"ஹலோ தலைவரே, முதல்வர் ஸ்டாலின் காவல்துறை அதிகாரிகளிடம் செய்த ஆலோசனை, இப்ப உள்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திக்கிட்டிருக்கு.''”

"ஆமாம்பா, ஆலோசனைங்கிற பேர்ல, சில அதிகாரிகளுக்கு அவர் கறார் குரலில் எச்சரிக்கை விடுத்திருக்கிறாரே?''”

stalin

"உண்மைதாங்க தலைவரே, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசிக்கணும்னு சொல்லித்தான் இரண்டு நாளுக்கு முன், ஸ்டாலின் முக்கியமான சில காவல்துறை அதிகாரிகளை அழைத்திருக்கிறார். சந்தித்த அதிகாரிகளிடம், உள்ளாட்சித் தேர்தல் பாதுகாப்பு குறித்தும், நேர்மையாகத் தேர்தலை நடத்துவது குறித்தும் விவாதித்த அவர், ஒரு குறிப்பை கையில் எடுத்துக்கிட்டு, எனக்கு ஒன்னும் தெரியாதுன்னு நினைச்சிக்கிட்டு இங்க இருக்கும் சில காவல்துறை அதிகாரிகள், அ.தி.மு.க.வுக்கும் மாஜி மந்திரிகளுக்கும் விசுவாசமா, அங்கிருக்கும் தலைவர்கள் சொல்றதை எல்லாம் செய்துக்கிட்டு இருக்கீங்க. உங்க போக்கை உடனே மாத்திக்கலைன்னா, அது சரியா இருக்காதுன்னு சிலர் முகத்தைப் பார்த்துக்கிட்டே சொல்ல, அவங்க சங்கடத்தில் நெளிஞ்சிருக்காங்க. அவர் குரலில் இருந்த தீவிரம் அவங்களை மிரளவும் வச்சிருக்குதாம்.''”

Advertisment

"ஆட்சி மாறியும் காட்சி மாறலைன்னு கோட்டை வட்டாரத்திலும் டாக் அடிபடுதே?''”

"ஆமாங்க தலைவரே, தமிழக அரசில் மிக முக்கியமான 32 துறைகள் இருக்கு. இவற்றுக்குத் தேவையான கணினி, பிரிண்டர், லேப்டாப் உள்பட எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் எதுவாக இருந்தாலும், அரசின் பொதுத்துறை நிறுவனமான எல்காட்லதான் வாங்கணும்னு 2006-2011 கலைஞர் தலைமையிலான தி.மு.க. ஆட்சியில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் அரசுக்கும் செலவினம் குறைந்ததோட, எல்காட்டும் செழிப்பா இருந்துச்சு. இப்படி ஒரு அரசாணை இருந்தும் முந்தைய அ.தி.மு.க ஆட்சியில், இலவச லேப்டாப்புகள் மட்டுமே எல்காட்டில் கொள்முதல் செய்யப்பட்டுச்சு. அதிலும் தொழில்நுட்பத் துறை மட்டுமே கொள்முதல் செய்தது.''”

rr

Advertisment

"மற்ற அனைத்து துறைகளும் எலக்ட்ரானிக் பொருட்களை வெளியில் வாங்குச்சா?''”

"அதேதாங்க தலைவரே, மற்ற துறைகள் எல்லாமே தனித்தனியா டெண்டர் விட்டு, தேவையான எலெக்ட்ரானிக் சாதானங்களை கொள்முதல் செய்துச்சு. இதனால் அரசுக்கு கூடுதல் செலவானதோட, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் காட்டுல அடைமழை பேஞ்சிது. இதுதான் கடந்த ஆட்சியின் தில்லாலங்கடி டெக்னிக். தற்போது தி.மு.க ஆட்சி வந்த பிறகும் அ.தி.மு.க.வின் அதே தில்லாலங்கடி பாணியையே இப்ப அனைத்து துறைகளும் கையாள ஆரம்பிச்சிடுச்சி. குறிப்பாக, அமைச்சர் செந்தில்பாலாஜி துறையான மின்சாரத் துறையில், எலெக்ட்ரானிக் மீட்டர்களை வாரியம் மூலமாகவே கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டிருக்கு. இதை மோப்பம் பிடித்த பா.ஜ.க அண்ணாமலை உஷாராயிட்டார். ஏற்கனவே தீபாவளி நேரத்தில், போக்குவரத்துத் துறையினருக் காக ஸ்வீட்ஸ் வாங்க, அரசின் ஆவின் நிறுவனம் இருக்கும் போதே, தனியார் ஸ்டால் ஒன்றில் அதிக விலை கொடுத்து வாங்க போக்குவரத்து அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆர்டர் கொடுத்ததை, அண்ணாமலைதான் அம்பலப்படுத்தினார். அதனால் அந்த ஆர்டரை கேன்சல் செய்ய வைத்தார் ஸ்டாலின். இதேபோல், இப்ப எலக்ட்ரானிக் பர்சேஸ் விவகாரத்தையும் அண்ணாமலை கையில் எடுக்கத் திட்டம் போட்டி ருக்காராம். அதுதொடர்பான விவகாரங்கள் முழுதையும் அவர் டெல்லி உத்தரவுப்படி சேகரிக்கிறாராம்.''”

