"ஹலோ தலைவரே, மறு படியும் கவர்னர் ஆர்.என்.ரவி, பரபரப் பாக டெல்லிக்குப் பறந் திருக்கிறார்.''”
"தி.மு.க. ஆட்சியை தன்னால் ஒன்றும் செய்ய முடியலையேன்னு தவிக்கும் கவர்னர், அடிக்கடி சென்னைக்கும் டெல்லிக்குமா அலைபாய்கிறாரே?''”
"ஆமாங்க தலைவரே, சமீபகாலமாக அடிக்கடி டெல்லிக்குப் பறக்கும் கவர்னர் ஆர்.என். ரவி, கடந்த 12ஆம் தேதியும் அவசர கதியில் பிளைட்டை பிடித்திருக்கிறார். போன வேகத்தில் டெல்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சக அதிகாரிகளை, அமைச்சர் உதயநிதி விசயமா கவர்னர் சந்திச்சிருக்கார். சனாதனத்துக்கு எதிராகப் பேசிய உதயநிதி மீது வழக்கு தொடுக்க அனுமதி கேட்டு, அண்மையில் கவர்னருக்கு சு.சாமி கடிதம் எழுதியிருந்தார். இந்த சாமியை, மோடி தரப்புக்கு பிடிக்காது என்பதால், அவரது கடிதத்துக்கு கவர்னர் முக்கியத்துவம் கொடுக்கலை. அதேசமயம், சு.சாமி வைத்த அதே கோரிக்கையை, தமிழக பா.ஜ.க.வினரும் வைத்ததால், அதை அலட்சியப்படுத்த விரும்பாத கவர்னர், இதுகுறித்து என்ன முடிவு எடுக்கலாம்னு உள்துறை அதிகாரிகளுடன் அங்கே தீவிரமாக விவாதிச்சாராம்.''”
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/rang_334.jpg)
"ரகசிய கோப்பு ஒன்றும் டெல்லி சென்ற கவர்னரிடம் இருந்ததாமே?''”
"உண்மைதாங்க தலைவரே... முதல்வர் ஸ்டாலின், நிர்வாகப் பொறுப்புகள் சிலவற்றை அமைச்சர் உதயநிதியிடம் பகிர்ந்து கொடுத்திருக்கிறார். அதனால் உதய்தான் நிர்வாகம் தொடர்பான பலவற்றையும் கவனிக்கிறார். இந்த நிலையில், கடந்த 3 மாதங்களாக அரசு நிர்வாகத்தில் என்னென்ன நடந்திருக் குன்னு, தான் சேகரித்து வைத்திருந்த தகவல்களை எல்லாம் ரிப்போர்ட்டாகத் தயார் செய்து, அந்த ரகசியக் கோப்பி னையும் கவர்னர் டெல்லிக்கு எடுத்துச் சென்றிருக்கிறார். அதில் தி.மு.க. அரசு மீது ஏகத்துக்கு கவர்னர் புகார்களை அடுக்கி இருக்கிறாராம். அதை அவர் உள்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்து, அமித்ஷாவின் டேபிளில் வைக்கச் சொன்னாராம் கவர்னர். நிர்வாக ரீதியாக டெல்லி சென்றபோதும் அங்கே அவர், தான் கட்டிவரும் புதிய வீட்டின் இறுதிக்கட்ட பணிகளைப் பார்வையிடும் ஆவலிலும் சென்றிருக்கிறார் என்கிறது ராஜ்பவன் வட்டாரம். இதற்கிடையே பல்கலைக்கழக சர்ச் கமிட்டியை கவர்னர் தன்னிச்சையாக நியமித்தது பற்றி தி.மு.க. அரசு, பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு புகார் அனுப்பியிருந்ததாம். அது குறித்து கவர்னரிடம் அங்கே விசாரணை நடந்ததாகவும் சொல்லப் படுகிறது.''”
"சென்னையில் பா.ஜ.க. அண்ணாமலை நடத்திய போராட்டத்திலும் காவல்துறை விமர்சனத்தை சம்பாதித்திருக்கிறதே?''”
