செங்கல்பட்டு மாவட்டம், நாவலூரை அடுத்துள்ளது பொன்மார். இங்கிருந்து மாம்பாக்கம் செல்லும் சாலையில் கடந்த டிசம்பர் 23-ஆம் தேதி, இரவு சுமார் 8 மணியளவில் ஒரு பெண்ணின் கதறல் சத்தம் கேட்டுள்ளது. அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் அங்குசென்று பார்த்துள்ளனர். அப்போது ஒரு இளம்பெண்ணின் கை, கால்கள் இரும்புச் சங்கிலியால் கட்டப்பட்டு, நெருப் பில் எரிந்துகொண்டு உயி ருக்குப் போராடும் நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி யடைந்தனர். தாழம்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் சொல்லியுள்ளனர்.
தகவலறிந்ததும் உட னடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல்துறை யினர், உயிருக்குப் போரா டிக்கொண்டிருந்த பெண் ணை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டுசென்ற னர். இளம்பெண்ணை சோதனை செய்த மருத் துவர்கள், ஏற்கெனவே அவர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த பெண் மதுரையைச் சேர்ந்த நந்தினி என்பது தெரியவந்தது.
நந்தினி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த நிலையில்... ஒரு செல்போன் நம்பரைக் கொடுத்திருந்தார். அந்த எண்ணை ட்ரேஸ் செய்து வெற்றி என்ற வெற்றிமாறனைப் பிடித்து விசாரணை செய்தனர்.
கைது செய்யப்பட்ட வெற்றிமாறனிடம் நடந்த விசாரணையில், நீண்ட நாட் களாக நந்தினியைக் காதலித்து வந்துள்ளதும், நந்தினியோ கடந்த ஒரு வருடமாக ராகுல் என்ற வேறு நபருடன் பழகியதால் இந்தக் கொலையை செய்ததாகவும் வெற்றிமாறன் தெரிவித்தான். பிறந்த நாள் பரிசு தருவதாகக் கூறி, நந்தினியை அழைத்துச்சென்ற வெற்றிமாறன், ஓ.எம்.ஆர். சாலையில் சுற்றிவிட்டு கடைசியில் பெட்ரோலை ஊற்றி எரித்து கொடூரமாக கொலை செய்தது விசா ரணையில் அம்பலமானது.
மேலும் விசாரணை யில், வெற்றிமாறன் திருநம்பி என்பதும்... அவ ரது பெயர் பாண்டி மகேஸ் வரி என்பதும் தெரியவந் துள்ளது. நந்தினிக்கும் பாண்டிமகேஸ்வரிக்கும் தொடக்கத்தில் லெஸ்பியன் உறவு இருந்தநிலையில், நந்தினி மீதான காதலால் சிகிச்சை மூலம் தன்னை தோற்றத்தில் ஆணைப் போல மாற்றிக்கொண்டி ருக்கிறார் வெற்றிமாறன். ஆனால் நந்தினியோ ராகுலைக் காதலித்ததால், ஒருகட்டத்தில் வெற்றி மாறனிடமிருந்து விலக ,ஆத்திரத்தில் பழிவாங்க தருணம் பார்த்து இருந்துள்ளார் வெற்றி மாறன்.
இந்நிலையில்தான் நந்தினியின் பிறந்தநாளன்று ஆசிரமத்திலுள்ளவர்களுக்கு உணவிட்டு, நந்தினிக்கும் பரிசு தருவதாகக் கூறி அழைத்துச் சென்று, இந்த கொடூரமான கொலையை நிகழ்த்தியுள்ளதாக, இந்த வழக்கை விசாரித்த காவல் ஆய்வாளர் சார்லஸ் தெரிவித்தார்.