"நக்கீரன் சொன்ன மாதிரியே அ,தி.மு.க. அவைத்தலைவரா தமிழ்மகன் உசேன் நியமிக்கப் பட்டிருக்கிறாரே?''”

"ஆமாங்க தலைவரே, விரைவில் அ.தி.மு.க. பொதுக்குழுவைக் கூட்ட இருக்கும் நிலையில், தான் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் அமர்வதற்காக விறுவிறுன்னு எடப்பாடி காய் நகர்த்திக்கிட்டு இருக்கார். கட்சியின் சீனியர்களோ, அதுக்கு முன்பாக செயற்குழுவைக் கூட்டி, அவைத்தலைவர் ஒருவரை தேர்ந்தெடுக்க ணும்னு சொல்ல... எடப்பாடியோ, ஓ.பி.எஸ்.சுக்கு அந்தப் பதவியைக் கொடுத்துடுவோம்னு சொல்லியிருக்கார். இதைக்கேட்ட ஓ.பி.எஸ்., அந்தப் பதவி எனக்கு வேணாம். எனக்கு என்ன பதவிங்கிறதை பொதுக்குழுவில் பார்த்துக்கலாம்னு ’இக்கு’ வச்சி மறுத்துட்டார். இந்த நிலையில், அன்வர்ராஜாவை கட்சியில் இருந்து நீக்கனும்னு முடிவெடுத்த எடப்பாடி, இதனால் கட்சியில் இருக்கும் இஸ்லாமியத் தரப்பில் சலசலப்பு ஏற்பட்டுவிடக் கூடாதுன்னு, அதை சமாளிக்கக் கட்சியின் அவைத்தலைவரா தமிழ்மகன் உசேனை, உட்கார வச்சிட்டார். இதை முன்னதாகவே நக்கீரன் ஸ்மெல் செய்துடுச்சு.''”

"என்னைக் கைது செய்ய சதி நடக்குதுன்னு மாஜி அ.தி.மு.க . அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அலற ஆரம்பிச்சிட்டாரே?''”

"இதுவரை, "என்னை கைது செய்ய முடியாது. தைரியம் இருந்தால் என்மீது போலீஸ் கை வைக்கட்டும்'னு சவால் விட்டுக்கிட்டிருந்த அதே வேலுமணிதான், இப்ப இப்படி மிரண்டு போய் புலம்பறார். அதுக்குக் காரணம், அவருக்கு எதிரானrr அழுத்தமான எவிடென்ஸ்கள் லஞ்ச ஒழிப்புத்துறை யிடம் வசமா சிக்கியிருக்கு. அதோட வேலுமணி, கோவை மேயருக்கு சந்திரசேகர் என்பவரின் மனைவியை நிறுத்தத் திட்டமிட்டிருக்கார். அவரை வெற்றிபெறச் செய்து கோவை, தன் கையை விட்டுப் போய்விடக்கூடாதுன்னு, பணத்தை இறைக்கவும் ரெடியானார். இனியும் இவரை விட்டு வச்சா, கோவையை அவருக்கு பட்டா போட்டுக் கொடுத்தமாதிரி ஆயிடும்னு உஷாரான அமைச்சர் செந்தில் பாலாஜி, இனி வேலுமணி தப்ப முடியாது. அவர் கைதாகும் நேரம் வந்துடுச்சின்னு சொல்லத் தொடங்கிட்டார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாகவே வேலுமணிக்கு கைது முகூர்த்தம் இருக்கும்னு தகவல் வருது.''”

"சரிப்பா டெல்லிப் பக்கம் போவோம். தி.மு.க. எம்.பி.க்கள் பதவி ஏற்றுகொண்ட போது, ராஜ்யசபாவில் சலசலப்பு ஏற்பட்டுச்சே?''”

"ஆமாங்க தலைவரே, தி.மு.க. சார்பில் ராஜ்யசபா எம்.பி.க்களாக தேர்வு செய்யப் பட்ட எம்.எம்.அப்துல்லா, ராஜேஷ்குமார், கனிமொழி, என்.வி.என்.சோமு உள்ளிட் டோர் பதவிப் பிரமாணம் எடுத்துக் கிட்டப்ப... ராஜேஷ்குமார் மட்டும், "வாழ்க தளபதி! வெல்க அண்ணன் உதயநிதி!'ன்னு முழக்கமிட... அந்த சபையே திகைச்சிப் போச்சு. ஒருகணம் ஜெர்க் ஆன சபாநாயகர் வெங்கையா நாயுடு, "உங்க முழக்கம் அவைக்குறிப்பில் ஏறாது. இதையெல்லாம் வெளியில் வச்சிக்கங்க'ன்னு பகிரங்கமாவே கண்டிச்சார். புது எம்.பி.யின் கோஷத்தை தி.மு.க.வின் சீனியர் எம்.பிக்களும் ரசிக்கலை, சங்கடப்பட்டிருக்காங்க.''”

"ஜி.கே.வாசனை தி.மு.க. எம்.பி.க்கள் இன்சல்ட் பண்ணினாங்கன்னும் செய்தி வருதே?''”

"ராஜ்யசபாவில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனை பேச அழைத்தார் வெங்கையா நாயுடு. உடனே வாசன் எழுந்து, "தமிழகத்தின் மழை வெள்ளம் பற்றிப் பேசுகிறேன்ன்னு தன் உரையை ஆரம்பிச்சார். அந்த நேரத்தில் அவரைப் பேச விடாதபடி எழுந்த தி.மு.க எம்.பி.க்கள், மாநிலங்களவை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 12 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து கோஷம் போட ஆரம்பிச்சிட் டாங்க. உண்மையில், மழை வெள்ள விவகாரத்தில், தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகமிழைக்கக் கூடாதுங்கிற வகையில் தான் வாசன் பேசினார். அதுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டிய தி.மு.க. எம்.பி.க்கள், திரிணாமுல் காங்கிரஸ், சமாஷ்வாடி கட்சியைச் சேர்ந்த 12 பேருக்காக, வெளிநடப்பு செஞ்சிருக்காங்க. ஆனா... திரிணாமுல் காங்கிரஸ் -சமாஜ்வாடி கட்சி உறுப்பினர் களே, அந்த ஜீரோ அவரில், தங்கள் மாநில பிரச்சினைகள் என்ன வருதுன்னு கவனிச்சி, அதுக்கு பதில் சொல்லிட்டுத் தானே வெளிநடப்பு செஞ்சாங்க.''

"ம்...''”

"தி.மு.க. உறுப்பினர்கள் மட்டும், தமிழக பிரச்சினைக்காக வாசன் குரல் கொடுக்கறதை கவனிக்காமல், உணர்ச்சிவசப் பட்டு வெளிநடப்பு செஞ்சிட்டாங்க. தமிழகப் பிரச்சினை களை பேசிவிட்டு, பிறகு வெளி நடப்பு செஞ்சிருக்கலாமேன்னு வாசனுக்கும் த.மா.கா.வுக்கும் வருத்தம். இந்த நிலைல, ஜி.கே. வாசன் ராஜ்யசபாவில் பேசி முடித்ததும், துணை கேள்வி களுக்கு தி.மு.க. எம்.பி.க்கள் சிலரின் பெயர்களை வெங்கையா நாயுடு அழைத்தார். அப்போதும் அவையில் தி.மு.க. உறுப்பினர்கள் யாரும் இல்லை.''”

"இதுபற்றி தி.மு.க. எம்.பிக் கள் தரப்பில் விசாரிச்சியா? என்ன சொல்றாங்க?''”