"சனாதன சர்ச்சையை மையப்படுத்தி, அமைச்சர் சேகர்பாபு பதவி விலகணும்னு கோரிக்கை வைத்து, இந்து அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை பா.ஜ.க. அண்ணாமலை அறிவித்திருந்தார். வள்ளுவர் கோட்டத்தில் இருந்து ஊர்வலமாகச் சென்று, சென்னை மாநகரையே திணறவைக்க அவர் திட்ட மிட்டிருந்ததால், தொடக்க ஸ்பாட்டிலேயே அவரை மடக்க காவல்துறை வியூகம் வகுத்தது. இதற்கான பாது காப்பு ஏற்பாடு களைக் கவனிக்கும் பொறுப்பை, மத்திய சென்னை அடிஷனல் கமி ஷனரான பிரே மானந்த் சின்ஹா, டி.சி. நிஷா மிட்டலிடம் ஒப்படைத் திருந்தார். எனினும்... "அண்ணாமலையோ தொண்டர்கள் புடைசூழ நகர்ந்து சென்று திடீரென சாலையில் அமர்ந்து தர்ணாவில் இறங்கிவிட் டார். இதனால் கோடம் பாக்கம் தொடங்கி, அண்ணாசாலை வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது முதல்வர் கவனத்துக்குப் போக, ஏன் இப்படி ஆனது? என அவர் கேள்வி எழுப்பினாராம்.''
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/rang1_295.jpg)
"உண்மையில், நிஷா மிட்டலும் அண்ணா மலையும் ஒன்றாக ஐ.பி.எஸ். படித்த வர்களாம். அந்த நட்பில்தான் அண்ணாமலையை ரிலாக்ஸாக கையாண்டு, நிலைமையை சிக்கலாக்கி விட்டார் என்கிறார்கள். அதே நேரம் இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை சின்ன சலசலப்புகூட இல் லாமல் மேனேஜ் செய்து தென்மண் டல காவல்துறை சபாஷ் வாங்கியிருக் கிறது.''”
"’புதிதாகக் கட்டப்பட்டுவரும் அ.தி.மு.க. அலுவலகத்தைப் பார்வை யிட எடப்பாடியும் டெல்லி சென்றிருக் கிறாரே?''”
"ஆமாங்க தலைவரே, அ.தி. மு.க.வுக்கான புதிய கட்டிடத்தைக் கட்டும் பணி, டெல்லியில் நடந்துக் கிட்டிருக்கு. அதன் நிறைவுக்கட்ட பணிகளைப் பார்வையிட எடப்பாடியும் டெல்லிக்குப் பறந்திருக்கிறார். இந்தப் பயணத்தின்போது, உள்துறை அமைச்சர் அமித்சா, பா.ஜ.க. தேசிய தலைவர் நட்டா ஆகியோரை சந் திக்கவும் நேரம் கேட்டிருக்கிறார். அப் படி நேரம் ஒதுக்கப்படும் பட்சத்தில், அங்கே அ.தி.மு.க. அலுவலகத்தைத் திறக்க பிரதமர் மோடி வரவேண்டும் என்றும், கூடவே அமித்ஷாவும் நட்டாவும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்றும் அழைப்பு விடுக்க எடப்பாடி, திட்டமிட்டிருக்கிறாராம், ’ஒரே நாடு ஒரே தேர்தல்’ சட்ட மசோதாவை ஒன்றிய அரசு கொண் டுவரலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டி ருக்கும் நிலையில், எடப்பாடியின் இந்த டெல்லி பயணம் பலராலும் உற்று நோக்கப்படுகிறது.''”
"அ.தி.மு.க. முன்னாள் எம்.எல். ஏ.வான தி.நகர் சத்யா ரெய்டு நடவடிக்கைக்கு ஆளாகி இருக்கிறாரே?''
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/rang2_233.jpg)
"ஆமாங்க தலைவரே, இந்த தி.நகர் சத்யாவின் ஏடாகூடங்கள் பற்றி நமது நக்கீரன் தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்திருக்கிறது. அப்படிப்பட்டவர் மீது இப்போதுதான் லஞ்ச ஒழிப்புத்துறையின் நடவடிக்கை பாய்ந்திருக்கிறது. ஆரம்பாக்கத்தில் 330 ஏக்கரில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டிருக்கும் சத்யாவின் பண்ணைவீடு உட்பட அவருக்குச் சொந்தமான 40 இடங்களில் இந்த ரெய்டு நடத்தப்பட்டிருக்கிறது. ஆனாலும், இந்த ரெய்டு குறித்து முதல் நாளே அவருக்கு தகவல் போய்விட்டதால், ஏராளமான நகைகளையும், பெரும் பணத்தையும் அவர் இடம் மாற்றிவிட்டாராம். சத்யாவுடன் பிசினஸ் தொடர்பில் இருந்த வடசென்னை அ.தி.மு.க. மா.செ. ராஜேஷ் தொடர்புடைய இடங்களிலும் ரெய்டு நடத்தப்பட்டிருக்கிறது. அப்போது தி.மு.க. தரப்புக்கு நெருக்கமான ஜி ஸ்கொயர் நிறுவனத்திடம், அவர் ஈஞ்சம்பாக்கம் ’சாண்ட் வேவ்ஸ்’ அபார்ட்மெண்ட்டில் 3 கோடி ரூபாய்க்கு வீடு வாங்கியதற்கான ஆவணங்களும் சிக்கியதாம்.''”
