மூன்றுநாள் அரசுமுறைப் பயணமாக டெல்லிக்குச் சென்றிருந்த தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, சென்னைக்குத் திரும்பிவிட்டார். இந்த பயணத்தில் முக்கிய சந்திப்புகள் நடந்துள்ளன என்கின்றன டெல்லி தகவல்கள்.

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் நீண்ட மாதங்களாக நிலுவையில் வைத்திருந்த ரவியின் செயல்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வழக்குத் தொடர்ந்தார் முதல்வர் ஸ்டாலின்.

governor

இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், மசோ தாக்கள் மீது முடிவெடுக்காமல் நிலுவையில் வைத்திருப்பதும், இரண்டாவது முறை நிறை வேற்றப்பட்ட மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்ததும் சட்டவிரோதம் என்று சொல்லி, தங்களுக்கிருக்கும் சிறப்பு அதி காரத்தைப் பயன்படுத்தி, கவர்னர் ரவியால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல்கலைக்கழகங் கள் தொடர்பான 10 மசோதாக்களை அங்கீகரித்து தீர்ப்பளித்தது.

மேலும் கவர்னருக்கும், ஜனாதிபதிக்கும் மசோதாக்களை முடிவெடுக்க காலக்கெடு வினையும் நிர்ணயித்து அறிவித்தது உச்சநீதிமன் றம். இந்தத் தீர்ப்பினால் தமிழக அரசு நிறை வேற்றிய 10 மசோதாக்களும் உயிர் பெற்றன. சட்டப்பேரவை நிறைவேற்றி கவர்னருக்கு மசோதாக்களை அனுப்பி வைக்கப்பட்ட நாளிலிருந்தே ஒப்புதல் வழங்கப்பட்டதாக எடுத்துக்கொள்ள வேண்டும் எனத் தீர்ப்பளிக்கப் பட்டதால் 10 மசோதாக்களையும் அரசிதழில் (கெஜட்) உடனடியாக வெளியிட்டது தமிழக அரசு. இந்த 10 மசோதாக்களில், பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பிலிருந்து கவர்னரை நீக்கி, வேந்தராக முதல்வரை சேர்ப்பதற்கு வழிவகை செய்யப்பட்ட மசோதாவும் அடங்கும்.

Advertisment

இந்த நிலையில், மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதலளித்ததால் பல்கலைக் கழகங்களின் வேந்தரானார் முதல்வர் ஸ்டாலின். இதனை பதிவு செய்யும் வகையில், கடந்த 16-ந்தேதி துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர் களுடனான ஆலோசனைக் கூட்டம் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடந்தது. அந்த ஆலோசனைக் கூட்டத்தில், துணைவேந்தர் களுக்கும், பதிவாளர்களுக்கும் பல்வேறு ஆலோ சனைகளை வழங்கினார் வேந்தர் ஸ்டாலின்.

கவர்னரின் அதிகாரத்தில் உச்சநீதிமன்றத் தின் தீர்ப்பு, பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஸ்டாலின் பொறுப்பேற்பு, அதனடிப்படையில் ஸ்டாலின் நடத்திய ஆலோசனை ஆகியவை தமிழகத்தில் மட்டுமல்ல டெல்லியிலும் அதிர்வுகளை ஏற்படுத்தின.

இந்த சூழலில்தான் 17-ந்தேதி டெல்லிக்கு விரைந்தார் கவர்னர் ரவி. துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கரை சந்தித்து ஆலோசித்தார். இந்த சந்திப்புக்கு முன்பாக ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜக்தீப் தன்கர், உச்ச நீதிமன்றத் தின் தீர்ப்பை விமர்சனம் செய்திருந்தார். குறிப்பாக, உச்சநீதிமன்றம் சூப்பர் பார்லி மெண்டாக செயல்படுகிறது என்று கடுமை காட்டியிருந்தார் ஜக்தீப் தன்கர்.

Advertisment

துணைஜனாதிபதி தன்கரின் இத்தகைய விமர்சனம், பல்வேறு தளங்களில் வெவ்வேறு கோணங்களில் எதிரொலித்தன. இந்த சூழலில்தான் ஜக்தீப் தன்கரை சந்தித்து உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்தும், துணை வேந்தர்கள் மாநாட்டை ஊட்டியில் நடத்துவது குறித்தும் விவாதித்துள்ளார் கவர்னர்.

