திகார பலத்தை வைத்துக் கொண்டு தனக்கு கீழ் பணிபுரியும் ஆசிரியர் களை மிரட்டி வருகிறார் அந்த அதிகாரி என்கிற புகார்க் குரல் காதுக்கு வர, நாம் விசாரணையில் இறங்கினோம்.

தென் தமிழகத்தில் உள்ள திண்டுக்கல், தேனி, மதுரை மாவட்டங்களில் கள்ளர் சீரமைப்புத் துறை யின் கீழ், ஆரம்பப் பள்ளி கள் 213, நடுநிலைப் பள்ளிகள் 22, உயர்நிலைப் பள்ளிகள் 20, மேல்நிலைப் பள்ளிகள் 40 என மொத்தம் 295 பள்ளிகள் இயங்கி வருகின்றன. மேலும் 54 மாணவ மாணவியர் விடுதிகளும் செயல்பட்டு வருகின்றன.

teachers

இவை கல்வித்துறை கட்டுப் பாட்டில் இல்லாமல் பிற்படுத்தப் பட்ட நலத்துறையின் கட்டுப்பாட் டில் இருந்துவரும் நிலையில், மேற்கண்ட பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரி யர்களை, கள்ளர் சீரமைப்புத் துறையின் இணை இயக்குனர் பொன் குமார் தனது அதிகார பலத்தை வைத்து மிரட்டி வருகிறாராம். எனவே இவரைக் கண்டித்து மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்ட ஆசிரியர்கள் தொடர்ந்து கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்க கூட்டணியின் கள்ளர் பள்ளி மாவட்டச் செயலாளர் தீனனிடம் நாம் கேட்ட போது....”"கடந்த 2017-ல் கள்ளர் சீரமைப்பு துறைக்கு பதவி உயர்வால் இணை இயக்குனராக பொன்குமார் வந் தார். அப்போதே சரியான கார ணங்கள் இன்றி, நான் உள்பட சங்க நிர்வாகிகள் 16 பேரை திடீ ரென அவர் சஸ்பெண்ட் செய்தார். அதைக் கண்டித்து ஆசிரியர் சங்கங்கள் பெரும் போராட்டங் களை முன்னெடுத்தது. அதோடு துறை அமைச்சர் முதல் செயலா ளர் வரை இந்த விவகாரத் தைக் கொண்டு சென் றோம். அதனால் அப்போது அவர் பணிமாற்றம் செய்யப்பட்டார். அவர் சஸ்பெண்ட் செய்த 16 பேர் மீதும் குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்படவில்லை. அத னால் மீண்டும் நாங்கள் பணியில் சேர்க்கப்பட் டோம். எங்கள் நிலுவை சம்பளத்தையும் பெற்றுக் கொண்டோம். இந்த நிலையில், கடந்த ஆண்டு எங்கள் துறைக்கு மீண்டும் பொன்குமார் இணை இயக்குநராக வருகிறார் என்று தகவல் கிடைத்தது. நாங்கள் அப்போதே அதற்கு எதிர்ப்பு தெரிவித்தோம். இருந்தும், இணை இயக்குனராக பொன்குமார் பதவியேற்றார். அதன்பின் எங்களைப் பழிவாங்க ஆரம்பித்துவிட்டார்.

Advertisment

teachers

அதாவது, எங்கள் சங்கத்தின் சார்பில் மாநிலம் முழுவதும் 450 பேர், பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைபடுத்த வலியுறுத்தி, டெல்லியில் பேரணி நடத்தச் சென்றிருந்தோம். அதைக் காரணம் காட்டி எங்களிடம் பிரச்சினை செய்ய ஆரம்பித்தார். தொடர்ந்து எங்களுக்கு மெமோ வழங்கினார். நாங்கள் ஆர்.டி.ஐ. மூலம் அவர் டெண்டர் இல்லாமல் பல்வேறு முறைகேடுகள் செய்ததைக் கண்டுபிடித்தோம். அதோடு, பொது கலந்தாய்வு இல்லாமல் 40-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை பணிமாற் றம் செய்திருக்கிறார். இதற்காக ஒவ்வொரு ஆசிரியரிடமும் பல லட்சங்கள் வாங்கியிருக்கிறார்.

