த்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா பலி சடுகுடு விளையாடியதில், கங்கைக் கரையோரம் மட்டுமின்றி அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பெயரும் நாறிப்போனது. முதல்வரின் பெருமைக்கு பட்டு பீதாம்பரம் உடுத்தி ஜவ்வாது பூசப்போகிறோமென்று கிளம்பி சேற்றை வாரியிறைத்திருக்கிறார்கள் உ.பி. பா.ஜ.க.வினர்.

2022-ல் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள் ளப் போகும் மாநிலங்களில் உத்தரப்பிரதேசமும் ஒன்று. சட்டமன்றத் தேர்தலை சும்மா எதிர்கொள்ள முடியுமா? உத்தரப்பிரதேச பா.ஜ.க. ஒருபக்கம் தேர்தல் பணிகளில் சுறுசுறுப்பு காட்டத் தொடங்கியுள்ளது. அதன் ஒரு அம்சமாக பத்திரிகைகளில், யோகியின் சாதனைகளை விளம்பரம் செய்தது.

upcm

அந்த விளம்பர முயற்சிதான் வேதனையாக முடிந்திருக்கிறது. யோகி ஆதித்யநாத்தின் ஆளுயர படத்திற்குப் பின்னணியில், நீலம் மற்றும் வெள்ளை நிறமடிக்கப்பட்ட பிரம்மாண்டமான மேம்பாலம் ஒன்று பத்திரிகை விளம்பரங்களில் இடம்பெற்றது. உண்மையில் அது கொல்கத்தாவிலுள்ள மேம்பாலமாகும். ஏற்கெனவே திரிணாமுல் காங்கிரஸுக்கும் பா.ஜ.க.வுக்கும் ஏழாம் பொருத்தம். இந்த விளம்பரத்தைப் பார்த்த திரிணாமுல் காங்கிரசின் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி ட்விட்டரில், “"யோகி ஆதித்யநாத் தலைமையில் உத்தரப் பிரதேசத்தை மாற்றுவதென்பது, மேற்கு வங்கத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள உள் கட்டமைப்பு படங்களைத் திருடி அதனை தன்னுடைய சாதனையாக விளம்பரம் செய்து கொள்வ தாகும்'’என்று பா.ஜ.க.வின் கோவணத்தை வெட்டவெளியில் வைத்து உருவிவிட்டார்.

Advertisment

பா.ஜ.க. கட்சி தவிர்த்த பிற கட்சிகள் ஆட்சி நடை பெறும் மாநிலங்களிலுள்ள பிரபலமான கட்டங் களையும், இந்தியா வைத் தாண்டி வெளிநாட்டிலுள்ள கட்டடங்களையும் பா.ஜ.க. ஆட்சியின் சாதனை என சொல்லிக்கொள்வது வழக்கம். அதனை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தி, "அடுத்தவர் பிள்ளைக்கு உங்கள் இனிஷியலா?' என்று கேட்டாலும் பா.ஜ.க. வெட்கப்பட்டதே இல்லை. சமூக வலைத்தளத்தில் இருந்து தற்போது பத்திரிகை விளம்பரத்தில், பிறரின் சாதனையை தங்கள் சாதனையாக பா.ஜ.க .தரப்பு அறிவிப்பு வெளியிடுவது இதுவே முதல்முறை.

விவகாரம் சர்ச்சையானதும், கட்சி சார்பிலிருந்து வருத்தம் வருவதற்குப் பதில் அந்த விளம்பரத்தை வெளியிட்ட செய்தி நிறுவனத்தின் மார்கெட்டிங் பிரிவு, விளம்பரத்தில் கவனக்குறை வாக தவறான படம் சேர்க்கப்பட்டுள்ளதாக வருத்தம் தெரிவித்துள்ளது.

என்னதான் பத்திரிகை விளக்கமும் வருத்த மும் வெளியிட்டாலும், சமூக ஊடகங்களில் பா.ஜ.க.வின் எதிர்த்தரப்பினர், ரோமியோ ஸ்குவாடு அமைப்பதிலும், மாமிசத்தின் பேரைச் சொல்லி அப்பாவிகளைக் குத்திக் கொல்வதிலும் மட்டுமே கவனம்செலுத்தி பிற விஷயங்களில் கோட்டை விடுகையில் இப்படித்தான் ஆகும் என திருவிழா கொண்டாடிவருகின்றனர்.

Advertisment