இதுகுறித்து விசாரித்தபோது, "தமிழக கவர்னராக 2021-ல் பொறுப்பேற்றார் ரவி. அதன்பிறகு ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் தமிழகத்தில் உள்ள மத்திய, மாநில அரசுகளின் பல்கலைக்கழங்கங்கள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் கள் மாநாட்டை ஊட்டியிலுள்ள ராஜ்பவனில் நடத்துவதை வழக்கமாக வைத்திருந்தார் கவர்னர் ரவி.

governor

பல்கலைக்கழகங்களின் இணை வேந்தர் பொறுப்பில் இருப்பது உயர் கல்வித்துறை அமைச்சர். ஆனால் அவரது ஒப்புதலின்றியும், அவரது பங்கேற்பின்றியும் இந்த மாநாடு நடந்து வந்தது. வேந்தராக கவர்னர் இருந்ததால், மாநாட்டுக்கு எதிராக எந்த முயற்சியையும் தமிழக அரசு எடுக்கவில்லை. மேலும், துணைவேந்தர்கள் கலந்துகொள்வதையும் தடுக்கவில்லை.

இப்படிப்பட்ட சூழலில்தான், இந்த வருடமும் அந்த மாநாடு ஏப்ரல் 25 முதல் 27-ந் தேதி வரை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே துவங்கி விட்டன. துணை வேந் தர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது வேந்தர் பொறுப்பி லிருந்து கவர்னரை நீக்கும் மசோதா உள்பட 10 மசோதாக்களையும் உச்சநீதிமன்றம் அங்கீ கரித்துவிட்டதால், தீர்ப்புக்குப் பிறகு நடக்கும் இந்த மாநாடு கவர்னர் தலைமையில் நடத்த முடியுமா? என்கிற சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

அதனால்தான் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கரை சந்தித்தார் கவர்னர் ரவி. கல்வி பொதுப் பட்டியலில் இருப்பதால் துணை ஜனாதிபதி தலைமையில் மாநாட்டை நடத்தலாம் என ஆராயப்பட்டுள்ளது. அதனடிப்படையில் மாநாட்டுக்கு ஜக்தீப் தன்கர் வருவது உறுதியாகியிருக்கிறது. அவரது தலைமையில் நடக்கும் இந்த மாநாட்டில் கவர்னர் கலந்து கொள்வார் என்றும் தெரிகிறது. அதாவது, துணை ஜனாதிபதி வருவதால் ப்ரோட்டகால் படி அவரை வரவேற்பதும், அவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் கவர்னர் கலந்து கொள்வதும் தவறானது இல்லை.

ஆனால், பல்கலைக்கழகங்களின் வேந்தராக தற்போது முதல்வர் ஸ்டாலின் இருக்கும் நிலையில், இந்த மாநாட்டுக்கு தமிழக அரசின் அனுமதியை கவர்னர் மாளிகை பெற்ற தாகத் தெரியவில்லை. மேலும், மாநாட்டில் கலந்துகொள்ள முதல்வர் ஸ்டாலினை அழைத்ததாகவும் தெரியவில்லை. ஆக, அரசின் அனுமதியின்றி துணை வேந்தர்கள் மாநாட்டை கவர்னர் மாளிகை நடத்துவதும், முதல்வரை அழைக்காமல் மாநாடு நடத்தப்படுவதும் சட்டச் சிக்கலை உருவாக்கக்கூடும்! அதே சமயம், வேந்த ரான முதல்வரை அழைக்காமல் மாநாடு நடந்தால் அதில் துணைவேந்தர் கள் கலந்துகொள்வதை முதல்வர் அனுமதிப்பாரா? தடுப்பாரா? வேந்தரின் அனு மதியில்லாமல் நடக்கும் மாநாட்டில் கலந்து கொள்ளும் யோசனை துணைவேந்தர்களுக்கு வருமா? என்கிற கேள்விகள் எழு கின்றன. அந்த வகையில், முதல்வர் ஸ்டாலின் எடுக்கப்போகும் எதிர் வினையைப் பொறுத்தே இந்த விவகாரம் பூதாகரமாவதும், புஸ்வாணமாவதும் தெரிய வரும்''’என்கின்றன டெல்லி தகவல்கள்.

