"ஹலோ தலைவரே... அப்பா வாங்கிக் கொடுத்த உரிமையில் பல மாநில முதல்வர்களும் தேசியக்கொடியை ஏற்றிய நிலையில், 50 ஆண்டுகால அரசியல் அனுபவத்தின் மூலம் கிடைத்த ஆட்சியினால், கோட்டைக் கொத்தளத்தில் மகன் கொடியேற்றிய வரலாற்று நிகழ்வு இந்த ஆகஸ்ட் 15 அன்று நடந்தது.''”
"ஆமாப்பா.. கலைஞர் வாங்கித் தந்த உரிமையில் மு.க.ஸ்டாலின் கொடியேற்றியதைத்தானே சொல்றே?''”
"ஆமாங்க தலைவரே.. அ.தி.மு.க சைடில் இருந்து ஒரு தகவல் சொல்றேங்க தலைவரே... ரெய்டுகள் முடிவடைந்த நிலையில், தன் சொந்த ஊரான கோவைக்குக் கிளம்பிய வேலுமணி, அங்குள்ள கட்சிப் பிரமுகர்களை முன்னதாகவே தொடர்புகொண்டு, சசிகலா சிறையில் இருந்து வந்தப்ப லட்சக்கணக்கில் ஆளுங்களைத் திரட்டி வரவேற்பு கொடுத் தாங்க. அதுபோல, ரெய்டு முடித்து வரும் மாவீரனான எனக்கு கோவை ஏர் போர்ட்டில் வரவேற்பு தரணும்னு சொல்லியிருக்காரு. ஷாக்கான கட் சிப் பிரமுகர்கள் இதை எடப் பாடி கவனத்துக் குக் கொண்டு போயிருக்காங்க.''”
"எடப்பாடியின் ரியாக்ஷன் என்னவாம்?''”
"கட்சிக்குத் தலைவர் நானா, வேலுமணியான்னு ஷாக்கான எடப்பாடியே வேலுமணியைத் தொடர்பு கொண்டு, இது பற்றி கேட்டிருக் காரு. வேலுமணியோ, "கொங்கு மண்டலமே இப்ப என் கைலதான் இருக்கு. அந்தளவுக்கு பணத்தை அள்ளி இறைத்தவன் நான்தான்''னு சொல்லியிருக்காரு. எடப்பாடி மேலும் டென்ஷனாயிட்டாரு. "இது சரியில்லையே''ன்னு அவர் சொல்ல... வேலுமணி பதிலுக்கு, "நான் நினைச்சா, இப்பவே கட்சியை உடைப்பேன். என் பலம் உங்களுக்கே முழுசாத் தெரியாது''ன்னு, அவரிடமே மிரட்டலாச் சொன்னாராம். சரி, "உங்க இஷ்டப்படி வரவேற்பு ஏற்பாடுகளை செய்யுங்க''ன்னு எடப்பாடியும் சொல்லிட்டாராம். அதற்கப்புறம், தங்கமணி உள்ளிட்ட கொங்கு பிரமுகர்களிடமும் எடப்பாடி பேசுனப்ப, "ஊழல் பண்ணி நடவடிக்கைக்கு ஆளாகறவங்க அத்தனை பேருக்கும் வரவேற்பு கொடுக்கணும்னு சொன்னா, இது என்ன கட்சியா? கொள்ளைக் கும்பலா?''ன்னு கேட்டிருக்கார். "வேலுமணிக்கு நீங்க கொடுத்த இடம்தான் இதற் குக் காரணம்'னு அவங்க சொல்லியிருக்காங்க.''”
"இதுவும் வேலுமணிக்குத் தெரியும்ல?''”
"அவர் அலட்டிக்கலை. தன்னைக் காப்பாத் திக்கிறதுக்காக ஜக்கி வாசுதேவ், வானதி சீனிவாசன் மூலமா பா.ஜ.க. மேலிடத்தையும், லாட்டரி மார்ட் டின் குடும்பம் மூலமா தி.மு.க. தரப்பையும் கான்டாக்ட் பண்ணிக்கிட்டிருக்காராம் வேலுமணி. ஆனால் இதுவரை பெருசா எந்த ரெஸ்பான்ஸும் இல்லையாம்.''”
"பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரி களை, ஸ்டாலின் கண்காணிக்கச் சொல்லியிருக் கிறாராமே?''”
"உண்மைதாங்க தலைவரே... அதிகாரிகள் பலரும், குறிப்பாக ஐ.பி.எஸ். அதிகாரிகளில் ஆண் -பெண் இரு தரப்பிலிருந்து பலரும் அ.தி.மு.க. மாஜிக்களோடு ரகசிய தொடர்பில் இருப்பதாக முதல்வர் காதுக்குத் தகவல்கள் போயிருக்கு. அதனால் யார், யார் இப்படி எதிர் முகாமினரோடு நட்பில் இருக்கிறார்கள் என்பதை முதல்வர் ஸ்டாலின் தெரிந்துகொள்ள விரும்புகிறாராம். அதன் அடிப்படையில் டிரான்ஸ்பர் ஆர்டர்கள் விரைவில் வரும்னு கோட்டை வட்டாரம் சொல் லுது. இங்கே இப்படின்னா, தி.மு.க. எம்.பி.க்கள் சிலர், ஒன்றிய பா.ஜ.க. அமைச்சர்கள் பலரிடமும் நெருக்கம் பாராட்டித் தனிப்பட்ட காரியங்களை செய்துமுடித்துக் கொள்கிறார்களாம். இதுபற்றி ஒவ்வொரு அமைச்சகத்திலும் பிரதமர் அலுவலகம் விசாரிக்குதாம். "இந்த விசாரணை எதற்குன்னு தெரியலை' என்கிறது டெல்லித் தரப்பு.''”
"சசிகலாவுக்கு சிக்கல் வரும் போலிருக்கே?''”
"கர்நாடக சிறையில் சசிகலா அடைக்கப்பட்டி ருந்த காலத்தில், அங்குள்ள சிறை அதிகாரிகளைப் பணத்தால் சரிக்கட்டி சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததோடு, அங்கே ஷாப்பிங் வரை சென்று வந்து பரபரப்பை ஏற்படுத்தினார். இப்படிப்பட்ட சசிகலாவின் தில்லுமுல்லுகளை, அப்போதைய சிறைத்துறை உயரதிகாரியான ரூபா கண்டுபிடிக்க, அது பெரும் திகைப்பை அப்போது ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தை விசாரிக்க கமிஷனும் அமைக் கப்பட்டு, அதன் ரிப்போர்ட்டும் கர்நாடக அரசின் கைக்கு வந்துவிட்டது. இந்த நிலையில், அந்த விவ காரம் தொடர்பான வழக்கைத் துரிதப்படுத் தணும்னு, இங்கி ருந்தே தூண்டிவிட்டி ருந்தார் எடப்பாடி. இதைத் தொடர்ந்து, சசி விவகாரத்தில் தொடர்புடைய அப் போதைய கர்நாடக சிறைத்துறை அதிகாரி கிருஷ்ணகுமார் வீடுகளில் அண்மை யில் ரெய்டுகள் நடத் தப்பட்டிருக்கு. ஆனால் சசி தரப்போ, "இந்த விவகாரத் துக்கும் எங்கள் மீதான வழக்கிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை' என்கிறதாம்.''”
"தமிழக காங்கிரஸ் தலைமைப் பதவியில் மாற்றம் வரும்னு டெல்லியில் பேச்சு அடிபடுதே?''”