மேலும், இவர் ஆசிரியர்களை ஜாதிப் பாகுபாடு பார்த்து, மரியாதை இல்லாமல் நடத்திவருகிறார். அரசு கள்ளர் பள்ளி யிலிருந்து ஆசிரியர்கள், பள்ளிக் கல்வித் துறைக்கு மாற, என்.ஓ.சி கொடுக்கவேண்டும். அதற்கும் அவர் தலா ரூ. 8 லட்சம் வீதம் வாங்கியிருக்கிறார். இப் படிப்பட்ட இவரது அடாவடி அத்துமீறல்களைக் கண்டித்து போராட்டங்களை நடத்திவருகிறோம். அதேபோல், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியைச் சந்தித்தும் இவர்பற்றி முறையிட் டோம். அவர் உடனே, எங்க துறை அமைச்சரான ராஜகண்ணப்பனைத் தொடர்புகொண்டு, "ஏற்கனவே அந்த இணை இயக்குநர் மேல் புகார் இருக்கிறது. அப்படியிருந்தும் ஆசிரியர்களை பழிவாங்கும் நோக்கத்தோடு செயல்பட்டுவருகிறார். இந்த பிரச்சனை பெரிதாவதற்குள் அவரை உடனே டிரான்ஸ்பர் செய்யுங்கள்' என்று, எங்கள் எதிரி லேயே கூறினார். எனினும் அவர்மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதேநிலை நீடித்தால், தொடர் போராட்டத்தில் குதிப்போம்''’என்றார் காட்டமாகவே.

teachers

Advertisment

நம்மிடம் பேசிய சில ஆசிரியர்கள் "கள்ளர் சீரமைப்பு பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவி களுக்கு தமிழக அரசு நிதி ஒதுக்கி வருகிறது. அதை யும் அதிகாரிகள் கொள்ளையடித்து வருகிறார்கள். மதுரை கலெக்டர் அலுவலகத்தில் தான் இணை இயக்குநர் அலுவலகமே இருக்கிறது. அப்படியிருக் கும் போது மதுரை மாநகரில் எவ்வளவோ புத்தகக் கடைகள் இருந்தும் கூட, அங்கு ஆசிரியர்கள் மற் றும் மாணவ-மாணவிகளுக்கு தேவையான பதி வேடுகள், சாக்பீஸ், டஸ்டர், மற்றும் கோரைப்பாய் உள்ளிட்ட பொருட்களை வாங்காமல், திருச்சி மாவட் டத்தின் கடைக் கோடியில் உள்ள வையம்பட்டி சாய் டிரேடர்ஸில் அதிக விலைக்கு, பல லட்ச ரூபாய்களுக்கு கொள்முதல் செய்கிறார்கள். இந்த விசயம் எல்லாம் முதல்வரின் முதன் மைச் செயலாளர் வரை சென்றதால், கடந்த 5 ஆம் தேதி, தணிக்கைக் குழு மதுரையில் உள்ள இணை இயக்குநர் அலுவலகத்திற்கு வந்து ஆய்வு செய் தது. இது தெரிந்ததும் இணை இயக்கு நர் அலுவலகத்திற்கே வரவில்லை. ஆனால் முதல்வரின் தணிக்கைக் குழு பல ஆவணங்களைக் கைப்பற்றிச் சென் றிருக்கிறது. அதனால் இணை இயக்கு நர் பொன்குமார் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருக்கிறது''’ என்கிறார்கள் நம்பிக் கையோடு. இந்தக் குற்றச்சாட்டுகளை பற்றி இணை இயக்குநர் பொன்குமாரிடம் கேட்டபோது...

"எனக்கு எதிராகப் போராட்டத்தில் குதித்துள்ள ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறேன். அதோடு என்னைப் பற்றித் தவறான தகவலையும் பரப்பி வருகிறார்கள். நீங்கள் யாருன்னு எனக்குத் தெரியாது. போனில் விளக்கம் சொல்ல முடியாது. மீறி என்னைப் பற்றி செய்தி வெளி யிட்டால் நோட்டீஸ் அனுப்பவும் தயங்க மாட்டேன்''’என்று மிரட்டல் தோரணையில் பேசி போன் லைனை கட் செய்துவிட்டார்.

புகாருக்கு ஆளான இந்த அதிகாரி மீது தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

-சக்தி