இதற்கிடையே கல்வியாளர்கள் சிலரிடம் நாம் பேசியபோது, "வேந்தர் பொறுப்பிலிருந்து கவர்னரை நீக்கியாச்சு. வேந்தராக முதல்வர் இருப்பார் என்று கெஜட் நோட்டிஃபிகேசனும் வந்துடுச்சு. ஆனால், வேந்தர் என்கிற முறையில் துணைவேந்தர்களை முதலமைச்சரால் நியமிக்க முடியுமா? இதில்தான் சிக்கல் இருக்கிறது. அதாவது, தமிழகத்தைப் போலவே மேற்கு வங்கம் மற்றும் கேரள அரசுகளும் இதேபோன்று மசோதாவை நிறைவேற்றியிருக்கின்றன. மேற்கு வங்கம் இதுபோன்ற மசோதாவை நிறைவேற்றுகிறது எனத் தெரிந் ததுமே, துணைவேந்தர்களை நியமிக்கும் பொறுப்பை யூ.ஜி.சி. போர்டுக்கு மத்திய அரசு மாற்றிவிட்டது.

அந்த போர்டில் வேந்தர், யூ.ஜி.சி. சேர்மன், யூ.ஜி.சி. யின் செனட் கமிஷன் ஆகிய 3 உறுப்பினர்கள் இருக்கிறார் கள். இந்த 3 உறுப்பினர்கள்தான் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் பெற்றவர்கள். அந்த வகையில் பார்த் தால், வேந்தர் பொறுப்பில் தற்போது முதல்வர் இருக்கிறார். மற்ற 2 உறுப்பினர்களும் மத்திய அரசின் கட்டுப்பாட்டி லுள்ள யூ.ஜி.சி.யிடம் இருக்கின்றனர். மெஜாரிட்டி யூ.ஜி.சி.யிடம் இருக்கும் நிலையில், துணைவேந்தர்கள் நியமனத்தில் வேந்தராக இருக்கும் முதல்வரின் விருப்பம் எப்படி நிறைவேறும்? அதனால் நிறைய சிக்கல்கள் இருக்கவே செய்கிறது''’என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.

டெல்லியில் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கரை சந்திப்பதற்கு முன்னதாக சில முக்கிய சந்திப்புகளையும் நடத்தியிருக்கிறார் கவர்னர். குறிப்பாக, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அத்துறையின் உயரதிகாரிகள், ஐ.பி. மற்றும் சி.பி.ஐ. அதிகாரிகள், சட்ட நிபுணர்கள் ஆகியோரை சந்தித்துள்ளார்.

அஜீத்தோவல் மற்றும் அமித் ஷாவுடனான சந்திப்பில், தி.மு.க. அரசின் சட்டம் ஒழுங்கு குறித்து கடந்த 1 வருடத்தில் நடந்தவைகளைப் பட்டியலிட்டுக் காட்டியிருக்கிறார் கவர்னர். மேலும், தமிழகத்தை உலுக்கிய அரசியல் கொலைகளில் கொலையாளிகளைக் கண்டுபிடிக்க அரசு தரப்பில் ஆர்வம் இல்லை. ஆளும் கட்சியின் தலை யீடுகளால் போலீசாரின் கைகள் கட்டப்பட்டுள்ளன என்றும் கவர் னர் விவரித்திருக்கிறார். அதுமட்டு மல்லாமல், அமலாக்கத்துறையின் நடவடிக்கைகள் குறித்தும் விவாதம் நடந்திருக்கிறது.

அதாவது, சட்டவிரோத பணப் பரிவத்தனை மூலமாக கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்திலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள ஆட்சியாளர்கள் தொடர்புடைய பண முதலீடுகள் குறித்தும், அதன் வழிகள் குறித்தும் ஏற்கனவே கவர்னர் கொடுத்திருந்த கோப்பு களை மீண்டும் எடுத்து விவாதித் துள்ளனர். அப்போது, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கிறது. ஆனால், அந்த வழக்குகள் தீவிரப்படுத்தப் படுவதில்லை. அதனால், அந்த வழக்குகளில் தீவிரம் காட்டுங்கள் என வலியுறுத்தியிருக்கிறார் கவர்னர் ரவி''’என்று தெரிவிக்கின்றன டெல்லி சோர்ஸ்கள்.

ஆக, கவர்னர் செயல்பாடு களுக்கு டெல்லி கிரீன் சிக்னல் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது.