கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை உச்சத்திலிருந்தபோது மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்புக்கு வந்தது. அப்போது சுகா தாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு உரிய மருத்துவச்சிகிச்சை கிடைக் கவும், ஆக்ஸிஜன் சிலிண்டர் வசதிகள் கிடைக்கவும் இரவுபகல் பாராமல் பம்பர மாகச் சுழன்று, கொரோனாவை கட்டுக் குள் கொண்டுவருவதில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பங்காற்றினார்.
இத்தகு பெருமைவாய்ந்த அமைச் சர் மா.சுப்பிரமணியம், கலைஞரின் நூற்றாண்டை சிறப்பிக்கும் விதமாக, கலைஞரின் பெருமைகளையும், கலைஞ ரை அடியொற்றி மலர்ந்துள்ள திராவிட மாடல் ஆட்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆட்சித்திறனின் பெருமைகளையும் எடுத்துக்கூறும் விதமாக "கின்னஸ் கலைஞர்' என்ற நூலை எழுதி வெளியிட்டுள் ளார். இந்நூலை திருமகள் நிலையம் பதிப்பித்துள்ளது. விலை ரூ.350.
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச் சர் மா.சுப்பிரமணியன் எழுதிய "கின்னஸ் கலைஞர்' நூல் வெளி யீட்டு விழா, கடந்த 4ஆம் தேதி சென்னை புத்தகக் கண்காட்சி அரங் கில் நடைபெற்றது. நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் நூலை வெளியிட, தமிழ் பிரதியை காவல் துறை முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திரபாபு பெற்றுக்கொண்டார். ஆங்கில பிரதியை உலக செஸ் சாம்பியன் குகேஷ் பெற்றுக் கொண்டார் விழாவில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், இந்து என்.ராம், நக்கீரன் ஆசிரியர், எமரால்ட் ஒளிவண்ணன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இந்நூல், எளிய நடை யில் அனைவராலும் விரும்பி வாசிக்கத்தக்க வகையிலும், வண்ணமயமாகவும் உருவாக் கப்பட்டுள்ளது. கலைஞரின் சிறப்புக்கள், அவரது ஆட்சி யில் கொண்டுவரப்பட்ட மக்கள் நலத்திட்டங் கள், சட்டங்கள், என பல்வேறு சாதனைகளைப் பட்டியலிட்டுக் காட்டியிருக் கிறார்.
கடந்த 2020ஆம் ஆண்டில், உலகமே கொரோனா பெருந்தொற் றால் பாதிக்கப்பட்டு பொதுமுடக்கத்தால் அடைபட்டுக் கிடந்தது. அந்த சூழலிலும் தகுந்த முன்னேற்பாடுகளோடு, முன்மாதிரியாக உலகளாவிய மெய்நிகர் மாரத்தான் போட்டியை வெற்றிகரமாக நடத்திக்காட்டி சாதித்தார். இதற்காக 'கலைஞர் நினைவு பன்னாட்டு மெய்நிகர் மாரத்தான் போட்டி' என்ற இணைய பக்கத்தை தொடங்கி, வீரர்களை பதிவுசெய்ய வைத்தார். அந்த மாரத்தான் போட்டியில் உலகின் 28 நாடுகளிலிருந்து 8,541 வீரர்கள் பங்கெடுத்தனர். இப்படி நடத்தப்பட்ட மெய்நிகர் மாரத்தான் போட்டி, ஆசியாவிலேயே இதுதான் முதன்முறையாகும். அந்த வகையில், இந்த மாரத்தான் போட்டி, 'ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' புத்தகத்தின் சாதனைப் பக்கங்களில் இடம்பெற்றது. அதைவிட இன்னொரு முக்கிய தகவல், அந்த போட்டி மூலம் வசூலான 23 லட்சத்து 41 ஆயிரம் ரூபாயை தமிழ்நாடு அரசின் கொரோனா நிவாரண நிதிக்கு சேர்ப்பித்தார்.
அடுத்ததாக, துணை முதல்வர் உதயநிதி தலைமையில் நடத்தப்பட்ட மெய்நிகர் மாரத்தான் போட்டியில் கூடுதல் பங்களிப்பாக, 37 நாடுகளைச் சேர்ந்த 19,596 பேர் கலந்துகொண்டனர். இப்போட்டியில் வசூலான தொகையான 56 லட்சம் ரூபாயை கொரோனா பேரிடர் இரண்டாம் அலையை எதிர்கொள்வதற்கான நிவாரண நிதியில் சேர்த்தனர். அதற்கடுத்ததாக, 2022ஆம் ஆண்டில் மெய்நிகராக இல்லாமல், நேரடியாக மாரத்தானில் கலந்துகொண்டு ஓடும்படியாக மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் இந்தியாவி லேயே சாதனை பங்கேற்பாக 43,320 பேர் பங்கெடுத் தனர். அப்போட்டியில் வசூலான 1 கோடியே 22 லட்சம் ரூபாயையும் மருத்துவத்துறை சார்ந்த பணிகளுக்கே வழங்கினார் அமைச்சர் மா.சு.
இந்நிலையில், 2023ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கலைஞர் நினைவு நான்காவது பன்னாட்டு மாரத்தான் போட்டியானது, கின்னஸ் சாதனையே படைத்தது. இதன்மூலம் கலைஞர் மறைந்தபின்பும் அவரது பெயரை கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெறச்செய்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
கின்னஸ் கலைஞர் நூலில், கலைஞரின் பிறப்பு, பள்ளிப்பருவம், குடும்ப உறவுகள், திராவிட இயக் கப் பற்றாளராக உருவெடுத்தது என ஒவ்வொரு தருணத்தையும் புகைப்படங்களின் அணிவகுப் போடு விவரிக்கிறார். மாணவப் பருவத்திலேயே இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட கலைஞர், 1937ஆம் ஆண்டில் திருவாரூரில் தந்தை பெரியாருடைய உரையைக் கேட்டதுமே அவரது பாதையில் பயணிக்கத் தொடங்கியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 1941ஆம் ஆண்டிலேயே "தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம்' அமைப்பைத் திருவாரூரில் தொடங்கிய கலைஞர், அந்த அமைப்பை தமிழ்நாடு முழுக்கப் பரவச்செய்தார். அதே ஆண்டில், 'மாணவ நேசன்' என்ற கையெழுத் திப் பிரதி பத்திரிகையையும் கலைஞர் தொடங்கிய தகவலையும் மா.சு. பதிவுசெய்கிறார். பெரியாரின் மாணவராகப் பயணத்தைத் தொடங்கி, பேரறிஞர் அண்ணாவின் அன்புத்தம்பியாக மாறி, தி.மு.க.வை ஆட்சிக்கட்டிலில் ஏற்றியதோடு, தானும் முதலமைச்சராகப் பணியாற்றி, ஆட்சிக்காலத்தில் செய்த சாதனைகள் அனைத்தையும் பட்டியலிடு கிறார் அமைச்சர் மா.சு. மொத்தத்தில் கின்னஸ் கலைஞர் நூல், கலைஞரின் அரசியல் சாதனை களைச் சொல்லும் ஆவணமாக உருவாக்கப் பட்டுள்ளது!