"சரிப்பா, கே.எஸ்.அழகிரி நடத்திய காங்கிரஸ் கட்சியின் அரசியல் விவகாரக் குழு கூட்டத்தை, கட்சிப் பிரமுகர்கள் பலரும்
புறக்கணித்திருக்கிறார்களே?''”
"நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து விவாதிக்கத்தான், தமிழக காங்கிரசின் அரசியல் விவகாரக் குழு கூட்டத்தைக் கூட்டினார் அழகிரி. இதை முன்னாள் தலைவர்களான தங்கபாலு, கிருஷ்ணசாமி, இளங்கோவன், திருநாவுக்கரசு மற்றும் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் உள்ளிட்ட பலரும் புறக்கணித்துவிட்டனர். இது அழகிரி தரப்பை அப்செட் ஆக்கியிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் எம்.பி.க்களான மாணிக்தாக்கூர், வசந்த்விஜய் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் சிலர்தான் கலந்துக்கிட்டாங்களாம். இதில் பேசிய அழகிரி, "வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. நமக்கு பாண்டிச்சேரி உட்பட 5 தொகுதிகளை மட்டும்தான் ஒதுக்கும்னு தெரியுது. மேலும் நமது சிட்டிங் தொகுதிகளிலும் மாற்றம் இருக்குமாம். அப்படி இருக்க நாம் எதுக்கு தமிழகம் முழுக்க பூத் கமிட்டிகளை அமைக்க வேண்டும்?'னு ஆதங்கத்தோடு பேசினாராம்..''”
"மற்றவர்கள் என்ன சொன்னார்களாம்?''”
"எல்லா தொகுதிகளுக்கும் பூத் கமிட்டி அமைக்க நம்மிடம் ஆட்களும் இல்லை. அதனால் நீங்க சொல்றது சரிதான்னு சொன்ன பலரும், "கடந்த தேர்தலின்போது தி.மு.க.விடம் இருந்து 10 தொகுதிகளை வாங்கினோம். இந்த முறை ஓரிரு தொகுதிகளையாவது கூடுதலாக நாம் பெற வேண்டும். குறைந்த தொகுதிகளுக்கு நாம் ஒப்புக்கொண்டால், நமது தொண்டர்கள் சோர்ந்து போவார்கள்'னு தெரிவிச்சிருக்காங்க. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட பலருக் கும் அழகிரியை, மாணிக்தாக்கூர் எம்.பி., தன் இஷ்டப்படி வழி நடத்தறதா மனக்குறை இருக்கு. இதை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொண்டதையும் அறிந்துகொள்ள முடிந்தது. ஏற்கனவே கர்நாடக காங்கிரசின் பொறுப்பாளராக மாணிக்தாக்கூர் இருந்தபோது, அங்கே நடந்த சில ஊழல் விவகாரங்களை அறிந்த ராகுல், டோஸ் விட்டதாகவும் சொல்கிறார்கள்.’''’
"கோவை தி.மு.க. மேயர் கல்பனா மீது மறுபடி, மறுபடி புகார்கள் சுழன்றடிக்கிதே?''”
