மிழ்நாடு ஆசிரியர் கல்வி யியல் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பணி நியமன மோசடி, பதவி உயர்வு மோசடி, கேள்வித்தாள் மோசடி உள்ளிட்ட பல்வேறு மோசடிகள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசா ரணைக்கு உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் ஒப்புதல் அளித்திருப்பது பரபரப் பைக் கிளப்பியுள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத்தின்கீழ் தமிழகம் முழுவதும் 7 அரசு கல்லூரிகளும், 14 அரசு உதவிபெறும் கல்லூரிகளும், 243 தனியார் கல்லூரிகளும் இயங்கிவருகின்றன. அவற்றில் பல லட்சம்பேர் பி.எட்., எம்.எட்., முடித்து பணிக்காகக் காத் திருக்கும் சூழ்நிலையில், இந்த படிப்புகள்மீதான ஆர்வம் மாணவர்கள் மத்தியில் குறைந்து வருகிறது. நாட்டின் முக்கியமான கல்வித் துறைக்கான ஆசிரியர்களை உருவாக்கக்கூடிய முக்கிய பொறுப்புவகிக்கும் இந்த பல்கலைக் கழகம் எதனால் நலிவடைந்துள்ளது என்பதை அறியும்பொருட்டு அமைச்சர் விசாரணை நடத்தியிருக்கிறார். அதில் பகீர் மோசடிக் குற்றச்சாட்டுகள் தெரியவந்ததால் தற்போது லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரிக்க அமைச்சர் ஒப்புதல் வழங்கி யுள்ளார் எனக் கூறப்படுகிறது.

hh

இந்த விசாரணையில், கல்லூரி முதல்வர் மூலமாக எம்.எட்., வாய்மொழித் தேர்வுக்கு பணம் வசூலித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், ரூபன் கல்வியியல் கல்லூரி மாணவர் சேர்க்கை சரிபார்ப்பிற்கு 25 லட்சம் கேட்டு, அதில் 16 லட்சம் பெற்றுள்ளதாக உறுதிசெய்யப்பட்டுள் ளது. இதற்கு ஏஜென்டாக செயல்பட்ட அலுவலக ஊழியர் ஆனந்த் பணிநீக்கம் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து அருள் பி.எட். கல்லூரியிலும் 1 லட்சம் பணம் கேட்ட விவகாரம் ஆளுநருக்கு புகாராக சென்று விசாரணை செய்ததில் அதுவும் உறுதிசெய்யப் பட்டது. மேலும், எஸ்.ஆர்.சி., என்.சி.டி.இ., மூலம் கல்லூரிகளுக்கு தடையில்லாச் சான்று கொடுப்பதற்கு ஒரு கல்லூரிக்கு 1 லட்சம் வீதம் 140 கல்லூரிகளுக்கு 1 கோடியே 40 லட்சம் பெற்றதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதேபோல், திருச்சி மகாத்மா பி.எட் கல்லூரி என்ற பெயரில் இல்லாத கல்லூரியை இருப்பதாகக் காட்டியதும் உறுதிசெய்யப்பட்டது.

இப்படி பல கல்லூரிகளுக்கு கட்டடமே இல்லாதபோதும் அனுமதி கொடுத்ததன் விளைவுதான் தேர்வின் போது கேள்வித்தாள் வெளிவந்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இதில் 70 லட்சம் அளவுக்கு மோசடி நடை பெற்றுள்ளதாக சி.பி.சி.ஐ.டி. விசாரணை செய்து எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளது. இப்படி ஒட்டுமொத்த விவகாரத்திற்கும், அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தகுதியற்ற வர்களை பணி நியமனம் செய்ததே காரணமென்று தெரியவருகிறது. இப்படி நடந்துவரும் அனைத்து மோசடிகளுக்கும் ஒற்றை நபர் தான் மையப்புள்ளியாக இருந்துள்ளதாகவும், அந்த நபரை தற்போது விசாரணை செய்தால் நிச்சயம் ஒட்டுமொத்த கல்வியியல் பல்கலைக் கழகத்தையே களை எடுத்துவிடலா மென்றும் கருதிய அமைச்சர் கோவி.செழியன், உடனடியாக லஞ்ச ஒழிப்புத்துறையை விசாரிக்கச்சொல்லி கோப்புகளைக் கொடுத்துள்ளாராம்.

