எனக்கு 2 சதவிகித கமிஷனைக் கொடு, அப்புறம் வேலையைப் பாரு.! அதையும் மீறி டெண்டர் எடுத்தால் பில்லை பாஸ் செய்ய மாட்டோம். மன்றத்தில் சிறப்புத் தீர்மானம் இயற்றி பிளாக் லிஸ்ட் செய்து விடுவோம்'' என ஒப்பந்ததாரர் கள் மிரட்டப்பட்டுள்ளனர். ஒப்பந்ததாரர்கள் மிரட்டப்பட்ட இடம் கோவை மேயர் அறை. மிரட்டியது, மேயரும் துணை மேயருமே!
கோவையில் மொத்தமுள்ள 100 வார்டுகளில் தனிப்பெரும்பான் மையாக 76 வார்டுகளை வென்று மேயர் நாற்காலியை கைப்பற்றியது தி.மு.க. இதில், மாநகர மேயராக கல்பனா ஆனந்தகுமாரும், துணை மேயராக வெற்றிச்செல்வனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மாநகராட்சியில் நிர்வாக ரீதியாக வார்டுகளின் அடிப்படையில் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு மற்றும் மத்திய மண்டலங் களாகப் பிரிக்கப்பட்டு மண்டலத் தலைவர்களும் நியமிக்கப்பட்ட நிலையில், இதுவரை ஏறக்குறைய ரூ.800 கோடி மதிப்பிலான சாலைகள், சிறு பாலங்கள், குடிநீர், கழிவுநீர் வாய்க்கால், காய்கறி, பழச் சந்தைகள் என பணிகள் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு ஆன்லைன் டெண்டரை ஊக்கப்படுத்திய நிலை யில், லைசென்ஸ் பெற்றுள்ள புதிய புதிய ஒப்பந்ததாரர்கள் பணிகளைப் பெற்று விரைந்து முடித்திருக்கின்றனர். குறிப் பிட்ட சிலரைத் தவிர பலருக்கும் கமிஷன் கிடைக் காத சூழலில் மேயரும், துணைமேயருமாக கமிஷன் கேட்டு மிரட்டியது வெளி யாகியுள்ளது.
"முறையான லைசென்ஸ் பெற்று தொழில் செய்யும் ஒப்பந்ததாரர்களான சுமார் 280 பேரும் புதன்கிழமையன்று மேயரை சந்திக்க வேண்டு மென அழைப்பு விடுக்கப் பட்டிருந்தது. எதுக்கு கூப்பிடுகிறார்கள் எனத் தெரியாமல் என்னைப்போல் 46 நபர்கள் மட்டுமே கார்ப்பரேஷன் பில்டிங்கி லுள்ள மேயரின் அறைக்கு வந்திருந்தோம். சரியாக 3.30 மணிக்கெல்லாம் வந்து துணைமேயருக்காக எங்க ளோடு சேர்ந்து காத்திருந்தார் மேயர் கல்பனா ஆனந்தகுமார். சுமார் அரை மணி நேரம் கழித்து துணைமேயர் வெற்றிச்செல்வன் வந்த நிலையில் கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் "யாரும் அதிகமாக வேலை எடுக்கக்கூடாது. இன்ன வேலை வேண்டுமென்றால் எங்களை வந்து பாருங்கள். நாங்கள் சொன்ன பிறகே ஆன்லைனில் டெண்டரை போடுங்க. அவிநாசி ரவி சொன்னாக... அவுக சொன்னாக, இவுக சொன்னாக என ஆன்லைனில் டெண்டரை போடக்கூடாது. எங்களுக்கு 2 சதவிகித கமிஷன் கொடுத்திடுங்க.. அதையும் மீறி ஆன்லைனில் டெண்டர் போட்டு வேலை எடுத்தீர்கள் என்றால், பில்லையும் பாஸ் செய்யமாட்டோம். மன்றத்தில் தீர்மானம் இயற்றி உங்களை பிளாக் லிஸ்ட்டில் வைத்து விடுவோம்''" என மிரட்டினர் மேயரும், துணைமேயரும்' என்றார் கூட்டத்தில் கலந்து கொண்ட ஒப்பந்ததாரர் ஒருவர்.
சுமார் முக்கால் மணி நேரம் நடந்த மிரட்டல் கூட்டத்தில்,
"ஏற்கனவே கவுன்சிலர், மண் டலத்தலைவர், உதவி பொறியாளர், உதவி நிர்வாக பொறியாளர், நிர்வாக பொறியாளர், மாநகர பொறியாளர் வரைக்கும் கமிஷன் கொடுத்துத் தான் இந்த வேலையை பார்க் கின்றோம். இப்ப இதில் நீங்கள் வேறு கேட்கிறீர்கள்.? என்ன செய்வது..? இப்படியெல்லாம் கமிஷன் கொடுப்பதை நிறுத்தவே குறைந்தபட்ச மதிப்பீட்டில் வேலை எடுத்து பார்க்கின்றோம். இது கூடுதல் சுமைதானே..?'' என ஒப்பந்ததாரர்கள் கேள்வியெழுப் பிய நிலையில், "அது உங்கள் பாடு.! நீங்கள் வேலை செய்யணும் என்றால் கமிஷன் வேண்டும்'' என மேயர், துணைமேயர் அழுத்தந்திருத்த மாக கூறியதாக குறிப்பிடுகிறார் கள்
கூட்டத்தில் கலந்துகொண்ட ஒப்பந்ததாரர்கள். தொடர்ச்சியாக, "அமைச்சர் தரப்பு தலையிட்டால் என்ன செய்வது..?'' என்றதற்கு "அதைத்தான் துவக்கத்திலேயே கூறிவிட்டேன். அவுக சொன்னாக.! இவுக சொன்னாக! என சொல்லக்கூடாது என்று' என பதில் வந்திருக்கின்றது மேயரிடமிருந்து.
இதுகுறித்துக் கருத்தறிய மேயர் கல்பனா ஆனந்த குமாரைத் தொடர்புகொண்டோம். அழைப்பை எடுக்க வில்லை.
துணைமேயர் வெற்றிச்செல்வனோ, "ஆன்லைன் டெண்டரை ஆறிலிருந்து ஏழு சதவிகிதம் வரை லெஸ்ஸில் (குறைந்தபட்ச மதிப்பீட்டில்) எடுத்து வேலை செய்கிறார்கள். அது தரமில்லாமல் இருக்கின்றது. இதுவரை 3000க்கும் அதிகமான சாலைப் பணிகள் நடந்துகொண்டிருக்கின்றது. தரமில்லாமல் இருக்கின்றது. அதனால் இந்தக் கூட்டம்.! மற்றபடி கமிஷன் கேட்டார்கள் என்பது 200 சதவிகித பொய்''" என்றார் அவர்.
"பணியின்போது ஒவ்வொரு ஸ்டேஜிலும் பலரும் வந்து ஆய்வுசெய்த பின்னரே பில்லை பாஸ் செய்கிறார்கள். இதில் எப்படி குறை கண்டுபிடித்தார்கள் மேயரும், துணைமேயரும்.! கமிஷனுக்காக போடும் நாடகம் இது'' என்கின்றனர் விபரமறிந்தவர்கள்.