திகாரத்திலிருப்பவர்களுக் கும் ஆளுமைமிக்கவர் களுக்கும் மட்டுமே திறக்கும் கவர்னர் மாளிகை எனும் இரும்புக் கோட்டையின் கதவுகள், சமீபகாலமாக சாமானியர்களுக்கும் திறக்கத் தொடங்கியிருக்கின்றன. ராஜ்பவனுக்குரிய மரபுகளை உடைத்து தினம், தினம் பல்வேறு சந்திப்புகளை நடத்திவருகிறார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி.

அந்த வகையில், இந்திய ஆட்சிப்பணி தேர்வினை எதிர்கொண்டிருக்கும் மாணவ-மாணவி கள் சுமார் 500 பேர்களுடன் சமீபத்தில் கலந்துரையாடியிருக்கிறார் கவர்னர் ரவி. இந்த சம்பவம் தேசிய அளவில் எதிரொலிக்க, பல்வேறு மாநிலங்களும் இதனை பின்பற்றத் தொடங்கியுள்ளன.

ஐ.ஏ.எஸ். பயிற்சி அகாடமிகளில் பயிற்சி பெறும் மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதுவரை பார்த்திராத ஒரு புதிய பிரமாண்டமான கோட்டைக்குள் நுழைகிறோம் என்கிற உணர்வு மாணவர்களிடம் இருந்தது. தங்களின் விழிகள் விரிய, ராஜ்பவனின் பிரமாண்டத்தை பார்த்தனர்.

"எண்ணித் துணிக'’என்ற தலைப்பில் ராஜ் பவனின் தர்பார் மண்டபத்தில் நடந்த கலந்துரை யாடலில் பங்கேற்ற எதிர்கால ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். களை கவர்னரின் ஆலோசகர் திருஞானசம்பந்தர் வரவேற்றார். கலந்துரை யாடல் துவங்கியதும், இந்திய ஆட்சிப் பணி தொடர் பாக தங்க ளிடமிருந்த சந்தேகங்கள், புரியாத விசயங்கள், கவர்னரைப் பற்றிய தகவல்கள் என பல்வேறு கேள்விகளைக் கேட்டு ஆளுநர் ரவியை அசத்தியிருக்கிறார்கள் மாணவர்கள்.

Advertisment

ஐ.ஏ.எஸ். பயிற்சியில் டாப் ரேங்க்கில் இருக்கும் ஆசாத் என்பவர், ‘"தங்களின் பள்ளிப்பருவ காலம் குறித்து எந்த தகவலும் இதுவரை பதிவாகவில்லை. உங்களின் பள்ளிப் பருவ காலத்தை நினைவுகூர முடியுமா?''’என்று கவர்னரிடம் கேட்க, "பீஹாரில் மின்சார வசதியும், சாலை வசதியும் இல்லாத ஒரு சின்ன கிராமத்தில்தான் பிறந்தேன்; வளர்ந்தேன். வறுமையான ஏழைக் குடும்பம் எங்களுடையது. அதனால் கல்வி மட்டுமே எனது குறிக்கோளாக இருந்தது. கல்விதான் ஒருவரை மேம்படுத்தும் என்பது என் எண்ணம். சிறிய வயதிலே என் தந்தையை இழந்தேன். படிப்பதற்காக பல மைல்கள் நடந்து செல்லவேண்டும். உடுத்துவதற்கு நல்ல உடைகள் கிடையாது, சத்தான உணவும் இல்லை. இப்படிப்பட்ட சூழலில்தான் என் பள்ளிப் பருவம் இருந்தது என்றாலும், ஒருமுறை கூட எனது முயற்சிக்கு இவைகள் தடைகளாக இருந்தது இல்லை.

விடுதி அறையில் தங்கித்தான் படித்தேன். அந்த அறையில் மின்விசிறியெல்லாம் கிடையாது. மரத்தின் இலைகளைப் பறித்து அதனை விசிறியாகப் பயன் படுத்தியது உண்டு. கல்வியை ஒரு வேள்விபோல கற்றேன். எனது ஆசிரியர்கள்தான் வழிகாட்டியாகவும் உறுதுணையாகவும் இருந்தார்கள். இயற்பியல் படிப்பில் மாஸ்டர் பட்டம் பெற்றேன். வானியியல் நிபுணராக (ஆஸ்ட்ரோ பிஸிசிஸ்ட்) ஆவதே எனது கனவாக இருந்தது. ஆனால், என் பாதையை வாழ்க்கை மாற்றி யமைக்க, 1976-ல் இந்திய ஆட்சிப் பணி தேர்வில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, ஐ.பி.எஸ். அதிகாரி யாக எனது முதல் பணி கேரளாவில் தொடங்கியது.

