நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சி வார்டு, ஒன் றிய வார்டு கவுன்சிலர்களைவிட ஊராட்சித் தலைவர் பதவியைக் கைப்பற்றுவதில்தான் கட்சிகள், வேட்பாளர்களிடையே கடும் போட்டி. இந்தப் போட்டிகளே வோட்டுக்கான ரூபாயின் எண் ணிக்கையை ஏல முறை அளவுக் குக் கொண்டுபோயிருக்கிறது.
தென்காசி மாவட்டத்தின் பாவூர்சத்திரம் பலதரப்பான வியாபாரங்களைக் கொண்ட முன்னணி ஊராட்சி. இதன் தலைவர் பதவி பெண்களுக்கானது. களத்தில் முக்கிய மூன்று வேட்பாளர்களிடையே போட்டி என்றாலும், மணிவண்ணன், மதிசெல்வன், இளங்கோ மூவரின் சார்பில் அவர்களின் மனைவியர் களத்தில் வேட்பாளர்கள். மூன்றுபேருமே தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள். இவர்களில் மணிவண்ணன் அ.தி.மு.க.விலிருந்து தி.மு.க. பக்கம் வந்தவர்.
எப்படியும் தங்களைச் சார்ந்தவரைத் தலைவியாக்கிவிட வேண்டும் என்ற தீவிரத்தில், ஆரம்பத்தில் தெரிந்தும் தெரியாமலும் வோட்டுக்கு 300 என்று வாக்காளர்களுக்குச் சப்ளை செய்ய, மற்றவர்களோ போட்டியில் 400 என்று போக... அடுத்து 500 என்றும் பிக்ஸ்பண்ணி கடைசியாக வோட்டுக்கு 600 என்ற லெவலில் வந்து நிற்கிறது. ஆனாலும் இழுபறி நிலை என்கிறார்கள்.
இதற்குச் சற்றும் சளைத்ததாகத் தெரிய வில்லை அருகிலுள்ள கல்லூரணியில் நடந்தவை. இந்த ஊராட்சிக்குரிய தலைவர் பதவிக்கு ஐந்து வேட்பாளர்கள் மோதுகின்றனர். போட்டி அனல் தெறித்தாலும் டப்பு இல்லாமல் வேலையாகாதே. ஆரம்பத்தில் வோட்டுக்கு 500-ல் ஆரம்பித்து அடுத்தவர் 600 என்றும், சளைக்காத மற்றொரு வரோ 1000 என்று வாக்கு ஏலத்தைக் கொண்டு போக இறுதியாக டெம்பரேச்சர் 1000-ல் வந்துநிற்கிறதாம்.
குற்றாலம் பக்கமுள்ள ஆயிரப்பேரியில் தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கிடையே ஊராட்சித் தலைவர் பதவியைப் பிடிப்பதில் டக் அஃப் வாரே நடக்கிறது. 2 பேர் போட்டி என்றாலும் ஆரம்பத்தில் வோட்டுக்கு 500 என்றிருந்தது பின்பு 1000, போட்டியால் 1500 என்றாகி, இறுதியாக 2000 என்ற ரேஞ்ஜில் விலைபோகிறதாம். ஆனால் 1500 என நிர்ணயம் செய்த அ.தி.மு.க. வேட்பாளரால் அந்தத் தொகையைத் தாண்ட வழியில்லையாம். இதையறிந்தே தி.மு.க.வின் வேட்பாளர் 2000 என்ற எல்லை வரை போய்விட்டாராம்.
மேலநீலிதநல்லூர் ஒன்றியத்தில் வைட்டமின் பட்டுவாடாவில் மாறுபட்ட அணுகுமுறையாம். இங்கே ஊராட்சித் தலைவர் பதவியைப் பிடிப்பதைவிட வலுவான மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர் பதவியைக் கைப்பற்றுவதில்தான் அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்களுக்கிடையே இழுபறி. ஆனாலும் சளைக்காத தி.மு.க. வேட்பாளர், ஒன்றிய கவுன்சில் வேட்பாளருடன் இணைந்து ஐம்பதாயிரம் வாக்காளர்களைக் கொண்ட தொகுதியில் இருவருமாக வோட்டுக்கு 500 என்று பட்டுவாடா நடத்துகிறார்களாம்.
