கடலூர் மாவட்டம் விருத்தாசலம், மணலூரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகனான 17 வயது நவீன், கஞ்சா போதையில் அதே பகுதியைச் சேர்ந்த விஜய் என்பவரது மனைவி சித்ராவை அடிக்கடி கேலி, கிண்டல் செய்துவந்துள்ளார்.
கடந்த 9-ஆம் தேதி விஜய்யின் மனைவி சித்ரா கடைக் குச் சென்ற போதும் சித்ராவை நவீன் கிண்டல் செய் தார். இதை சித்ரா தனது கணவர் விஜய்யிடம் சொல்லவே, ஆத்திர மடைந்த விஜய் நவீனை அழைத் துத் தட்டிக்கேட்டுள்ளார்.
அப்போது இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட் டது. அப்போது கஞ்சா போதையிலிருந்த நவீன் மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து விஜய்யின் கழுத்தில் குத்திவிட்டு தப்பி யோடிள்ளார். ரத்த வெள் ளத்தில் கிடந்த விஜய்யை அருகில் இருந்தவர்கள் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், விஜய் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். நவீன் தானாகவே முன்வந்து விருத்தாச்சலம் காவல் நிலையத்தில் சரணடைந் தார்.
இந்த சம்பவத் திற்கு 2 நாட் களுக்கு முன்பு நவீன் நண் பர்களுடன் அதே பகுதியில், கஞ்சா போதை யில் பெண்களை கேலி, கிண்டல் செய்ததாக அப்பகுதிவாசிகள் புகார் தெரி வித்தனர். அவர்களைப் பிடித்துச் சென்ற போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்துள்ளனர். இரண்டாவது நாளே மீண்டும் கஞ்சா போதையில் பெண்களை கேலி, கிண்டல் செய்ததுடன் ஒரு குடும்பத் தலைவரையும் குத்திக் கொலைசெய்துள்ளான் நவீன்.
தற்காலத்தில் 15 வயதிலிருந்து 25 வயதுக்குட்பட்ட மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளது.
கடலூர் மாவட்டத்தி லேயே 13-ஆம் தேதி காட்டுமன்னார்கோயில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்துவந்த மோகூரை சேர்ந்த தங்கப்பாண்டியன், ராகுல், பரணிதரன் ஆகிய மூன்று பேரை கைது செய்த போலீசார், அவர்களி டமிருந்து 150 கிராம் எடையுள்ள 15 கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் அதே நாளில் சிதம்பரத்தில் போலீசார் வாகன சோதனை நடத்தியபோது, அரசு கலைக் கல்லூரியில் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்துவரும் சி.மேலவன்னியூரைச் சேர்ந்த பூவரசன், 250 கிராம் கஞ்சா வைத் திருந்ததைக் கண்டுபிடித்த போலீசார் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். சிதம்பரம் கிளைச் சிறைக்கு கொண்டுசெல்லும்போது தப்பியோடிய அவரைப் பிடித்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். கடந்த ஒரு வாரத்திலேயே கடலூர் மாவட்டத்தில் கஞ்சா பயன்படுத்திய, கஞ்சா விற்பனை செய்த, கஞ்சாவால் சமூகவிரோதச் செயல்களில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.
இளைய தலைமுறையினரிடம் அதிகரித்து வரும் இந்த கஞ்சா பழக்கம் பெற்றோர்கள் மட்டுமல்லாது, சமூக ஆர்வலர்களிடையேயும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுபற்றி தமிழகம் முழுவதும் போதைப் பொருள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் சமூக ஆர்வலர் வழக்கறிஞர் அகிலன் கூறும்போது,
"தற்போது சமூகத்தில் மதுப் பழக்கம் மட்டுமல்லாமல் தடைசெய்யப்பட்ட கஞ்சா, புகையிலைப் பொருட்கள், மது மற்றும் போதை மாத்திரைகள், போதை ஊசிகளை இளைஞர்கள், மாணவர்கள், சர்வசாதாரணமாக உபயோகப் படுத்தி வருகின்றனர். சென்னை, கோயமுத்தூர், மதுரை, திருச்சி போன்ற பெருநகரங்கள் மட்டுமல்லாது... கடலூர், விருத்தாசலம், சிதம்பரம் போன்ற நகரங்களில் படிக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மத்தியிலும் புழக்கத்தில் உள்ளது. குற்ற சம்பவங்கள், கொலைகள், வழிப்பறி போன்றவற்றுக்கு மூலகாரணமாக இருக் கக்கூடிய போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தல் சம்பவத்தில் ஈடுபடு பவர்கள் மீது கடுமை யான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தடுக்க முடியும்'' என்றார்.
"மாணவர்களைக் குறிவைத்து ஒருவர் 10 புதிய வாடிக்கையாளர்களை அறிமுகப்படுத்தினால் ஒரு மாதத்திற்கு இலவச மாக கஞ்சா பொட்டலங்கள் வழங்கப்படும்' என்று அபாய வலைக்குள் சிக்கவைக்கப்படுவ தாக பின்னணியை அறிந்தவர்கள் கூறுகிறார் கள். தெருவுக்குத் தெரு அதிகரித்துவரும் கஞ்சா குடி இளைஞர்களால் அப்பகுதி பெண்கள் வீதியில் சுதந்திரமாக நடமாட முடியவில்லை. காவல் நிலையத்தில் புகார்கள் கொடுத்தால் கூட போலீசாரும் கஞ்சா குடி இளைஞர் களைக் கண்டிக்காமல், "தேவையில்லாமல் ஏன் வம்பை விலைக்கு வாங்குகிறீர்கள்? கண்டும் காணாமல் சென்றுவிடுங்கள்' என்று சொல்லியனுப்புகிறார்கள். இதனால் கஞ்சா குடி இளைஞர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து விளக்கமறிய கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராமை தொடர்புகொண்டோம், "கஞ்சா புழக்கத்தை தடுப்பது தொடர்பான தொடர் நடவடிக்கைகளை மாவட்ட காவல்துறை எடுத்து வருகிறது. கஞ்சா விற்பனை செய்வோர், கஞ்சா பயன்படுத்துவோர் மீது வழக்குகள் பதியப்படுவது மட்டுமல்லாமல், அவர்களுக்கு எங்கிருந்து கிடைக்கிறது? எனவும் தொடர் விசாரணை நடத்தப்பட்டு, முற்றிலும் தடுப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. போதையின் தாக்கத்தால் பெண்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாவண்ணம் தனிக்கவனம் செலுத்தப்பட்டு காவல்துறை நடவடிக்கை எடுக்கிறது. கல்லூரி, பள்ளிகளிலும் சமூக அமைப்புகளை இணைத்துக்கொண்டு காவல்துறை சார்பாக மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறோம்'' என்றார்.