Advertisment

யார் அந்த ஒற்றை நபரென்றால், பெடகாஜிக்கல் அறிவியல் (pedagogical science) துறைத் தலைவரான பேராசிரியர் நாகசுப்ரமணி என்கிறார்கள். 2015ஆம் ஆண்டு இணை பேராசிரியர் பணிக்காக 6 துறைகளுக்கான அறிவிப்பை அரசு வெளியிட்டிருந்தது. அதற்கான தகுதியாக செட், நெட் அல்லது பி.எச்.டி. என ஏதாவது ஒன்று முடித்திருக்கவேண்டும். அப்படி முடித்தபிறகு 8 வருடம் உதவிப் பேராசிரியராக பணிபுரிந்திருக்க வேண்டும் என விதிமுறை வகுத்திருந்தது. ஆனால் அந்த அடிப்படைத் தகுதிகள் இல்லாமல், போலி அனுபவச் சான்றிதழ் மூலம் இவர் பணியில் சேர்ந்துள்ளார்.

மேலும், ஆர்.டி.ஐ. மூலம் விசாரித்ததில் இவர் செய்த முறைகேடுகள் பலவும் வெளிவந்துள்ளன. முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கல்லூரியில் இவர் டி.டி. எட்., மாணவர்களுக்கு பாடமெடுத்திருக்கிறார். ஆனால், பி.எட்., மாண வர்களுக்கு பாட மெடுத்ததுபோல் காட்டி யது அம்பலமாகி யிருக்கிறது. இவரை அப்போது பணியில் நியமித்தது முன்னாள் வி.சி.யான ஜி.விஸ்வநாதன். இதிலிருந்துதான் நாகசுப்ரமணியின் ஆட்டம் தொடங்கியுள்ளது.

பின்னர், 19.10.22-ல் அவருக்கு இணை பேராசிரியரிலிருந்து பேராசிரியாக பணி உயர்வு வழங்குவதற்காக வி.சி. பஞ்சநதம் நேர்முகத் தேர்வு நடத்தியபோது, அதிலிருந்த 5 சிண்டிகெட் மெம்பர்களும், நாகசுப்ரமணி தகுதியற்றவர் என்பதால் அவருக்கு பணிஉயர்வு கொடுக்கக்கூடாது என்று கடிதம் கொடுத்துள்ளனர். மேலும் தேர்வுக்குழுவின் அரசு பிரநிதியான முன்னாள் கல்லூரிக்கல்வி இயக்குனர் ஈஸ்வரமூர்த்தியும் நாகசுப்ரமணிக்கு பதவி உயர்வு வழங்கக்கூடாதென்று கூறியிருக்கிறார். ஆனால் அதையும்மீறி அவருக்கு பணி உயர்வு வழங்கினார் பஞ்சநதம். அடுத்து 2023-ஆம் ஆண்டில் பதிவாளர் பொறுப்புக்கு நியமனம் செய்தனர். அதிலிருந்து 2024 வரை 11 மாதங்கள் பணிபுரிந்ததிலும் ஊழல் செய்திருந்ததை அப்போதைய உயர்கல்வித்துறை செயலர் கார்த்திக், விசாரணைக்குழு அமைத்து விசாரித்ததில் குற்றம் நிரூபணமானது. ஆனாலும் இதுநாள் வரை அவர்மீது எந்த நடவடிக்கையும் இல்லை.

Advertisment

இந்நிலையில், அடுத்தகட்டமாக ரிஜிஸ்ட்ரர் அல்லது சிண்டிகேட் பொறுப்புக்கு பதவிக்கு காய்நகர்த்தி வருகிறார். இந்த சூழ்நிலையில் தான் தற்போது அமைச்சர், இவர் தொடர்பான அனைத்து மோசடி விவரங்களையும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கொடுத்து பரபரப்பைக் கிளப்பியுள்ளார். இவர் மீதான அனைத்துப் புகார்களும் உறுதிசெய்யப்பட்ட பிறகாவது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படுமாவென்று கேள்வி எழுப்புகின்றனர்.

-சே