தி.மு.க.வின் தலைமை, வேட்பாளர்களுக்கு இரண்டு எல் கொடுத்து உதவ, அக்கட்சியின் வேட்பாளர்கள் தங்களின் பணத்தையும் சேர்த்து ஒ.செ.க்கள், மற்றும் கி.க.செக்கள் மூலமாக வாக்காளர்களுக்கு வைட்டமின் போகிறதாம். அ.தி.மு.க. வேட்பாளர்களோ வேறு வழியின்றி தங்களின் கைப்பணத்துடன் கடன்பட்டும் வாக்காளர் கவனிப்பு நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டு, திணறுகிறார்கள்.
நெல்லை மாவட்டத்தின் நாங்குநேரிப் பக்கமுள்ள மறுகால்குறிச்சி ஊராட்சித் தலைவர் பதவிக்கு 4 பேர் களத்தில் என்றாலும் நான்கு வேட்பாளர்களுமே வோட்டுக்கு 1000 என்று சப்ளையில் இறங்கியிருக்கிறார்களாம். அதேசமயம் நாங்குநேரி யூனியனுக்குட்பட்ட வடுகட்சிமதில் ஊராட்சித் தலைவர் பதவிக்கு வோட்டுக்கு ஐந்தாயிரம் என்று பட்டுவாடா நடந்திருப்பது புருவங்களை உயரவைத்திருக்கிறது.
நாங்குநேரி யூனியன், அரியகுளம் ஊராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர் பிரேமாவின் கணவரும் அதன் மாஜி தலைவருமான அருமைதுரை, தனது மனைவி யைக் கரையேற்ற வீடு வீடாக வாக்காளர் களுக்குப் பணம் பட்டுவாடா செய்திருக்கிறார்.
9-ஆம் தேதியன்று நடக்கும் இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தின்போது, அ.தி.மு.க. வின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பி.எஸ்., தென்காசி மற்றும் பொன்னாக்குடி பகுதிகளில் மாவட்டத்தில் போட்டியிடுகிற அ.தி.மு.க.வின் அனைத்து வேட்பாளர்களின் ஆலோசனைக் கூட்டத்திற்கு வந்தார். "அம்மாவின் ஆட்சியின் போது கல்வியில் முன்னேற்றம், மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள், மிக்சி, கிரைண்டர் வழங்கியது, அவரது ஆட்சியின்போது நடந்த திட்டங் களை மக்களிடம் எடுத்துச்சொல்லி பிரச்சாரம் செய்யுங்கள்' என்று சொன்னவர், எடப்பாடி பற்றிப் பேசுவதைக் கவனமாகத் தவிர்த் திருக்கிறார்.
எக்கச்சக்கமான எதிர்பார்ப்பு களுடனிருந்த அ.தி.மு.க.வின் நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்களுடன் பேசியபோது, "ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். பிரச்சாரத்தின்போது எடப்பாடியைக் கவனமாகத் தவிர்த்திருக்கிறார். அது அவர்களின் உரசலை வெளிப்படுத்துகிறது. கட்சித் தலைமையில் முடிவெடுக்கிற இடத்திலிருக்கும் ஓ.பி.எஸ்., ஒப்புக்குக்கூட தேர்தல் செலவு பற்றி பேசாமல் வெறுங்கையால் முழம்போட்டுவிட்டுப் போயிருக்கிறார். ஆட்சியின்போது வளமாக இருந்த மாஜி அமைச்சர்கள்கூட, இந்த விஷ யத்தில் கழுவிய மீனாக நழுவிக்கொண்டார்கள். அம்மா காலம் என்றால் இப்படி இருக்குமா. கடன்பட்டும் கையிருப்பைக் காலி செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக் கிறோம்''’என்கிறார்கள் வேதனையோடு.