"தமிழக காங்கிரஸைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் தொடங்கி, எம்.பி.க்கள் வரை பலரும் டெல்லியில் டேரா போட்டு, கே.எஸ்.அழகிரியை மாற்றியாக ணும்னு கட்சித் தலைமையிடம் நிர்பந்தம் செய்து வருகிறார்களாம். இதைத்தொடர்ந்து தமிழக காங்கிரஸுக்கு புதிய தலைவராக யாரைத் தேர்ந் தெடுக்கலாம்ங்கிற யோசனை கட்சித் தலைமைக்கும் வந்துடுச்சாம். இந்த நிலையில், கார்த்தி சிதம்பரம், இதற்கான ரேசில் இருக்கிறார். அவரை நியமித்தால் பணப் புகார்கள் வராதுன்னு அவர் தரப்பு, கட்சி யின் டெல்லி சீனியர்களிடம் வேப்பிலையடித்து வருகிறது. பிரியங்காவும் "கார்த்திக் ஓ.கே.' என்கிறா ராம். ஆனால் ராகுல் காந்தியோ, "கரூர் ஜோதிமணி யை தலைவராக நியமித்தால், பெண்கள் மத்தியில் ஈர்ப்பை ஏற்படுத்தலாம்'னு நினைக்கிறாராம். ஜோதிமணி சமீபத்தில் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை எதிர்த்து, இட ஒதுக்கீட்டு விவ காரத்தில் பேசியதை அமைச்சர் செந்தில்பாலாஜி மூலம் அறிந்த முதல்வர் ஸ்டாலின், ஜோதிமணிக்கு போன் போட்டு பாராட்டினாராம்.''”
"பா.ஜ.க.வுக்கு எதிரா சோனியா காந்தி, இன்னொரு பாய்ச்சலுக்குத் தயாராகிறாரேப்பா?''”
’"ஆமாங்க தலைவரே... மோடி தலைமையிலான பா.ஜ.க., அங்கங்கே மாநில அரசியலுக்குள் மூக்கை நுழைத்து, குட்டையைக் குழப்பி மீன்பிடித்து வருவதைக் கண்டு, காங்கிரஸ் கட்சி கடும் அதிருப்தியில் இருக்கிறது. அதனால் பா.ஜ.க. வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியை மீண்டும் சோனியாகாந்தி கையிலெடுக்க நினைக்கிறார். இப்படிப்பட்ட முயற்சிகள் ஏற்கனவே பல முறை நடந்தும், அவை சக்சஸ் ஆகவில்லை. அத னால் இந்தமுறை மிகவும் கவன மாகக் காய் நகர்த்த அவர் நினைக்கிறார். இந்த முயற்சியில் தன்னோடு மம்தா பானர்ஜியும், மாயாவதியும் மனப்பூர்வமாகக் கைகொடுக்க வேண்டும் என்றும் அவர் எதிர்பார்க்கிறார். எனவே, வரும் 20-ந் தேதி ஒரு பார்ட்டிக்கு ஏற்பாடு செய்துள் ளார் சோனியா. இதில் அவசியம் கலந்து கொள்வதாகச் சொல்லி யிருக்கிறாராம் மம்தா.''”
"நானும் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். கைலாசா என்னும் தீவில் இருப்பதாகச் சொல்லிக்கொண்டு தலை மறைவு வாழ்க்கை வாழ்ந்துவரும் ஆபாச சாமியார் நித்தியானந்தா, ஏற்கனவே மதுரை ஆதீன மடத்தைக் கைப்பற்ற முயற்சி செய்து, ஆதீன பக்தர்களால் துரத்தியடிக்கப்பட்டார். தற்போது, மதுரை ஆதீனம் மறைந்த தகவலை அறிந்த நித்தி, அவருக்காகத் தனது தீவில் ஒருவாரம் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என்றும், கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கும் என்றும் அறிவித்திருப்பதோடு, தான்தான் மதுரை ஆதீனத்தின் உண்மையான வாரிசு என்று அறிவிக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவும் ஆயத்தமாகி வருகிறாராம். "எரிகிற வீட்டில் நித்தி பீடி பத்தவைக்கப் பார்க்கிறார்... அதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்' என்கிறார்கள் ஆதீன பக்தர்கள்.''”