"சாதிச் சான்றிதழ் பெற வருவாய்த் துறையில் தவம் கிடக்க வேண்டாம். உங்களிடம் இருக்கும் ஆவணங்களையே அரசு ஏற்றுக் கொள்ளும்'' -இப்படிச் சொன்னால் உங்களுக்குப் பூரிப்பாகத்தானே இருக்கும். இது இங்கல்ல... கேரளாவில். சாதிச் சான்றிதழ் உள்ளிட்ட 14 வகையான அரசு சான்றிதழ் பெறுகிற வழியை எளிதிலும் எளிதாக ஆக்கியிருக்கிறார் கேரள முதல்வர் பினராய் விஜயன்.
கல்வி கற்கவும், வேலை வாய்ப்பு, பிற வகையான நமக்கான எந்த ஒரு ஆவணத்தையும் பெறவேண்டுமென் றால் வருவாய்த்துறை இன்றி அணுவும் அசையாது. வி.ஏ.ஓ.,ஆர்.ஐ, துணைதாசில்தார் இறுதியாக தாசில்தார் என்று சான்றிதழ் பெற ஆவணங்களோடு இத்தனை அதிகாரிகளிடமும் அலையவேண்டும்.
நாம் கொடுக்கும் பேப்பர்களுடன் ஒவ் வொரு அதிகாரிக்கும் முக்கியமான பேப்பரான வைட்டமின் "ப'“இணைக்கவில்லை என்றால் வேலை நடக்காது. கேரளாவில் 1957-லிருந்தே மக்கள் தங்களுக்கான எந்த ஒரு சான்றிதழ் பெற வேண்டுமானாலும் அதன் தன்மைக்கேற்ப, 20 முதல் 50 ரூபாய் வரையிலான ஆரம்ப கட்டணம் செலுத்தவேண்டும். பின்னர் அவைகளைப் பெற வருவாய்த்துறையில் வரிசையாக மொய்ப்பணம் வைக்கவேண்டும். இந்த மொய்ப்பணம் கால முன்னேற்றத்திற்கு ஏற்றபடி உயர்ந்திருக்கின்றது. அனைத்தும் கொடுத்தாலும் பாமர மக்கள் தொட்டு மேல்தட்டு வரை அலைக்கழிக்கப்பட்டு இன்னலைச் சந்தித்திருக்கிறார்கள். இதுதொடர்பான புகார்கள் தொடர்ந்து கேரள அரசுக்குப் போயிருக்கிறது.
1957 முதல் 2021-ன் அக். 06-ம் தேதி வரையிலான நிலை தான் இது. அதைத்தான் அக்-06 அன்று நடந்த அமைச்ச ரவைக் கூட்டத்தில் விவாதித்து, சான்றிதழ்களுக்கான புதிய முறையை நடைமுறைப்படுத்தியிருக்கிறார் பினராய் விஜயன்.
அதன்படி, எந்த ஒரு ஆவணத்தையும், நோட்டரி பப்ளிக் மற்றும் கெசட்டடு ரேங்க் அதிகாரிகள் அட்டஸ்ட் பண்ண வேண்டிய தேவை இல்லை. அரசு மற்றும் தனியார் சார்ந்தவை களுக்கு இது பொருந்தும். ஆவணதாரரின் ஒப்புதலே போதுமானது.
எஸ்.சி.எஸ்.டி.யின் ஊ.ர.ந சான்றிதழ் அட்டஸ்ட்டேஷன் மட்டும் மத்திய அரசின் அறிவிப்புப்படி வழக்கமான நடைமுறைகள் தொடரும்.
கேரளாவில் பிறந்த குழந்தைகள் கேரளாவைச் சார்ந்தவர்கள் என்று இனிமேல் அறிவிக்கப்படுவர். அவர்களின் ஆரம்பக் கல்விக்காகப் பெற் றோர்கள் பள்ளியில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தாலே போதுமானது. கேரள மாநிலத்திற்கு வெளியே அல்லது வெளிமாநி லத்தில் பிறந்த கேரள வாசிகளின் குழந்தை களுக்குத் தொடர் புடைய வி.ஏ.ஓ. சான் றிதழ் கொடுத்தாலே போதுமானது, ஏற்றுக் கொள்ளப்படும்.
