பிரதமர் மோடியின் 8 ஆண்டு கால சாதனைகளை விளக்கும் நிறைவு பொதுக்கூட்டத்தை கடந்த ஞாயிற்றுக் கிழமை சென்னையில் நடத்தினார் அண்ணாமலை. தமிழக பா.ஜ.க.வுக்கு சென்னையில் அமைப்பு ரீதியாக உள்ள 7 மாவட்டங்களும் ஒருங்கிணைந்து இந்த நிறைவு பொதுக்கூட் டத்தை நடத்தினர். இந்த பொதுக்கூட்டத்தில் 50,000 பா.ஜ.க. தொண்டர்கள் திரளுவார்கள் என்று உரத்துச் சொன்னார் அண்ணாமலை. இதனால் உளவுத்துறையும் காவல்துறையும் உன்னிப்பாகக் கவனித்தன.

அந்த பொதுக்கூட்டத்தில் வெறும் 5,000 இருக்கைகள் மட்டுமே போடப்பட்டிருந்தன. அந்த இருக்கைகளில் ஆட்கள் முழுமையாக நிரம்பியிருந்தனர். ஆனால், 50ஆயிரம் என்று சொல்லிவிட்டு, வெறும் 5,000 பேர்தான் வந்திருந்ததைக் கண்டு பா.ஜ.க. தலைவர்களுக்கு அதிர்ச்சி.

ff

Advertisment

பொதுக்கூட்டத்தில் பேசிய அண்ணா மலை, தி.மு.க.வில் சமூக நீதி இருக்கிறதா என்று சாடினார். அவர் பேசி அமர்ந்ததும், ஒன்றிய இணையமைச்சர் முருகன் பேசத் துவங்கினார். அப்போது, கூட்டம் மெல்ல மெல்ல கலையத் துவங்கியது. இறுதியில் முன்வரிசையில் வெறும் 200 பேர் மட்டுமே இருந்தனர்.

கலைந்து சென்றவர்களை முருகனின் ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்த முயற்சிக்க, அண்ணாமலை பேசும் வரையில் இருந்தால் மட்டும் போதும் எனச் சொல்லித்தான் தலைக்கு 300 ரூபாய் கொடுத்து அழைத்து வந்தனர்‘’என்று சொல்லிக் கலைந்து செல்வதில் குறியாக இருந்தது.

இதுகுறித்து முருகன் ஆதரவாளர்களிடம் நாம் விசாரித்தபோது, "இதே சாதனை விளக்கக் கூட்டம் பொள்ளாச்சியில் நடந்தது. 4 சட்ட மன்றத் தொகுதிகளை அடங்கிய நிர்வாகிகளி டம் பொறுப்பை ஒப்படைத்தனர். அவர்கள் 15 ஆயிரத்துக்கும் அதிகமான தொண்டர்களை திரட்டிக் காட்டினர். அதேபோல நெல்லையில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் திரண்டி ருந்தனர். ஆனால், சென்னையில் 22 சட்ட மன்ற தொகுதிகள் அடங்கிய 7 மாவட் டங்களும் இணைந்து 5,000 பேரைத்தான் திரட்ட முடிந்தது. ஆக, 7 மாவட்டத்திலு மிருந்து 200 தொண்டர்கள்தான் வந்துள்ளனர்.

அண்ணாமலை பேசியதும் கூட்டம் கலைகிறதென்றால், அவருக்காக மட்டுமே பணம் கொடுத்து கூட்டம் கூட்டப்படுகிறதா? மோடியின் பிரதிநிதியாக முருகன் கலந்துகொண்ட நிலையில், அவர் பேசும்போது கலைகிற கூட்டத்தை அண்ணாமலை தடுத்து நிறுத்த முயற்சிக்கவில்லை. முருகன் பட்டியி லினத்தவர் என்பதால் அவமானப்படுத்துகிறாரா? தி.மு.க.வைப் பார்த்து சமூகநீதி பற்றி கேள்வி கேட்கிறார் அண்ணாமலை, ஆனால் பா.ஜ.க.வில் எங்கே இருக்கு சமூக நீதி?''’என்று கொந்தளிக்கின்றனர்.

இதுதவிர இந்த பொதுக்கூட்டத்திற்காக பல்வேறு தரப்பினரிடமிருந்தும் 1 கோடி ரூபாய் வசூலித்திருப்பதும் பா.ஜ.க.வில் புகைந்து, டெல்லி வரை புகாராகப் பறந்துள்ளது.