ல்வி, சமூக நீதி, கூட்டாட்சித் தத்துவம் என்ற தலைப்பில் தி.மு.க. மாணவரணி சார்பில் ஏப்ரல் 30 மற்றும் மே 1 ஆகிய இரு தினங்கள் தேசிய அளவிலான மாநாடு, சென்னை கலை வாணர் அரங்கில் நடைபெற்றது. பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்கள் பங்குபெற்ற இந்த மாநாட்டில் பேசிய காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவரும் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத் தின் தலைவர் பொறுப்பை வகித்தவருமான கண்ணையாகுமார் ஆங்கிலமும் இந்தியும் கலந்த உரையால் கூட்டத்தினரைக் கவர்ந்தார்.

"வட இந்தியனாயிருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயமல்ல. தென்னிந்தியாவிலிருந்து வந்ததால் நீங்கள் 3, 4 மொழிகளைத் தெரிந்திருப்பீர்கள். எனது தாய்மொழி மைதிலி. ஆனால் இது இந்தியின்கீழ் வந்துவிடுகிறது. அதனால் இந்தி, ஆங்கிலம் இரண்டு மொழிகள் மட்டுமே தெரியுமென்றுதான் நான் சொல்லமுடியும்.

ff

Advertisment

நான் உங்கள் அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். இந்த நாட்டின் பல மொழிகளை நான் கற்றிருக்கவேண்டும். மனிதனாக இருப்பதால், மொழியைக் கற்பது மிக எளிதான விஷயம். மொழியின் அடிப்படையிலேயே மனித சமூகம் பரிணமித்தது. நாகரிகம் வளர்ச்சியடைந் தது. உண்மையிலே உங்கள் மொழியை மதிக்கிறேன். கலாச்சாரத்தை மதிக்கிறேன். அனைத்துக்கும் மேலாக, சமூக மறுமலர்ச்சிக்கான தலைவர்களின் நிலம் என்பதால், மகத்தான சமூக இயக்கங்களின், மகத்தான அறிவியல் விஞ்ஞானிகளின், மகத்தான கலைஞர்களின் நிலம் என்பதால் நான் உங்களுக்கு மரியாதை செலுத்த விரும்புகிறேன்.

தொழில்நுட்பம், இன்டர்நெட், சந்தை சக்திகள் இந்த உலகத்தை, இந்தத் தேசத்தை ஒருங்கிணைக்கின்றன. நவதாராளவாதத்தின் இலக்கு என்ன? பெருமளவு லாபத்தைப் பார்ப்பது, சட்டங்களை வலுவிழக்கச் செய்வது. சில நபர்களின் நலனைப் பாதுகாக்க, அவர்கள் நம்மைத் திரும்பத் திரும்ப, மதம், சாதி. கலாச்சாரம், மொழியின் அடிப்படையில் பிரிக்க, நவதாராளவாதத்தின் அடிப்படையிலான அரசியல் கொள்கைகளைக் கொண்டவர்கள் முயல்கிறார்கள்.

dd

Advertisment

நான் ஒரு கட்சியைச் சேர்ந்தவன் என்ப தாலோ, மாணவர் அமைப்பின் தலைவர் என்ப தாலோ இதனைச் சொல்லவில்லை. இந்தியாவின் சாதாரண குடிமகனாக இதைச் சொல்கிறேன். இந்தியாவின் பெரும்பாலான பிரமுகர்கள் இந்தியாவைப் பற்றி என்ன நினைக்கின்றனர்? அதன் சிறப்பாக எதை நினைக்கின்றனர்? வேற்றுமையில் ஒற்றுமை. ஒற்றுமையில் வேற்றுமை என்றில்லாமல், வேற்றுமையில் ஒற்றுமை என இருக்கவேண்டும். அதுதான் நம் பலம்.

இந்த மாநாட்டுக்காக அற்புதமான நாளைத் தேர்வுசெய்திருக்கிறீர்கள். அதற்காக நன்றி. இன்று மே தினம். இன்றைய தினம் மகாராஷ்டிரா, குஜராத் உருவாகிய தினமும்கூட. நாம் பகிரப்பட்ட வரலாற்றைக் கொண்டிருக்கிறோம்.

