பா.ஜ.க ஆட்சியில் கடந்த 2017 பிப்ரவரி 15-ந் தேதி தமிழகத்தில் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அறிவித்தபோது 16-ந் தேதி நெடுவாசல் கடைவீதியில் தொடங்கிய போராட்டம் தமிழகம் தழுவிய அளவில் பரவியது. 22 நாட்கள் தொடர் போராட்டம் நடந்தது. அப் போது மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநில அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சியர் கணேஷ் ஆகியோர் தொடர்ந்து நடந்திய பேச்சுவார்த்தையில் திட்டம் கைவிடப்படுவதாக உத்திரவாதம் கொடுத்ததால் போராட்டம் முடிவுக்கு வந்தது. இதே காலக்கட்டத்தில் அருகில் உள்ள நல்லாண்டார்கொல்லை, கோட்டைக்காடு, வடகாடு ஆகிய ஊர்களிலும் போராட்டம் நடந்தது.

h

மத்திய அரசு கொடுத்த வாக்குறுதியை மறந்து ஜெம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து போட்டதால் ஏப்ரல் 12-ந் தேதி மீண்டும் நெடுவாசல் போராட்டம் தொடங்கியது. 174 நாட்கள் தொடர்ந்தது. அப்போது அந்தப் போராட்டத்தின்போது வடகாடு, கருக்காகுறிச்சி, நல்லாண்டார் கொல்லை, கறம்பக்குடி ஆகிய ஊர்களில் ஏற்கனவே ஓ.என். ஜி.சி.யால் அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணறுகளை பாதுகாப்பாக அகற்றி, நிலத்தை விவசாயிகளிடம் ஒப்படைக்க மாவட்ட ஆட்சியர் கணேஷ் எழுதிக்கொடுத்தார். போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்தப் போராட்டம் குறித்து கீரமங்கலம், வடகாடு, ஆலங்குடி காவல் நிலையங்களில் விவசாயிகள்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் 2019-ம் ஆண்டு காவிரி பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவித்தது. இந்த அறிவிப் பிற்குப் பிறகு, புதிய எண்ணெய் கிணறுகள் அமைக்கப்படாது என்று கூறியிருந்தனர்.

Advertisment

ஆனால் தற்போது ஜூன் 10-ந் தேதி மத்திய அரசு இந்தியா முழுவதும் 75 புதிய எரிவாயு கிணறுகளுக்கான டெண்டர் விட்டுள்ளது. அதில் தமி ழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் வட தெரு என்று ஒரு இடமும் மன்னார் வளைகுடா பகுதிகளையும் இணைத்திருந்தது.

இந்த தகவல் வெளியான நிலையில்... கருக்காகுறிச்சி வட தெருவில் உள்ள எண்ணெய் கிணற்றுக்கு எரிவாயு எடுக்க வராதே என்று கோட்டைக்காடு பகுதி விவசாயிகள் முதல்கட்டமாக அரை நிர்வாணப் போராட் டத்தை தொடங்கியுள்ளனர்.

கருக்காகுறிச்சி ஊ.ம. தலைவர் பாஞ்சாலன், "நெடு வாசல் திட்டம் அறிவித்த உடனேயே எங்கள் கிராம மக்களும் கோட்டைக்காடு சுற்றியுள்ள மக்களும் சேர்ந்து கோட்டைக்காடு சர்ச் எதிரில் போராட்டம் நடத்தினோம். அதன்பிறகு திட்டம் வராது என்றார்கள் நம்பினோம். ஆனால் அடுத்தடுத்து எங்களை ஏமாற்றி வருகின்றனர். இது பற்றி தமிழக முத லமைச்சர், சட்டத் துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச் சூழல் துறை அமைச் சர் மெய்யநாதன் கவனத்திற்கு கொண்டு போயாச்சு. இந்தத் திட்டம் வராதபடி தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. மீறினால் நெடுவாசல் போல விவசாயிகள் போராட்டம் வெடிக்கும்'' என்றார்.

Advertisment

hசி.பி.ஐ. ஆரோக்கியசாமி, "கரு வடதெருவில் கோட்டைக் காடு கிராம விவசாயிகள் நிலங்களை மண்ணெண்ணெய் எடுக்க என்று ஓ.என்.ஜி.சி. 25 வருடங்களுக்கு முன்பு வந்து கேட்டதால் குத்தகைக்கு கொடுத்தார்கள். ஆழமா போர் போட்டு மண்ணெண்ணெய் எடுத்து எங்க சர்ச்ல வச்சு சாமி கும்பிட்டாங்க. அப்பறம் செலவுக் குக்கூட எண்ணெய் கிடைக் காதுனு மூடிட்டுப் போனாங்க. 2017, பிப்ரவரியில் நெடுவாசல் திட்டம் அறிவிச்சதும் நாங்களும் காத்திருப்பு போராட்டம் நடத்தி னோம். அப்போதைய ஆட்சியர் கணேஷ் வந்து, இந்த ஆழ்குழாய் கிணற்றை மூடிக் கொடுப்பதாக எழுதிக் கொடுத்தார். ஆனால் அதன்பிறகும் மத்திய அரசு அடங்கல. இப்ப கொரோனா காலத்தில் மறுபடி எங்கள் நிலத்துல எரிவாயு எடுக்க டெண் டர் விட்டு எங்களை நிம்மதி இழக்க வச்சுட்டாங்க'' என்றார் போராட்ட உணர்வு குறையாமல்.

மத்திய அரசு, தமிழக தொழில்துறை அமைச்சருக்கு கோப்பு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியான நிலையில்... அமைச்சர் தங்கம் தென்னரசு விடம் பேசினோம். "எந்தக் கோப்பும் என்னிடம் வரவில்லை. அப்படி வந்தால் அதுபற்றி முதலமைச்சர் சரியான நட வடிக்கை எடுப்பார்'' என்றார்.

விவசாயிகள் சங்கத்தின் பி.ஆர்.பாண்டியன், "பாதுகாக்கப் பட்ட வேளாண் மண்டலத்தில் இது போன்ற செயலை நிறுத்திக் கொள்ள வேண்டும். மத்திய அரசு, விவசாயிகளை நிம்மதியாக வாழவிடாத செயலை செய்து வருகிறது. தமிழக முதலமைச்சர், பிரதமரை சந்திக்கும்போது இதுபற்றி பேசவேண்டும். அவசரமாக சட்டமன்றத்தைக் கூட்டி, "திட்டம் வரக்கூடாது' என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மாவட்ட அமைச்சர்களும் எம்.பி.க்களும் வலியுறுத்த வேண்டும்'' என்றார்.

g

திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர், இதுகுறித்த குறித்த கேள்விக்கு... "பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் இது போன்ற திட்டங்களை விவசாயி கள் காலங்காலமாக எதிர்த்துவருகின்றனர்; அரசாங்கமும் எதிர்க்கிறது. அதனால் மக்களின் கருத்து இல்லாமல் எதையும் செய்யக் கூடாது. மத்திய அரசு மறு பரிசீலனை செய்யவேண்டும். நான் மக்கள் பக்கம் நின்று எதிர்ப்பேன்'' என்றார்.

தமிழகத்தை மீண்டும் போராட்டக்களமாக்கிவிட்டது மத்திய அரசு. முதல்வரின் டெல்லி விசிட், ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்குமா?