"அவங்ககிட்ட கேட்டேன் தலைவரே.. வாசன் இப்பவும் பா.ஜ.க. ஆதரவாளர்தான். அவ ருக்கான நேர ஒதுக்கீட்டிலேயே உள் அரசியல் இருக்குது. மாநிலங்களவை தி.மு.க. தலைவரான திருச்சி சிவா, எதிர்க்கட்சிகளுக்கு மாநிலங்களவையில் பாரபட்சம் காட்டப்படுவது பற்றி மீடியாக்கள்கிட்டேயே ஓப்பனா பேசிட்டாரு. நீக்கப் பட்ட 12 எம்.பி.க்களும் மாநிலங்களவை உறுப்பினர்கள். விவசாயிகள் போராட்டம், சி.ஏ.ஏ. எல்லாவற்றிலும் தி.மு.க.வும் அவர்களும் இணைந்து தான் அவையிலும் வெளியிலும் எதிர்ப்புக் குரல் எழுப்பினாங்க. அதனால, அவங்க மீதான நடவடிக்கைக்கு எதிரா குரல் கொடுக்கவேண்டியது தார்மீகக் கடமைன்னும், மாநிலப் பிரச்சினை களுக்கு அவையில் நேரடியாகவும் எழுத்துப்பூர்வ மாகவும் கேள்விகளை எழுப்பி பதில் பெற்றிருக்கிறோம்னும் சொல்றாங்க.''”

"கொரோனா காலத்தில் அரசுக்குப் பேருதவியாக இருந்த முன்களப் பணியாளர்கள் இப்ப புலம்பறாங்களே?''”

"உண்மைதாங்க தலைவரே, சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைல கடந்த 2 வருடங்களாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த, மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு ஆய்வாளர்கள் அனைவரையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டு, மீண்டும் காண்ட்ராக்ட் அடிப்படையில் புதிய களப்பணியாளர்களை எடுக்க மாநகராட்சி திட்டமிட்டிருக்கு. இதை அறிந்த அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்கள். மீண்டும் உருமாறிய கொரோனாங் கிற அச்சம் இன்னும் நீங்கலை. அதோட, இந்த மழைக்காலத்தில் டெங்கு, மலேரியா போன்ற நோய்களும் பரவிக்கிட்டு இருக்கு. அதனால் அவர்களின் தேவைகள் இன்னும் இருக்கு. அதனால் இவர்களை வீட்டுக்கு அனுப்பாமல், அவர் களையே பணியில் நீட்டிக்கும் முடிவை, முதல்வர் எடுக்கணும்னு அவங்க எதிர்பார்க்கறாங்க.''”.

rang

"வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் குற்றவாளிகள் தமிழகத்துக்குள் நுழையத் துடிக்கிறாங்கனு செய்தி வருதே?''”

"ஆமாங்க தலைவரே, போலி பாஸ்போர்ட், போலி விசா மூலம் தமிழகத்தில் இருந்து பல பேர் வெளிநாடுகளுக்கு தப்பியிருக்காங்க. அது தொடர்பான கிரிமினல் வழக்குகள் பல தமிழகம் முழுக்கப் பரவலாகப் பதிவு செய்யப்பட்டிருக்கு. அவர்கள் எல்லோரும் கைது நடவடிக்கைக்கு பயந்து அங்கேயே பதுங்கியிருக்காங்களாம். அப்படிப்பட்டவர்களில் பலரும், இப்போது மீண்டும் தமிழகத்துக்குத் திரும்ப ஆசைப்பட றாங்களாம். அதற்காக, அவர்கள் நீதித்துறையையும் காவல்துறையையும் பல வகையிலும் அணுகிக் கிட்டிருக்காங்க. இதற்காக கோடிக்கணக்கில் அள்ளிக்கொட்டவும் அவர்கள் தயாராக இருக்கிறார்களாம். இதையெல்லாம் மத்திய, மாநில உளவுத்துறைகள் கோட்டைவிட்டுக் கொண்டி ருப்பதாக, மத்திய உள் துறைக்கு அனாமதேய புகார்கள் பறந்திருக்கு.''”

rr

"நானும் ஒரு முக்கியமான தகவலைச் சொல்றேன். தமிழக அமைச்சர்களைக் கண்காணிக்க தலைமைக் குடும்பத்தினர் சார்பில் தலா ஒரு உதவியாளர் நியமிக்கப்பட்டிருக்காங்களாம். வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமியிடம் மதன் குப்புராஜ் என்பவர் உதவியாளராக நியமிக்கப் பட்டிருந்தாராம். அமைச்சர் காதுக்கு போகாமலே அந்த மதன் ரூட் மாறி, நில உரிமையாளர்களிடம் வீட்டுமனை உரிமம் வழங்க பேரம் பேசும் ஆடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் இப்ப விறுவிறுப்பா பரவத் தொடங்கியிருக்கு. எவ்வளவு சதுரஅடி நிலம் என்றெல்லாம் கேட்டுவிட்டு, அவர் பகிரங்கமாகவே அதில் ரேட் பேசுகிறார். இது தொடர்பான புகார், இப்போது முதல்வர் வரை போயிருக்கிறதாம்.''’