“நெனச்சத சாதிச்சிட்டாங்க சுந்தராம்பாள்...’என்று மார்தட்டுகிறார்கள், ராஜபாளையம் பெருநகராட்சியில், அவருக்கு வேண்டியவர்கள்.

Advertisment

சுந்தராம்பாள் யார்? எதற்காகப் பாராட்டு?

dd

தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதும், பல்வேறு துறை அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். நகராட்சி ஆணையர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அந்தவகையில், ராஜபாளையம் நகராட்சி ஆணையரான சுந்தராம்பாளுக்கு, நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அலுவலகம், கொடைக்கானலுக்கு இடமாற்றம் செய்து ஆணை வழங்கியது. சுந்தராம்பாளோ, ‘என்னை யாருன்னு நெனச்சே?’ என்கிற ரீதியில், உத்தரவுப்படி கொடைக் கானல் போகாமல், ராஜபாளையத்தில் இருந்துகொண்டே, டென் டர் விவகாரங்களைக் கவனித்ததோடு, கோப்புகளிலும் கையெழுத் திட்டு வந்தார். இவரை, ராஜபாளையம் தி.மு.க. எம்.எல்.ஏ. தங்க பாண்டியன் நேரடியாகவே ஆதரித்து ‘இந்த டிரான்ஸ்பர் ஆர் டரை கேன்சல் செய்வதெல்லாம் ஒரு விஷயமே கிடையாது. நான் ராஜேந்திரபாலாஜியை தோற்கடித்தவன். கஷ்டப்பட்டு ஜெயிச்சு எம்.எல்.ஏ. ஆனவன்''’என்று கூறியிருக்கிறார்.

Advertisment

இதனையறிந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் ரவி, ‘"ராஜபாளையம் நகராட்சி நிர்வாகத்தை சுந்தராம்பாள் சரியாக நடத்தவில்லை. இங்கே எதுவும் சரியில்லை. இடமாற்ற உத்தரவை உதாசீனப்படுத்தி, வீட்டில் இருந்துகொண்டே கோப்புகளில் கையெழுத்திடுகிறார். தன்னை அரசிற்கும், நிர்வாகத்திற்கும் மேம்பட்டவராகக் கருதுகிறார். இடமாற்ற ஆணையை ரத்து செய்ய பல வழிகளிலும் முயற்சிக்கிறார். இவர் ஆணையராக நீடிப்பது ராஜபாளையம் நகருக்கு நல்லதல்ல'' என்று அறிக்கை வாயிலாக எதிர்ப்பு தெரிவித்தார். இதுகுறித்து, நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவிடமும் புகார் அளிக்கப்பட்டது.

சுந்தராம்பாள் கொடைக்கானல் போகமாட்டேன் என்று அடம் பிடித்ததால், கொடைக்கானல் நகராட்சி ஆணையர் நாராயணனால், மானாமதுரை நகராட்சியில் பொறுப்பேற்க முடியவில்லை. மானாமதுரை நகராட்சி ஆணையர், தனக்கு வழங்கப்பட்ட இடமாற்ற உத்தரவுக்கு கீழ்படிய இயல வில்லை. ஆக, ராஜபாளையம், கொடைக்கானல், மானா மதுரை ஆகிய மூன்று நகராட்சிகளுமே தொங்கலில் விடப் பட்டன. இதுகுறித்து ராஜபாளையம் நக ராட்சி ஆணையர் சுந்தராம்பாளின் கருத்தை அறிய, தொடர்ந்து தொடர்புகொண்டோம். நம்மை ஏனோ தவிர்த்தார். குறுஞ்செய்தி அனுப்பியும் பதிலில்லை.

Advertisment

இறுதிச்சுற்றில், சுந்தராம்பாள் வெற்றிக்கனியைப் பறித்துவிட்டார். சுந்தராம்பாள் (ராஜபாளையம்) மற்றும் நாராயணன் (கொடைக்கானல்) ஆகியோ ருக்கு வழங்கப்பட்ட இடமாற்ற உத்தரவை ரத்து செய்து, தற்போதுள்ள நகராட்சி களிலேயே தொடர்ந்து பணியாற்றலாம் என்று உத்தரவிட்டிருக்கிறார், நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா.

