ddபாராளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாக இயங்கிவரும் நிலையில், அனைத்து முக்கிய கட்சிகளும் தங்க ளுடைய வேட்பாளர்களை அறிவித்து, பெரும்பாலானவர்கள் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மதியம் 12 மணிக்கு நல்ல நேரம் ஆரம்பிக்கும் சமயத்தில் தங்களுடைய மனுக்களை தாக்கல் செய்தனர். மற்ற வேட்பாளர்கள் இறுதி நாளில் தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், கரூர் நாடாளு மன்றத் தொகுதியில் தற்போது எம்.பி.யாக இருந்துவரும் ஜோதிமணிக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் தங்கவேல், பா.ஜ.க. சார்பில் செந்தில்நாதன், நாம் தமிழர் கட்சியில் மருத்துவர் கருப்பையா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

jothimani

கரூர் நாடாளுமன்றத் தொகுதி யைப் பொறுத்தவரை அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம் (தனி), மருங்காபுரி, குளித்தலை, தொட்டியம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் முன்பு இருந்தன. தொகுதி மறு சீரமைப்புக்கு பின்னர் கரூர் நாடாளு மன்றத் தொகுதியில் வேடசந்தூர், அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ண ராயபுரம், மணப்பாறை, விராலி மலை போன்ற சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றுள் ளன. கடந்த 1957ஆம் ஆண்டு முதல் கடந்த 2019ஆம் ஆண்டு வரை மொத்தம் 16 நாடாளுமன்றத் தேர்தல்கள் நடை பெற்றுள்ளது. இந்தத் தொகுதியை பொறுத்தவரை அ.தி.மு.க. சார்பில் நேரடியாகவும், தி.மு.க. சார்பில் கூட் டணிக் கட்சிகளும் தான் அதிகளவில் போட்டியிட்டுள்ளன. அதில் 7 முறை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியும், 6 முறை அ.தி.மு.க.வும் வெற்றி பெற்றுள் ளது. இதில் 1967ல் சுதந்திரா கட்சியும், 1996ஆம் ஆண்டில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும், 2004ஆம் ஆண் டில் தி.மு.க.வும் தலா ஒருமுறை வெற்றி பெற்றுள்ளன. பெரும்பான்மையாக காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்ற தொகுதி யாக இத்தொகுதி இருந்துவருகிறது.

Advertisment

dd

கடந்த 2019-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோதி மணி, 6 லட்சத்து 95 ஆயிரத்து 697 வாக்குகளும், அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட தம்பிதுரை 2 லட்சத்து 75 ஆயிரத்து 151 வாக்குகளும் பெற் றுள்ளனர். எம்.பி. ஜோதிமணி, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தம்பிதுரையை விட 4 லட்சத்து 20 ஆயிரத்து 546 வாக்கு கள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

இன்றைய கள நிலவரப்படி ஜோதி மணியை எதிர்த்துப் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் தங்கவேல், டெக்ஸ்டைல்ஸ் பிசினஸ் செய்து வரும் தொழிலதிபர். இவர் பெரிய அளவில் அறிமுகம் இல்லாதவர், இருப்பினும் தேர்தலில் செலவு செய்யும் அளவிற்கு தகுதியுள்ள நபர் என்பதால் இவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள் ளது. அதே சமயம், அமைச்சர் விஜயபாஸ்கர் தரப்பிலும் இவருக்கு ஆதரவு வழங்கப்படுகிறது. அதேபோல் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன், டைல்ஸ், கிரானைட் விற்பனை செய்யும் தொழில் செய்து வருவதால், இவரும் மக்களிடம் பெரிய அளவில் அறிமுகமில்லாதவர். மற்றபடி, தேர்தலுக்கு நிறையவே செலவு செய்யும் அளவிற்கு வசதியானவர் என்பதால் இவருக்கு இங்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் மருத்துவர் கருப்பையாவிற்கு, அவர் மருத்துவர் என்ற ஒரே காரணத்திற்காக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் போட்டியிடும் 4 பேரும் கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவர்கள். தற்போது இந்த தொகுதியில் எம்.பி.யாக இருக்கும் ஜோதிமணி, கடந்த முறை இந்த தொகுதியில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். தனக்கென ஒரு தொண்டர் படையை வைத்துக்கொண்டு, அவர்களுக்கும் களப்பயிற்சிகளை வழங்கிவந்தார்.

Advertisment

இவர் இதுவரை எந்த ஊழல் குற்றச்சாட்டுக் கும் ஆளாகாதவர். கொரோனா காலத்தில் இந்தத் தொகுதிக்கான நிதி முழுமையாக வராததால், அவருக்கு வழங்கப்பட்ட நிதியைக் கொண்டு பெரும்பாலான வளர்ச்சிப் பணிகளை செய்துள் ளார். தொகுதி மக்களின் பிரச்சனைகளுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்ததோடு, அகில இந்திய அளவில் பா.ஜ.க. அரசுக்கு எதிரான களப்போராட்டங்களில் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டவர். இந்த தொகுதியில் மிகவும் ஆக்டி வாக செயல்படக்கூடிய எம்.பி. என்று பெயரெ டுத்துள்ளார். சமூக ரீதியான பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தும், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பொதுப் பிரச்சனைகளுக்காக அதிகளவில் போராட்டங்களை நடத்தியுள்ளார். எம்.பி. ஜோதிமணி மிகவும் பரிட்சயமான முகம் என்பதாலும், எப்போதும் எளிதில் அணுகக் கூடிய நபர் என்பதாலும், தி.மு.க. ஆளும் கட்சியாக இருப்பதாலும், இவரே மீண்டும் இத்தொகுதியில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. கடந்த முறை வெற்றி பெற்றது போல பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று கரூர் நாடாளுமன்றத் தொகுதி மக்களே நம்பிக்கையுடன் உள்ளனர்.