அதன்பிறகு, பலவேறு பொறுப்புகளில் இருந்த எனக்கு மத்திய உளவுத்துறையின் இயக்குநர் பதவியும் கிடைத்தது. அந்த பணி மிகவும் சவாலானது. நீங்களெல்லாம் இந்திய ஆட்சிப்பணிக்கு வருகிற போது அந்த சவால்கள் புரியும். தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர், வட-கிழக்கு மாநிலங்களின் பேச்சுவார்த் தைக் குழு தலைவர், நாகாலாந்து -மேகாலய மாநிலங்களின் கவர்னர், பிரதமரின் கூட்டுப் புலனாய்வு தலைவர் என நிறைய பதவிகளை வகித்த பிறகு, இதோ தமிழக ஆளுநராக உங்கள்முன் நிற்கிறேன்''’என்று எளிமையான வார்த்தைகளில் தன்னைப் பற்றிச் சுருக்கமாக விவரித்தார் கவர்னர் ரவி.

Advertisment

"இந்திய ஆட்சிப் பணி தேர்வு எழுதும் எங்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புவீர்கள்?'' என்று ஒரு மாணவி கேட்க, "முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய இடத்தில் இருப்பவர் நீங்கள். அப்படி எடுக்கும்போது அந்த முடிவுகள் சரியானதாகவும் இருக்கும். பல சமயங்களில் தவறானதாகவும் இருக்க நேரிடும். நானும் தவறான முடிவுகளை எடுத் திருக்கிறேன். முடிவுகள் எப்படி வேண்டு மானாலும் இருக்கும், அதற்காக முடிவுகளை எடுக்காமல் இருந்துவிடக்கூடாது. எடுக்கா மல் இருந்தால் நீங்கள் தகுதியற்றவர் களாகிவிடுவீர்கள். தகுதிகளை வளர்த்துக் கொள்வது உங்களின் முடிவுகளில் இருக்கிறது''’என்றார். கவர்னரின் இந்த பதில், மாணவ-மாணவிகளை ஆச்சரியப்படுத்தியது.

gr

"தமிழகத்தில் நீங்கள் கற்றுக்கொண்டது என்ன?'' என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, பதிலளித்த கவர்னர் ரவி, "திருக்குறள் படித்து நான் உத்வேகம் அடைந்தேன். இரண்டு வரிகளில் பொதிந்துள்ள ஆழமான கருத்துக்கள் பிரமிப்பானவை. இந்த மனித சமூகத்திற்கு திருவள்ளுவர் சொல்லாத கருத்துக்களே இல்லை. அனைத்தும் திருக்குறளில் புதைந்து கிடக்கிறது. தமிழ் மொழியின் மிகப்பெரிய சொத்து திருக்குறள்''‘என்றார் மிக கம்பீரமாக.

"பயங்கரவாதத்தை அழித்தொழிப் பதில் இந்தியாவின் பங்களிப்பு எப்படிப் பட்டதாக இருக்கிறது?'' என்று ஒரு மாணவர் கேட்டபோது,”"இந்த விவகாரத்தில் இந்தியா கூடுதல் பொறுப்புணர்வுடன் முடிவுகளை எடுக்கிறது. பயங்கரவாதத்தை ஒழிப்பதில் நாம் முன்னேறி வருகிறோம். நமது பொருளாதாரத்தை சீர்குலைக்க பாகிஸ்தான் நினைத்தால், பயங்கரவாதத்தை கையில் எடுப்பார்கள். அதனை ஒவ்வொரு முறையும் முறியடித்தே வருகிறது இந்தியா

. அமெரிக்காவில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு முன்பு, பயங்கரவாதத்தை அழிப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக இருந்ததில்லை. ஆனால், அந்த தாக்குதல்களுக்குப் பிறகுதான் உலக நாடுகளின் ஒத்துழைப்பு, பேச்சுவார்த்தைகள் பலனளிக்க துவங்கியது. சர்வதேச அளவில் ஒத்துழைப்பைப் பெறுவது அவ்வளவு எளிதானதல்ல; அதற்கு கடினமான உழைப்பு தேவை. அந்த முயற்சியை இந்தியா எடுத்தது.