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/rang4_73.jpg)
’"ஆமாங்க தலைவரே, ஏற்கனவே அவருக்கு தி.மு.க. தரப்பிலேயே எழுந்துள்ள எதிர்ப்பு குறித்து நாம் பேசியிருக்கிறோம். இவர் அறிவாலயம் வந்து சந்திக்க முயன்றும், முதல்வர் ஸ்டாலின், இவரைப் பார்க்காமல் திருப்பி அனுப்பியிருக்கிறார். அதேபோல் அமைச்சர் நேருவை கல்பனா சந்தித்தபோது, அவரை அமைச்சர் காய்ச்சி எடுத்திருக்கிறார். இந்த நிலையில், கோவை மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலர் கூட்டம் நடந்திருக்கிறது. இதில் பங்கேற்காமல் கல்பனா புறக்கணிக்க, அந்தக் கூட்டம். துணைமேயர் தலைமையில் நடந்திருக்கு. அந்த கூட்டத்தில் பேசிய கவுன்சிலர்கள் பலரும், கடந்த ஒண்ணேகால் வருடத்தில் 500 கோடி மதிப்பிலான டெண்டர் விடப் பட்டிருக்கிறது. இதில் 2 சதவீதம் என்ற வகையில் சுமார் 10 கோடியை கமிஷனாக பெற்றிருக்கிறார் மேயர். எங்களுக்கு ஒத்த ரூபாயைக்கூட அவர் கொடுக்கவில்லை’ என்று குற்றம் சாட்டியிருக்கிறார்கள். இதற்கிடையே, அங்குள்ள வ.உ.சி. மைதானத்தில் தனியார் பொருட்காட்சி நடத்த திறந்தவெளி ஒப்பந்த ஏலம் விடப்பட்டிருக்கு. இதை மத்திய மண்டல தலைவர் மீனாலோகுவின் ஆதரவாளர் ஒருவர் ஏலம் எடுத்தாராம். மேயரைக் கவனிக்காததால், இன்னும் அதற்கு மேயர் ஒப்புதல் கொடுக்கவில்லை என்கிறார்கள்.’''’
"நானும் ஒரு முக்கிய மான விசயத்தை உன்கிட்ட சொல்ல விரும் பறேன். போனமுறை நாம் உரையாடியபோது, காலியாக இருக்கும் மருத்துவக் கல்வித்துறை இயக்குநர் பதவியை நிரப்புவது குறித்து, துறை அமைச்சரும் துறைச் செயலாளரும் வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டிருப்பது பற்றிய தகவலை, நாம் பகிர்ந்துகொண்டோம். அப்ப, துறையின் செயலாளர் பெயர், ககன்தீப்சிங் பேடி ஐ.ஏ.எஸ். என்பதற்குப் பதிலாக செந்தில்குமார் ஐ.ஏ.எஸ். என கவனக்குறைவால் தவறாகப் பதிவாகியிருக்கிறது. அதனால் ஒரு செய்தியைப் பகிரும்போது நாம் மிகவும் கவனமா இருக்கணும்பா.''
___________
இறுதிச்சுற்று!
நீலகிரி கொடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி. காவல்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை செய்துவரும் நிலையில் 14-ந் தேதி வியாழக்கிழமை ஓட்டுநர் கனகராஜ் சகோதரர் தனபால் விசாரணைக்கு ஆஜரானார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/rang5_34.jpg)
இந்த நிலையில் ஆஜராவதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்தவர், "கனகராஜிடம் பேரம் பேசப்பட்ட தொகை யை கொடுக்காமல் கனகராஜை தாக்கி இருக்கின்றனர். இதில் எஸ்.பி.சி. ஐ.டி. போலீசாரும் ஒருவர். சமுத்திரம் கிராமத்தில் மதுபானம் அருந்தும் பொழுது விஷம் கலந்து கனகராஜை கொல்ல முயறன்றனர். அதே போல அயோத்திபட்டினம் என்ற இடத்திலும் கொலை செய்ய முயன்றனர்... ஆனால் கனகராஜ் தப்பிவிட்டார். கடைசியாக ஆத்தூரில் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். கனகராஜ் அங்கு நடந்த சம்பவங்களை என்னிடம் சொல்லியிருக்கிறார். அதில் தொடர்புடைய நபர்களின் பட்டியல் எடுத்து வந்துள்ளேன். பட்டியலில் 50க்கும் மேற்பட்டோர் இருக்கின்றனர். கனகராஜ் கொண்டு வந்த சூட்கேஸ்களில் ஆவணங்கள் இருந்தது. 5 பெட்டிகளில் 3 சங்கரியிலும் 2 சேலத்திலும் கொடுக்கப்பட்டது. சங்ககிரியில் எடப்பாடியின் மைத்துனர் வெங்கடேஷிடம் கொடுக்கப்பட்டது. சேலத்தில் ஆத்தூர் இளங்கோவனிடம் கொடுக்கப்பட்டது
எடப்பாடி பழனிச்சாமி, வேலுமணி, தங்கமணி, வேலுமணி சகோதரர் அன்பரசன், சஜீவன், அனுபவ் ரவி, வினோத் ஆத்தூர் இளங்கோவன் ஆகியோர்தான் இந்த வழக்கில் முக்கியமானவர்கள்'' என்றார்.
-நாகேந்திரன்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-09/rang-t_1.jpg)