மூகத்திற்கு முன்னுதாரணமாக இருக்கவேண்டிய ஒரு ஆசிரி யரே, மோசடி விவகாரத்தில் இறங்கி பகீரூட்டி வருகிறார்.

சேலம் அருகே உள்ள அயோத்தியாபட்டணத்தில், 'எஸ்.எஸ்.10 அயோத்தியா பட்டணம் ஊராட்சி ஒன்றிய துவக்க, நடுநிலைப்பள்ளி பணி யாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கம்' என்ற கூட்டுறவு அமைப்பு செயல்பட்டு வருகிறது. 350 அர சுப்பள்ளி ஆசிரியர் கள் உள்பட 400 பேர் இந்த சங்கத் தில் உறுப்பினர்களாக உள்ளனர்.

அயோத்தியா பட்டிணம் அரசு தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியரான ரவி என்பவரே, இந்த சங்கத்தின் தலைவராக கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் இருந்து வருகிறார். இவர் மீது தான் மோசடிப் புகார் சுழன்றடிக் கிறது.

Advertisment

dd

இதுகுறித்து நம்மிடம் பேசிய அரசுப்பள்ளி ஆசிரியர் களான சிவக்குமார், பிரபாகரன், நாகராஜன் ஆகியோர், "அயோத்தியாபட்டணம் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் உறுப்பினர் கள் அனைவரும் மாதந்தோறும் 1,500 ரூபாய் வீதம் சந்தா செலுத்தி வருகிறோம். டெபாசிட் தொகைக்கு 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படு வதால், பொதுமக்கள் பலரும் இதில் ஆர்வத்து டன் டெபாசிட் செய்திருக்கிறார்கள். இந்த வகை யில் இதுவரை 20 கோடி ரூபாய்க்கு மேல் டெபாசிட் சேர்ந்திருக்கிறது. நல்ல லாபத்தில் இயங்கிவந்த இந்த சங்கத்தில் நட்டக்கணக்கைக் காட்டினார்கள். அதனால் சங்கத்தின் செயல்பாடுகளில் எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது''“ என்றவர் கள், மேற்கொண்டு நடந்ததை விவரிக்கத் தொடங்கினர்.

"இதையடுத்து, சங்க உறுப்பினர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட 10 லட்சம் ரூபாய் இன்சூரன்ஸ் பிரீமி யம் தொகை கையாடல் செய்யப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தோம். இந்த சங்கத்தில் செயலாளராகப் பணியாற்றி வந்த அசோகன், கடந்த 2013-ஆம் ஆண்டு ஓய்வு பெற்று விட் டார். அதன்பிறகு அவரே, 2015- ஆம் ஆண்டு வரை நிர்வாகக் குழு ஒப்புதலின் பேரில், தினக்கூலி அடிப்படையில் வேலை செய்துவந் தார். அந்தக் காலக் கெடு முடிந்த பிறகும் கூட அவரை தனக்கு உதவியாக வைத்துக்கொண் டார் ரவி. அவர்கள் இருவரும் சேர்ந்து கொண்டு, உறுப்பினர்களுக்கே தெரியாமல் அவர்களின் பெயர்களில் கடன் பெற்றதாக போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்துள்ளனர். உறுப்பினர் செய்யும் டெபாஸிட்டு களிலும் ஊழல் செய்துள்ளனர். இவர் களில் ரவி, கடந்த 2013-ஆம் ஆண்டு, அ.தி.மு.க. பிரமுகர்களான 'கூட்டுறவு' இளங்கோவன், மெடிக்கல் ராஜா ஆகியோரின் பரிந்துரையின் பேரில் இந்த சங்கத்தின் தலைவ ராக ஆனவர். இவர்மீது கூட்டுறவு இணைப் பதிவாளரிடம் புகார் அளித்ததன்பேரில், விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதில் 2019 & 2020-ஆம் ஆண்டுக்குரிய வரவு செலவுகளைத் தணிக்கை செய்ததில் மட்டும் 78 லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளது உறுதியானது. ரவி தலைவ ராக பொறுப்பேற்ற 2013-ஆம் ஆண்டு முதல் தணிக்கை செய்தால் 3 கோடி ரூபாய் வரை மோசடி நடந்திருக்கலாம் என்று கருதுகிறோம். சங்கப் பணத்தை கையாடல் செய்த ரவி, அதில் தன் மகளுக்கு கார் வாங்கிக்கொடுத்து, 100 பவுன் நகை போட்டு, ஆடம்பரமாகத் திருமணம் செய்து வைத்திருக்கிறார். இது தவிர ஏற்காடு, வாழப்பாடி ஆகிய பகுதிகளில் நிலங்களையும் வாங்கிப் போட்டிருக்கிறார். மோசடிப் பணத்தில் வட்டித் தொழிலும் செய்து வருகிறார். சொகுசு வீடும் கட்டியுள்ளார். அவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரும் விசாரணை நடத்த வேண்டும் என்று புகார் அளித்திருக்கிறோம். அதுமட்டுமல்ல, இந்த தலைமை ஆசிரியர் ரவி, பெண் ஆசிரியர்கள் பலருடன் தகாத உறவில் இருந்ததாகவும் ஏற்கனவே புகார்கள் எழுந்துள்ளது. மலைக்கிராமப் பள்ளிக்கு பதவி உயர்வில் சென்றபோது, ஓராண்டாக அங்கு பணிக்கே செல்லாமல் ஏமாற்றிய புகாரிலும் அவர் ஏற்கனவே சிக்கியிருக்கிறார்'' என்கிறார்கள் ஆதங்கமாய்..