‘சுந்தராம்பாள் டிரான்ஸ்பர் விவ காரத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். தலையிட்டும், எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன் ஸ்கோர் பண்ணிவிட்டார். அந்த அளவுக்கு மேலிடத்தில் செல்வாக்கு இருக்கிறது’ என தி.மு.க. வட்டாரத்திலேயே பேச, தங்கப் பாண்டியனைத் தொடர்புகொண்டோம்.

"ஆணையர் சுந்தராம்பாள் நேர்மை யானவர். கறாராக நடந்துகொள்பவர் என்பதால் காழ்ப்புணர்ச்சி அரசியல் பண்ணுகிறார்கள். வேறு ஆணையர் வந்தால், ஆதாயம் அடையலாம் என்ற எண்ணத்துடனே புகார் அளித்தார்கள். ராஜபாளையத்தில் பாதாள சாக்கடைத் திட்டம், மேம்பால பணிகள், கூட்டுக் குடிநீர் திட்டமெல்லாம் நிலுவையில் இருக்கிறது. இன்னொரு புது ஆணையர் வந்து, திட்டங் களைப் புரிந்து அவர் செயல் படுத்துவதற்கு கால தாமத மாகும் என்ப தால், இவரே நீடிக்கட்டும் என்று மக்கள் நலனில் அக்கறை கொண்டு சிந்தித்தோம். அதனால்தான், அவரே தொடர்ந்து ஆணையராக ராஜபாளையத்தில் செயல்படவிருக்கிறார். அமைச்சரும், மாவட்ட செயலாளருமான கே.கே.எஸ்.எஸ்.ஆரின் வழிகாட்டுதல்படியே நடக்கிறோம். அவரை எதிர்த்து தி.மு.க.வில் யாரும் அரசியல் பண்ணவில்லை''’என்று மறுத்தார்.

யார் ஜெயித்தார்கள் என பட்டிமன்றம் வைக்காத குறையாக, இந்த இடமாற்ற உத்தரவு குறித்து விவாதிக்கிறார்கள் ராஜபாளையத்தில்.

_________________________

மன்னார்குடி நகராட்சி ஆணையர் விளக்கம்!

அபராத வசூல் 20 ஆயிரம்! -நகராட்சிக்கு 2ஆயிரம்தான்!... "மன்னார்குடி கோல்மால்' என்ற தலைப்பில் மன்னார்குடி நகராட்சியில் நடந்த முறைகேடுகள் குறித்த நக்கீரனில் வெளியான கட்டுரைக்கு விளக்கமளித்துள்ளார் நகராட்சி ஆணையர் ரா.கமலா. அதில், "நகராட்சி சார்பில் வசூலிக்கப்பட்ட அபராதத் தொகைக்கும், நகராட்சிக்கு செலுத்தப்பட்ட தொகைக்கும் உள்ள வித்தியாசம் குறித்து ஆய்வு செய்யவேண்டும்' எனத் துப்புரவு ஆய்வர் தெரிவித்ததையடுத்து, அது குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது. தனியார் ஒப்பந்ததாரரான ஜெ.கார்த்தி என்பவரின் வசூல் புத்தகத்தின்படி அபராதக் கட்டணத் தொகை 9 லட்சத்து 89 ஆயிரத்து 420 ரூபாய் நகராட்சிக் கணக்கில் செலுத்தப்பட்டது 5 லட்சத்து 46 ஆயிரத்து 190 ரூபாய். இதுகுறித்த விசாரணையில், வசூலித்த தொகையைவிட குறைவாக செலுத்தியதை தனியார் ஒப்பந்ததாரர் ஜெ.கார்த்தி ஒப்புக்கொண்டார்.

இதனையடுத்து, கணக்கில் குறைந்த 4 லட்சத்து 43 ஆயிரத்து 230 ரூபாயை 3 தவணைகளில் தனியார் ஒப்பந்த தாரரால் நகராட்சி அலுவலகக் கருவூலத்தில் செலுத்தப் பட்டது. மக்களிடமிருந்தும் வணிக நிறுவனங்களிடமிருந்தும் வசூலித்த தொகையை முழுமையாக செலுத்தாமல், நகராட்சி நிர்வாகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்திய கார்த்திக், ஒப்பந்த பணியிலிருந்தும் உடனடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதே நேரத்தில், "இந்த முறைகேட்டில் தொடர்பில்லாத பணியாளர்கள் குறித்தும் தங்கள் கட்டுரையில் தவறான செய்திகள் இடம்பெற்றுள்ளதை கவனத்திற்கு கொண்டு வருகிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.

(ஆர்.)