இப்போது, சர்வதேச விவகாரங்களில் இந்தியா ஏதேனும் தெரிவித்தால் அது கவனம் பெறுகிறது. ஐ.நா. சபையை விட ஜி-20 அமைப்பு மிகவும் வலிமையானது. அந்த அமைப்பில் உள்ள இந்தியா உலகுக்கு வழிகாட்டியாக இருக்கிறது''’என்றார்.

வட-கிழக்கில் நடக்கும் விடுதலைப் போராட்டங்கள், இந்தியாவின் தேசிய கல்விக் கொள்கை விவகாரங்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதி லளித்த கவர்னர் ரவி, ‘’"நாங்கள் இந்தியர்கள் அல்ல; எங்களுக்கு தனி நாடு வேண்டும் என போராடிய நாகா மக்களுடன் என் பணி மிகவும் கனமானவை. அந்த மக்களுடன் மக்களாக அவர்களின் கோரிக்கையை காது கொடுத்துக் கேட்டேன். அவர்களின் உணர்வுரீதியான பிரச்சினைகளை உணர்ந்து, அது எந்த வகையிலெல்லாம் தவறானது என்பதை 2,000-க்கும் அதிகமான கிராமத் தலைவர்களைச் சந்தித்து வலியுறுத்தினேன். எவ்வித பாதுகாப்பு அரணும் போட்டுக்கொள்ளா மல் மிகநெருங்கிய நண்பராக, சகோதரராக அவர்களது வீடுகளில் தங்கி தொடர்ச்சியாகப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறேன். அதன் பலன் ஒரு நாள் தெரிந்தது. தங்களின் கோரிக்கையை கைவிட்டனர். அந்த தருணம் மிக அழகானது; உணர்ச்சிமயமானது.

gr

தேசிய கல்விக் கொள்கையைப் பொறுத்த வரை, அந்த கொள்கை எதற்காக கொண்டு வரப்பட்டது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும். மாறிவரும் உலகிற்கேற்ப நமது பாடத் திட்டங்களையும் மாற்றி யமைப்பது அவசியமாகிறது. வெறும் பட்டங்களுக்காக வேலை கிடைக்கும் நிலை இப்போது இல்லை என்பதை உணரவேண்டும். அறிவுத்திறன், சிந்தனைத் திறன், செயல்திறன் அனைத்தையும் சீர்தூக்கித்தான் வேலை கிடைக்கிறது. அதனால், கடினமான சூழல்களை எதிர்கொள்ளும் வகையில் சிந்தனைத் திறனை அதிகரிக்கச் செய்வதற்காகத்தான் புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டது''’என்று தெளிவுபடுத்தினார் கவர்னர்.

நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட மாணவர்கள் சிலரிடம் பேசியபோது, "மரபுசாரா எரிசக்தியை நோக்கித்தான் நமது பயணம் இருக்க வேண்டும். பசுமை ஆற்றலை முதன்மை யான எரிபொருளாக கருத வில்லையெனில் உலகம் மிகப் பெரிய பேரிடரை எதிர்கொள்ள வேண்டிய திருக்கும்'' என, அடுத்த 50 ஆண்டுகால சிந்தனையை விதைத்தார் கவர்னர். மேலும், "இந்திய ஆட்சிப்பணியை நோக்கி விரையும் நீங்கள், ஒற்றை இலக்குடன் மனஉறுதியுடன் பயணிக்க வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 14 மணி நேரம் படியுங்கள். படிப்பது மட்டும் போதாது; படித்ததை எழுதிப் பழகுங்கள். செய்தித் தாள்களை வாசிக்கும்போது அரசியல்வாதிகள் என்ன சொல்கிறார்கள் என்பதை தேடாதீர்கள். உங்களை குறை கூறுபவர்களை புறம்தள்ளுங்கள். அதில் கவனம் செலுத்தக்கூடாது. உங்கள் கையில் கிடைக்கும் அதிகாரம், மக்களுக்கு சேவை செய்வதற்காகத்தான். அதிலிருந்து விலகுபவர்கள் விளைவுகளை சந்திக்கிறார்கள்'' என்றெல்லாம் அட்வைஸ் செய்தார் கவர்னர். கவர்னரின் ஒவ்வொரு வார்த்தைகளும் எங்களை செதுக்கி யிருக்கின்றன''’என்றனர் பங்கு பெற்றவர்கள்.