77

Advertisment

நமது கள விசாரணையில், கூட்டுறவு சங்கத் தணிக்கையில், தங்கம்மாள், சுலோச்சனா, ஜனார்த்தனன், ராஜாமணி, சியாமளா, ஆனந்தநாயகி, சடையப்ப உடையார் உள்ளிட்ட 28 உறுப்பினர்களின் பெயரில் அவர்களுக்கே தெரியாமல் 78.52 லட்சம் ரூபாய் போலி ஆவணங்கள் மூலம் கடன் கொடுத்ததாகக் கையாடல் செய்திருப்பது தெரிய வந்துள்ளது. அடுத்து, சார்பதிவாளர் சுகன்யா தலைமை யிலான குழுவினர் விசாரணை நடத்தியதில் மேலும் 53 லட்சம் ரூபாய்வரை மோசடி நடந்திருப்பது உறுதியாகி உள்ளது. அதாவது, இரண்டுகட்ட தணிக்கையின் மூலம் இதுவரை 1.31 கோடி ரூபாய் வரை ரவி தரப்பு ஏப்பம் விட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

இதையடுத்து ரவி, அசோகன் ஆகியோரி டம் இருந்து கையாடல் செய்யப்பட்ட தொகையை மீட்கும் முயற்சியில் இறங்கியுள்ளது, கூட்டுறவுத்துறை.

இதுகுறித்து குற்றச்சாட்டுக்கு ஆளான, மேற்படி கூட்டுறவு சங்கத் தலைவர் ரவியிடம் நாம் கேட்டபோது, "நான் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளராகவும் இருக்கிறேன். ஒரு காலத்தில் என் கைக்காசில் மது குடித்துவிட்டு சுற்றி வந்த ஆசிரியர் சிவக்குமார்தான், எனக்கு எதிராக ஆசிரியர்களைத் திரட்டி பொய்ப் புகார் கொடுக்க வைத்துள்ளார். என்னிடம் காசு பிடுங்குவதற்காக பிளாக்மெயில் செய்து வருகிறார். சங்க செயலாள ராக இருந்து ஓய்வுபெற்ற அசோகன்தான், வரவு, செலவுகளை பார்த்து வந்தார். ஒரே ஆளால் பேரேடுகளை சரியாக பராமரிக்க முடியாததால் சில தவறுகள் நடந்திருக்கலாம். அவர் அனுபவ சாலி என்பதால் அவரை நம்பி நான் சில ஆவணங்களில் கையெழுத்து போட்டேன். அதுதான் நான் செய்த தவறு. நான் எந்த முறை கேடும் செய்யவில்லை''’என்று மழுப்பினார். 2013-ல் ஓய்வு பெற்ற அசோகனை, அண்மைக் காலம் வரை நடந்த தவறுகளுக்குக் காரணம் காட்டியது திகைப்பையே ஏற்படுத்தியது.

இந்த முறைகேடுகளை இதுவரை கண்டு கொள்ளாமல், குற்றங்களுக்கு உடந்தையாக இருந்த மேலதிகாரிகளும் தண்டிக்கப்பட வேண் டும் என்கிறார்கள் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள்.

கோடிகளில் பணம் புழங்கும் அந்த சங்கத் தில், ஊழல் முதலைகளே இன்னும் பொறுப்பில் இருப்பது எப்படி? அவர்களை அங்கேயே அமர வைத்து, கூட்டுறவுத்துறை அழகு பார்ப்பது எப்படி?