இந்த வரலாறு ஆளும் தரப்பினரால் பிரிக்கப் படுகிறது. இதுதான் மிகுந்த பிரச்சினைக்குரிய ஒன்று. நாம் வேற்றுமையின் பாதையைப் பின் பற்றக்கூடாது. ஒற்றுமையைப் பின்பற்றவேண்டும். அவர்கள் சமூகத்தை, மொழியின் பெயரால், இன் னும் பலவற்றின் பெயரால் பிரிக்கின்றனர். அடிப் படை உரிமைகளைத் தாக்குதலுக்கு உள்ளாக்கு கின்றனர். கூட்டாட்சியை கேள்விக்குள்ளாக்குகின் றார்கள். ஜனநாயகத்தின் பாதையை நாம் பின்பற்றாமல் போனால், மாநிலங்கள் ஒருங்கிணைந்து இருப்பது வெகுசிரமம்.

குஜராத்தைச் சேர்ந்த இளம் ஆற்றல்மிகு தலைவர் ஜிக்னேஷ் மேவானி. அவர் சட்டமன்ற உறுப்பினரும்கூட. கைது செய்யப்பட்டார். நாட்டின் பிரதமரும் குஜராத்காரர். உள்துறை அமைச்சரும் குஜராத்காரர். ஆனால் அந்த சட்டமன்ற உறுப்பினர் கைதுசெய்யப்படும்போது முதல் தகவல் அறிக்கை அஸ்ஸாமில் பதிவானது. அஸ்ஸாம் போலீஸ் அவருக்கு எந்த அடிப் படை உரிமையும் அளிக்காமல் கைதுபண்ணி இழுத்துச்சென்றது. அவர் வழக்கறிஞர், பத்திரிகையாளரும்கூட. போலீஸ் கஸ்டடியில் அந்த எம்.எல்.ஏ. இருக்கும்போது அவர்மேல் எப்.ஐ.ஆருக்கு மேல் எப்.ஐ.ஆர். பதிவாகிறது. போலீஸ் கஸ்டடியில் இருக்கும்போது, இன்னொரு போலீஸைத் தாக்கமுடியுமா? அவருக்கே இந்த நிலை எனில் இன்னொரு சாதாரண குடிமகனுக்கு என்னாகும்?

உங்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பது ஒரு அரசியல் கட்சியின் பொறுப்பல்ல. மக்கள் ஒவ்வொருவரின் கடமையாகும். நாம் அதனை முக்கியமான தாக எடுத்துக்கொள்ளவேண்டும்.

நான் உங்களை ஒரு கேள்வி கேட்க அனுமதியுங்கள். இங்கே மருத்துவக் கல்லூரி, சட்டக் கல்லூரி மாணவர்கள், இளங்கலை பட்டதாரிகள் இருக்கிறீர்கள். கச்சா பாதம் பாடலை இன்ஸ்டாகிராமில் கேட்டிருக்க லாம். அது எந்த மொழிப் பாடல் என உங்களுக்குத் தெரியுமா?

அது வங்க மொழிப் பாடல். தமிழ் பல்வேறு பேச்சு வழக்குகளைக் கொண்டது. மலையாளம், கன்னட மொழிகள் பல்வேறு பேச்சு வழக்குகளைக் கொண்டன. மொழிக்கு பல்வேறு வழக்குகள் இருப்பதுபோல், நாமும் பல்வேறு அடையாளங்களைக் கொண்டுள் ளோம். இந்த நாட்டின் குடிமகனாக, நாம் ஒரு ஒப்பந்தத்தைக் கொண்டிருக்கிறோம். அது அர சியலமைப்புச் சட்டம். இந்தியா எனும் கருத்தின் மேல் தொடர்ந்து தாக்குதல்களைக் காண்கிறோம். எந்த மொழியைத் தேர்வுசெய்வது, எந்த கலாச் சார அடையாளத்தைத் தேர்ந்தெடுப் பது என்ற சுதந்திரம் இருக்கிறது. அந்த சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டும். நாம் சீரியஸான காலகட்டத்தைக் கடந்துசெல்கிறோம். நாட்டைக் காப்பது நமது கடமை. பிரித்தாளும் அரசியலை வெற்றி கொள்வது, ஒன்றிணைந்து அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பது நமது கடமையாகும்.''