செல்ஃபீ வித் இசைப்புயல்!

c

தொடர்ந்து ட்விட்டரில் சர்ச்சை கருத்துகளை வெளியிட்டு வந்தவர் நடிகை கங்கனா ரனாவத். பா.ஜ.க. அரசுக்கு ஆதரவாகவே பேசிவரும் இவர், சமீபத்தில் "ஆக்சிஜன் வேண்டுமென்றால் நிறைய மரங்களை நடுங்க' என்ற ரீதியில் சொன்ன கருத்து கடும் எதிர்ப்பைச் சந்தித்தது. இந்நிலையில் மேற்கு வங்க தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அங்கு நடந்த வன்முறைச் சம்பவங்களுக்கு மம்தா பேனர்ஜியை குற்றம் சாட்டியுள்ள கங்கனா, 2000 ஆண்டுகளின் தொடக்கத்தில் இருந்த ரூபத்தில் வந்து மோடி, மம்தாவை அடக்க வேண்டுமென்று ட்விட்டரில் பதிவிட்டார். அந்தக் காலகட்டத்தில் நடந்தவைதான் குஜராத் கலவரங்கள். கங்கனாவின் இந்த ட்வீட்டை வன்மம் நிறைந்ததாகக் கருதி, தொடர்ந்து இப்படிப்பட்ட கருத்துகளை வெளியிட்டு வரும் கங்கனாவின் கணக்கை முடக்கியுள்ளது ட்விட்டர்.

இளமை திரும்புதே...

Advertisment

c

"எஞ்சாய் எஞ்சாமி' பாடல் வைரல் ஹிட்டானதைத் தொடர்ந்து அந்தப் பாடலை தயாரித்த மாஜ்ஜா நிறுவனம் அடுத்த சிங்கிள் பாடலை தயாரித்துக்கொண்டிருக்கிறது. "மூப்பில்லா தமிழே தாயே' என்ற இந்தப் பாடலை உருவாக்கி வீடியோவிலும் இடம்பெறவிருக்கிறார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். இந்தப் பாடலில் சில இளம் முகங்களும் பங்காற்றவிருக் கிறார்கள். அதில் ஒருவர் கேப்ரியெலா. 'டிக் டாக்' மூலம் புகழ்பெற்ற இவர், "ஐரா' படத்தில் நயன்தாராவின் இளம் வயது பாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் "சுந்தரி' சீரியலில் நடிக்கிறார். மேலும் இந்தப் பாடலில் "விஜய் டிவி' புகழ் பூவையாரும் இடம் பெற்றுள்ளார். பூவையார் மாஸ்டர் படத்திலும் நடித்திருந்தார். இந்த இருவருடனும் எடுத்த செல்ஃபீயை ஏ.ஆர்.ரஹ்மான் தனது சமூக வலைத் தள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். "மூப்பில்லா தமிழே தாயே' பாடலை எழுதியிருப்பது கவிஞர் தாமரை. வீடியோவை இயக்குவது "எஞ்சாய் எஞ்சாமி' பாடலின் வீடியோவை ரணகளமாக ரசிக்கும் விதமாக இயக்கிய அமித்கிருஷ்ணன்.

கங்கனாவை வெளியேற்றிய ட்விட்டர்!

Advertisment

c

கொரோனா லாக்டவுனிலும் மிக சுறுசுறுப்பாக இருக்கும் நடிகர்களில் ஒருவர் தனுஷ். கர்ணன் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் மாரி செல்வராஜுடன் இன்னொரு படம், கார்த்திக் நரேன் இயக்கத்தில் ஒரு படம், "ராட்சசன்' ராம்குமார் இயக்கத்தில் ஒரு படம் என தமிழ்ப் படங்கள் வரிசை கட்டிக் காத்திருக்க, தற்போது அமெரிக்காவில் நெட்ஃப்ளிக்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிப்பதற்கான ஒத்திகையில் இருக்கிறார் தனுஷ். இவர் அங்கே இருக்க, இந்தியாவில் ஒரு வீடியோ வைரலாகியுள்ளது. ஒரு தனிப்பட்ட விழாவில் ஜாலியாக "இளமை திரும்புதே' என்ற "பேட்ட' பாடலை பாடும் தனுஷ், அப்படியே நடந்து வந்து மனைவி ஐஸ்வர்யாவிடம் ரொமான்ஸ் பண்ணும் அந்த வீடியோ சோசியல் மீடியாவில் பரவி வருகிறது. இதற்கு முன்பு பரவிய புகைப்படங்கள் போல் ஏடாகூடம் இல்லை என்று ஆறுதல் அடைந்திருக்கின்றனர் தனுஷ் ரசிகர்கள்.

-வீபீகே