள்ளிப் போட்டதுண்டா? ஆனா, எங்க ஆட்சியில் நல்ல பவரில் உட்கார்ந்து கொண்டு எங்களையே ஆட்டிப் படைப்பீங்களா? ஆமாம் ஜெயலலிதா ஆட்சியில எங்க இருந்தீங்க? நல்ல இடத்துல இருந்தீங்க. இப்போ எங்கே இருக்கீங்க? பவர்ஃபுல் இடத்துல இருக்கீங்க. ஜெயலலிதா ஆட்சியில நாங்க எங்கே இருந்தோம்னு தெரியுமா? ஜெயில்ல களி சாப் பிட்டுக்கிட்டு இருந்தோம். அந்த வலி எங்களுக்குத்தான் தெரியும். தேர்தல்னு வந்துட்டா நாங்கதான் மக்கள்ட்ட ஓட்டு கேட்டுப் போகனும், நீங்க இல்ல. இந்த ஆட்சி உங்களுடையதா? இல்ல எங்களுடையதா?'ன்னு கேட்டு சரமாரியாக வெடித்து விட்டார் அந்த சீனியர். இப்படி பல ஆதங்கங் கள் நிறைய இருக்கு. இதெல்லாம் இனியாவது சரியானால் நல்லது''’என்று விவரித்தனர்.
இப்படி அமைச்சர்கள், சீனியர் ஐ.ஏ.எஸ். அதிகாரி கள் அனைவரும் உதயசந்திரன் மீது அதிருப்தியடைந் துள்ள நிலையில்தான், அவருக்கு எதிராக ஜவஹர்நேசன் கொடுத்த முதல் குரல் ஒட்டுமொத்த நிர்வாகத்தின் அவலத்தைச் சுட்டிக்காட்ட, இதோ உதயசந்திரன் உட்பட்ட இதன்படி... முதல்வரின் செயலாளராக இருந்த உதயசந்தி ரன் நிதித்துறைக்கு மாற்றப்பட்டு, நிதித்துறை செயலாளர் முருகானந்தம், முதல்வரின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இப்படி நியமித்ததற்கு பதில் உதயசந்திரனே இருந்திருக்கலாம். ஏன்னா முருகானந்தம் வேறு; உதயசந்திரன் வேறில்லை. தவிர ஆளுநர் மாளிகைக்கு நெருக்கமானவர் முருகானந்தம்.
அதேபோல ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் அமுதாவை உள்துறையின் செயலாளராக நியமித்திருக் கிறார்கள். உள்துறை என்பது சென்சிட்டிவான துறை. மிகவும் அதிகாரமிக்க, சவாலான இந்த துறைக்கு பெண் அதிகாரி அமுதா நியமிக்கப்பட்டிருப்பதால் பலரின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
டாஸ்மாக் தொடர்பான ஊழல்களில் கமிஷன் பெற்றார் என்பதால் உள்துறை செயலாளர் பனீந்தரரெட்டி மாற்றப்பட்டார். அதேபோல, பொதுத்துறை செயலாளர் ஜெகன்னாதன், மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாளர் மைதிலி ராஜேந்திரன் மீது நிர்வாகரீதியாக நிறைய புகார்கள் இருந்ததால் அவர்கள் மாற்றப்பட்டனர். அதேபோல. பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், மனிதவள மேம்பாட்டுத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இவர் மீதுள்ள புகார்கள் சொல்லி மாளாது. குறிப்பாக, தி.மு.க.வின் கொள்கைகளுக்கு விரோதமாகவே செயல்பட்டவர். உதயசந்திரன் சொல்லுக்கு மட்டுமே கட்டுப்பட்டு பள்ளிக் கல்வித்துறையை காவித்துறையாக மாற்றும் முயற்சியில் இருந்தவர் நந்தகுமார்.
சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடியால் நிர்வாகத்தை கவனிக்க முடியாததால் அவரை மாற்றிவிட்டு புதிய கமிஷனராக ராதாகிருஷ்ணனை நியமித்திருக்கிறார்கள். இது சரியான நியமனம்தான்.
அதேபோல, போக்குவரத்துத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் கே.கோபால், விழிப்புப்பணி மற்றும் நிர்வாக சீர்த்திருத்தத்துறை செயலாளராக நியமிக்கப் பட்டுள்ளார். இதுவரை இந்த துறை கூடுதல் பொறுப் பாகவே இருந்து வந்தது, நீண்ட வருடங்களுக்கு பிறகு தனி அதிகாரி நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த துறைக்கு கோபால் சரியானவர்தான். எடப்பாடி மீது லஞ்ச ஒழிப்புத் துறையிலுள்ள புகார்கள் இனி வேகமெடுக்கும். அதை கவனிப்பதற்காகவே கோபாலை இதில் நியமித்திருப்பதாக சொல்லப்படுகிறது.