இருப்பிடச் சான்று பெற இனிமேல் வருவாய்த் துறைக்குப் போகவேண்டிய அவசியமில்லை. அவர்கள் தங்களின் ஆதார் கார்டு, லேட்டஸ்ட் மின்சாரக் கட்டண ரசீது, பேரூர், கிராம நகராட்சியின் குடிநீர் கட்டண ரசீது, டெலிபோன் பில், வீட்டு வரி செலுத்திய ரசீது, ஆகியவற்றில் ஏதேனும் ஒரு ஆதாரத்தைக் கேட்கிற அரசுக்கோ, இதர நிறுவனங்களிடமோ சமர்ப்பித்தாலே ஏற்றுக்கொள்ளப்படும். இவை இல்லாதவர்களுக்கு உள்ளூரின் அரசு சார்ந்த நிறுவனம் கொடுத்த சான்றிதழே போதுமானது.
கல்வி மற்றும் உயர்கல்வி பயில்கிற மாணவர் கள் இனிமேல் தங்களுக்கான சாதிச் சான்றிதழ் கேட்டு வருவாய்த் துறைக்குப் போகவேண்டிய அவசியமில்லை. அவர்களின் எஸ்.எஸ்.எல்.சி. சான்றிதழில் பதியப்பட்ட சாதியே போதுமானது. இப்படி குறிப்பிடப்படாத மாணவ- மாணவிகள் அதுகுறித்து ஆன்லைனில் அப்ளை பண்ணிய 5 நாட்களுக்குள் வி.ஏ.ஓ.வும் தாசில்தாரும் அது குறித்த ரிப்போர்ட்டைத் தெரிவித்தாகவேண்டும். அங்கேயும் முடியவில்லை என்றால் சம்பந்தப்பட்ட மாணவர்கள் பிரமாணப் பத்திரம் தந்தாலே போதும்.
இதேபோன்ற வழிமுறைகள்தான் கல்விச் சான்றிதழில் பதியப்பட்ட ஒரே சாதிப்பிரிவைச் சார்ந்தவர்கள் திருமணம் செய்தால் அல்லது கலப்புத்திருமணத் தம்பதியருக்கும் பொருந்தும். திருமண பதிவிற்காக வருவாய்த்துறை, பிற துறை களுக்கு அவர்கள் அலையவேண்டிய அவசிய மில்லை. வி.ஏ.ஓ. சான்றிதழும் தேவையில்லை.
சிறைவாசிகளுக்கு மத்திய அரசால் அறி முகப்படுத்தப்பட்ட ஜீவன் பிரதான், பயோமெட் ரிக் டிஜிட்டல் சிஸ்டம் போன்றவைகளை, சிறைவாசிகள் தங்களின் வாழ்க்கைக்கான சான்றிதழாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். மக்களால் தரப்படும் பிரமாணப் பத்திரங்களை கெஜட்டடு அந்தஸ்து பெற்ற எந்த ஒரு அதிகாரியும் அட்டஸ்ட் செய்யலாம்.
ரேஷன் கார்டுகளில் குடும்ப உறவினர்கள், குடும்பத்தில் விடுபட்டவர்களின் பெயர்களைச் சேர்க்க வி.ஏ.ஓ., தாசில்தார்களிடம் போகவேண்டிய கட்டாயமில்லை. பள்ளிக்கல்விச் சான்று, பிறப்பு சான்றிதழ், ஆதார் கார்டு, பாஸ்போர்ட் இவை களில் ஒன்றைக் கொடுத்தாலே போதுமானது.
மக்கள் தங்களுக்கான அடையாள அட்டை யைப் பெற வருவாய்த்துறையை நாடவேண்டிய தில்லை. தங்களின் போட்டோ ஒட்டப்பட்ட ஆவணத்துடன் கெசட்டடு ரேங்க் அதிகாரியின் அட்டஸ்ட்ரேஷனே போதும்.
வெளிநாடுகளுக்கு வேலை அல்லது கல்வியின் பொருட்டோ செல்பவர்கள், தங்களின் உரிய சான்றிதழ்களுடன் உள்துறைக்கு விண்ணப் பித்தாலே போதும். ஆன்லைனில் அவைகளைச் சரிபார்த்து அனுமதியும் சான்றிதழும் வழங்க, இதற்கென சப்கலெக்டர் அந்தஸ்திற்குக் குறையாத அதிகாரிகள் நியமிக்கப்படுவர். இதற்காக மனு தாரர் போலீஸ் என்.ஓ.சி., வருவாய்த்துறை என்று போகவேண்டிய நிர்ப்பந்தம் தவிர்க்கப்படுகிறது.
-என 14 வகைகளில் வருவாய்த்துறை யினரால் அலைக்கழிக்கப்படுகிற மக்களை மீட்டிருக்கிறார் முதல்வர் பினராய் விஜயன்.