ssன்னதான் பா.ஜ.க. பெருந் தலைகள் 400-க்கும் அதிகமான தொகுதி களில் ஜெயிப்போம்,… 380 தொகுதிகள் ஜெயிப்போம் என வீறாப்பாக ஊடகங் களிலும் மேடை களிலும் குரல் எழுப்பினாலும், கடந்த பத்தாண்டு ஆட்சியின் உண்மை நிலவரத்தை மக்களைப்போலவே பா.ஜ.க.வினரும் அறிந்திருப்பதால் அவர்கள் பதற்றத் தில்தான் இருக் கிறார்கள்.

டில்லி முதல் வரை அமலாக் கத்துறை வழக்கில் முடக்கி திகார் சிறைக்கு அனுப்பியாகிவிட்டது. மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யான மஹூவா மொய்த்ராவின் எம்.பி. பதவியை முடக்கியதோடு திருப்தியடையாமல் தற்போது அவர் போட்டி யிடுவதற்கு இடைஞ்சலாக பாராளுமன்றத்தில் பேச பரிசுப்பொருள் வாங்கிய வழக்கை மீண்டும் கையிலெடுத்திருக்கிறது. தெலுங்கானா முன்னாள் முதல்வர் மகள் கவிதா சிறையில். ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் சிறையில். தமிழகத்தில் ஆ.ராசா, கனிமொழியை இலக்காகக் கொண்டு 2 ஜி வழக்கு தூசுதட்டப்பட்டிருக்கிறது. இன்னும் இந்தியா கூட்டணியிலுள்ள அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் வீடுகளுக்கு வருமானவரித் துறை, அமலாக்கத்துறை ரெய்டு என அவர்களது எதிரிகளை முடக்கிவிட்டு, பா.ஜ.க. மட்டும் எந்தத் தொந்தரவுமின்றி தேர்தலை சந்திக்கிறது.

ss

இருந்தாலும் முந்தைய தேர்தல்களில் இல்லாத ஒரு தன்னம்பிக்கைக் குறைவு, என்ன ரிசல்ட் வரும் என்ற குடைச்சல் பிரதமரையும், உள்ளாட்சித் துறை அமைச்சரையும் அரித்துக்கொண்டே இருந்தது. இதனால் பிரதமருக்கு நெருக்கமான ஓய்வுபெற்ற உயர்அதிகாரிகளை உள்ளடக்கிய ஒரு குழுவை அமைத்து, தேர்தல் குறித்த மக்கள் மனநிலை என்ன, தங்களுக்கு மெஜாரிட்டி நிச்சயம்தானா என அவசர சர்வே ஒன்றை தேசிய அளவில் மேற்கொண்டது.

Advertisment

உள்ளபடி ரிசல்ட் என்னவோ, அதனைக் கூறும்படியும், கூட்டியோ குறைத்தோ சொல்லத் தேவையில்லை எனவும் சர்வே டீமுக்கு வலியுறுத்தப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கு முன் கிடைத்த அதன் ரிசல்ட்தான் பா.ஜ.க. பெருந்தலைகளைப் பதற வைத்துக்கொண்டி ருக்கிறது. எதிர்பார்த்ததுபோல் பா.ஜ.க.வுக்கு 400 தொகுதிகள் கிடைக்காது என்பதுடன் கூட்டணியுடன் சேர்த்துக்கூட மெஜாரிட்டி கிடைக்காது என சர்வே குழு எச்சரித்திருக்கிறது.

சர்வேயின் நுண்விவரங்கள் அலசப் பட்டு பாயிண்டுகளாக பிரதமரிடம் தரப் பட்டிருக்கிறது. அதன்படி, வட இந்தியாவில் கடந்த இரு தேர்தல்களைப் போல் பெருவாரியான வெற்றி கிடைக்காது. ஆவரேஜான வெற்றி மட்டுமே கிடைக்கும் என எச்சரித்திருக்கும் அந்த முன்னாள் அதிகாரிகள், பா.ஜ.க.வுக்கு எப்போதும் கைகொடுக்காத தென்மாநிலங்களிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லதென ஆலோசனை தந்துள்ளனர்.

கடந்தமுறை போலன்றி மேற்கு வங்காளத்தில் 20-க்கு நெருக்கமான தொகுதிகள் கிடைக்காது எனவும், எட்டுத் தொகுதிகள் கிடைத்தால் அதிகமெனவும் எச்சரித்துள்ளது. உ.பி.யில் இந்தமுறை 56 தொகுதிகள்தான். மோடியின் சொந்த மாநிலமான குஜராத், பீகார், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா போன்றவை ஓரளவு கை கொடுக்கும். இங்கே முறையே 23, 22, 25, 14, 20 தொகுதிகளை கூட்டணியுடன் சேர்ந்து வெல்ல வாய்ப்புள்ளதென அந்த சர்வே வெளிக்காட்டியுள்ளது.

Advertisment

s

வேறெந்தத் தேர்தலைவிடவும் தமிழகத்தில் இந்தத் தேர்தலில் பா.ஜ.க. அதீத ஆர்வம் காட்டிவருகிறது. ஏற்கெனவே நான்குமுறை தமிழகத்துக்கு வருகைதந்த பிரதமர் மோடி, இந்த சர்வேயின் ரிசல்ட்டால், இன்னும் நான்குமுறை தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களுக்கு பிரச்சாரத்துக்குச் செல்ல முடிவுசெய்துள்ளார்.

ஆனால், எத்தனைமுறை தமிழகத்தில் மோடி அங்கப்பிரதட்சணம் செய்தாலும், பா.ஜ.க. கூட்டணி தமிழகத்தில் அதிகபட்சமாக ஒரு தொகுதியை வேண்டுமானால் வெல்லலாம் எனத் தெரிவித்திருக்கிறது. 2 தொகுதிகளில் 3 லட்சத்துக்கு அதிகமான வாக்குகள் கிடைக்குமெனவும், 10 தொகுதிகளில் 2 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை வாங்குமெனவும், மற்ற தொகுதிகளில் டெபாஸிட் இழக்கும் எனவும் எச்சரித்துள்ளது. தி.மு.க. கூட்டணி தமிழகத்தில் போட்டியிடும் அனைத்துக் கட்சிகளைவிடவும் 8% வாக்குகள் அதிகம்பெற்று 38 தொகுதிகளை தட்டிச் செல்லும். யூனியன் பிரதேசமான புதுச்சேரி யைக்கூட காங்கிரஸ் வெல்லும் வாய்ப்பே அதிகமென எச்சரித்திருக்கிறது அந்த சர்வே.

இந்தியா முழுமைக்குமாக பா.ஜ.க. 217 தொகுதிகளிலும், அதன் கூட்டணிக் கட்சிகள் 44 தொகுதிகளிலும் வெல்லும் வாய்ப்புத் தெரிகிறது எனவும், மாறாக, காங்கிரஸ் 135 இடங்களிலும், இந்தியா கூட்டணியைச் சேர்ந்த கட்சிகள் 145 இடங்களிலும் வெல்லுமெனவும் அந்த சர்வே நெகடிவ் ரிசல்ட்டைத் தெரிவித்திருப்பது பா.ஜ.க.வின் உயர்மட்டத் தலைவர்களின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது.