(24) பல வண்ணங்களில் இளைய தலைமுறை!
இதில் வேடிக்கை என்னவென்றால், இன்றைய ஆட்சியாளர்கள்‘ கார்ப்பரேட் கற்பிக்கும் கொள்கைகள்தான், இந்தியாவின் உயர் தேசபக்தி என்று அதிரடியாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதன்மூலம் கார்ப்பரேட்டு கொள்ளையை அம்பலப்படுத்து கிறவர்கள் மீது தேசப் பக்தி அற்றவர்களாகவும், தேசவிரோதிகளாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. இதில் எத்தனையோ பேர் கைது செய்யப்பட்டி ருக்கிறார்கள், சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.
டெல்லி விவசாயிகளின் போராட்டம், கார்ப்பரேட்டுகளை தேசவிரோதிகள் என்று அறி வித்துள்ளது. அவர்களை அரசாங்கத்தால் ஒன் றுமே செய்ய முடியவில்லை. களத்தில் எங்கு பார்த்தாலும் கார்ப்பரேட் எதிர்ப்பை அம்பலப் படுத்தும் அட்டைகள் வைக்கப்பட்டுள்ளன. எங்கள் போராட்டம், கார்ப்பரேட்டுக்ளுக்கு எதிரானது என்பதை மூடி மறைக்காமல் வெளிப் படையாக அறிவிப்பதற்கு விவசாயிகளுக்கு எந்தவிதமான தயக்கமும் இல்லை. நாட்கள், மாதங்கள் என்று ஓராண்டை நோக்கி நகர நகர அவர்களின் கார்ப்பரேட் எதிர்ப்பும் கூடுதலாகிக் கொண்டே வருகிறது. களத்தில் புயலின் வேகத்துடன் உருவாகும் ஒவ்வொரு முன்னெ டுப்புகளும், புதிய நம்பிக்கைகளைக் கொடுத்துக் கொண்டே இருக்கின்றன.
புதியவர்களுக்கு போராட்டம், ஞானத்தைக் கண்டடையும் இடமாக அமைந்துவிடுகிறது. போராட்ட களத்தில் முதல்முறையாக பங்கேற்கும் புதியவர்களிடம் பேசிப் பார்க்கிறேன். பல்வேறு வண்ணங்களை பல்வேறு சிந்தனைகளாகக் கொண்ட இளைஞர்களைப் பார்க்கிறேன். போராட்டம் தங்களைக் கைப்பிடித்து அழைத்துச் சென்று புதிய பாடங்களைக் கற்பிப்பதாகச் சொல்லுகிறார்கள்.
நீண்ட அரசியல் வாழ்க்கையில், இந்தப் போராட்டம் தந்த அனுபவம் முற்றிலும் வித்தியாச மானதாக எனக்குத் தெரிகிறது. ஏழ்மையை அகற்றி இந்திய மக்களிடம் சமத்துவத்தை உருவாக்கும் செயல்பாடுகள் குறித்த கொள்கைகளில் வளர்க்கப் பட்டவன் நான். புதிய விளக்கங்கள் இங்கு கிடைக் கின்றன. போராட்டம் கூர்மையாகி பிரச்சினையின் மையத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
எதிர்ப்பு கார்ப்பரேட் பற்றியது என்றாலும், அதில் ஒளிந்திருக்கும் மர்ம பிரதேசங்களை அங் குள்ள அறிவாளிகளும் இளைஞர்களும் கூடிக்கூடி பேசி ஆராய்ந்துகொண்டிருக்கிறார்கள். புதிய கருதுகோள்கள் அவர்களால் உருவாக்கப்படுகிறது.
ஒருமுறை நடுத்தர வயதுக்காரர் ஒருவரைச் சந்தித்தேன். அவர் பஞ்சாப் பத்திரிக்கை ஒன்றில் செயலாற்றிக் கொண்டிருக்கிறார். மிகுந்த நிதானமும் ஆழமும் கொண்டவர். ராணுவம் பற்றிய கூடுதல் தகவல்கள் அவரிடம் இருந்தது. பஞ்சாப் மக்களில் ஓய்வுபெற்ற ராணுவத்தினர் அதிக எண்ணிக்கையில் இருப்பது உங்களுக்குத் தெரியுமா என்று அவர் என்னிடம் பேச ஆரம்பித்தார்.
அவர் கூறும் தகவல் குறித்து, நான் முன்னரே யோசித்திருக்கிறேன். முதல் கட்டமாக டிராக்டர் களில் வந்த விவசாயிகள், வந்த இடத்தில் அப்படியே தங்கிவிடுகிறார்கள். நாளடைவில் கழிப்பிட வசதி, தண் ணீர் வசதி ஆகியவை பிரச்சினையாக உருவெடுத்து விடுகிறது. இதைத்தவிர, ஒரு கட்டத்தில் மக்கள் பெரும் எண்ணிக்கையில் வந்து போகத் தொடங்கினார்கள் இவர்கள் தங்கிச் செல்வ தற்கும், அந்தக் காலத்தின் சத்திரம்போல், தற்காலிக டெண்டுகள் தேவைப்பட்டன. இந்த தேவைகள் அனைத்தையும் போராட்டக் காரர் களால் உடனுக்குடன் நிறைவேற்றிக் கொள்ள முடிந்தது. இது எனக்கு மட்டுமல்ல. அங்கு வந்து செல்பவர்கள் அனைவருக்கும் ஒருவித ஆச்சரியத்தை தந்தது.
கட்டப்பட்ட டெண்டுகளும், கழிப்பறை களும் ஒரே மாதிரியாக இல்லை. எந்த இடம் எப்படி இருக்கிறதோ அதற்கு ஏற்றவாறும், எந்த பொருள் எங்கு கிடைக்கிறதோ அதை வைத்தும் அவர்கள் கட்டுமானப் பணிகளைச் செய்துவிடுகிறார்கள். மிகமிக குறுகிய காலத்தில் இவ்வளவு எளிமையாகவும் நுட்பமாகவும் இவர்களால் எப்படி இந்த ஏற்பாடுகளைச் செய்துகொள்ள முடிந்தது என்று யோசித் தேன். அது எனக்கு புரியாத புதிராக இருந்தது. அந்தப் புதிர் ஒரு தருணத்தில் அவிழ்ந்து, எனக்கு அதில் மறைந்திருந்த உண்மை ரகசிய மாகச் சொல்லியது. இவை ராணுவத்தில் ஓய்வு பெற்ற பொறியியல் பிரிவினரின் ஆலோசனை யில் கட்டப்பட்டது என்பதைப் புரிந்துகொண்டேன். இதுதான் உண்மையான தேசபக்தி என்பதாக உணர்ந்துகொண்டேன்.
அந்தப் பத்திரிக்கையாளர் என்னிடம் கேட்ட கேள்வி என்னை அதிர வைத்தது. அவர் கூறியது, எத்தகைய, யாராலும் மறுக்க முடியாத அடிப்படை யான உண்மையைக் கொண்டது. இந்த உண்மையை நம் நாட்டு மக்கள் முழுமையாக உணர்ந்து கொண்டு, அதில் விழிப்படையத் தொடங்கினால் நமது ஜன நாயகம் எத்தகைய மேன்மையை அடையும் என்று யோசிக் கிறேன். அவர் "ராணுவ வளர்ச்சி இந்தியாவின் வளர்ச்சியாகி விடுமா?' என்றார். அவர் சொல்வது உண்மை தான். உண்மையான வளர்ச்சி யை ஆராய வேண்டுமென்றால், ஒரு அரசாங்கம், எந்த துறைக்கு எவ்வளவு தொகையை ஒதுக்கி இருக்கிறது என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். இன்றைய வளர்ச்சிக்கு அடிப்டை யானது விவசாயம், தொழில் வளர்ச்சி, கல்வி, மருத்துவம் ஆகியவை.
இந்தத் துறைகளுக்கு மத்திய அரசு எவ்வளவு தொகை யை ஒதுக்கியிருக்கிறது? பட்ஜெட் தொகையின் பெரும்பகுதியை ராணுவம் விழுங்கி ஏப்பம் விட்டு விடுகிறது என்பது தான் உண்மை. இதைத்தான் ராணுவ வளர்ச்சி நாட்டின் வளர்ச்சி யாகி விடுமா? என்ற கேள்வியின் மூலம் பத்திரிக்கையாளர் கேட்டிருந்தார். இதில் உண்மையை மறைத்து, இந்திய மக்களை ஏமாற்ற இந்தியா ஆட்சியாளர்களுக்கு ஒரு வசதியான காரணம் கிடைத்துவிட்டது. இது தான் இன்றைய சிக்கல்.
இந்தியாவிலிருந்து பிரிந்து சென்ற பாகிஸ்தானின் இன்றைய மக்கள் தொகை சுமார் 22 கோடி. இது இந்திய மக்கள் தொகையில் ஆறில் ஒரு பகுதி. ஆனால் இதன் ராணுவ பலம் நம்மைத் திடுக்கிட வைக்கிறது. உலகில் ராணுவ பலத்தில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. அமெரிக்கா கடந்த காலங்களில் தொடங்கிய பல யுத்தங்களில் பாகிஸ்தான் ராணு வம் முழுமையாகப் பங்கெடுத்துள்ளது. ஈராக்குக்கு எதிராக அமெரிக்கா தொடுத்த வளைகுடா யுத்தத்தில் பெரும் எண்ணிக்கையில் பாகிஸ்தான் ராணுவம் பங்கெடுத்தது. இதைப்போல சோமாலியா யுத்தத்திலும், போஸ்சானியா மோதல்களிலும் இது பங்கேற்றது.
பாகிஸ்தானின் இந்த ராணுவ வலிமையைக் காரணம் காட்டி தனது வலிமையைப் பெருக்கிக் கொள்வது இந்தி யாவிற்கு எளிதாகிவிட்டது. பாகிஸ்தான் ராணுவ வலிமையில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது என்றால், இந்திய ராணுவ உலகில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. போட்டிப் போட் டுக் கொண்டு இரண்டு நாடு களும் அணு ஆயுதங்களையும் ராணுவக் கருவி களையும் பெருக்கிக் கொண்டிருக்கின்றன.
இதனால் கடந்த முப்பது ஆண்டுகளில் இந்திய ராணுவ பட் ஜெட்டில் 259 சதவீத தொகை கூடு தலாக்கியுள்ளது. ராணுவ வலிமையில் அமெரிக்கா, சீனா ஆகிய இரண்டு நாடுகளுக்கு அடுத்த இடத்தில் இந்தியா இருக்கிறது. ஸ்டாக்ஹோம் சர்வ தேசிய அமைதிக்கான ஆய்வு நிறுவனம் (நண்ல்ழ்ண்) இதை உறுதி செய் கிறது. இந்த நிறுவனம் வெளியிடும் வேறொரு தகவலையும் நாம் யோசித் துப் பார்க்கவேண்டும். இந்த காலத்தில் பொருளாதார மந்தம் காரணமாக உலகில் பல நாடுகள் தங்கள் ராணுவ பட்ஜெட் தொகையை பெரிய அளவில் குறைத்திருக்கின்றன என்பதையும் நாம் கணக்கில் கொள்ளவேண்டும்.
போராட்டக் களத்தில் நான் சந்தித்த பத்திரிக்கையாளர் மட்டு மல்ல, டெல்லியைச் சுற்றி சிங்கு, காஜ்பூர், டிக்கிரி ஆகிய இடங்களில் எழுப்பியுள்ள முக்கியமான கேள்வியும் இதுதான். இந்தியாவும் பாகிஸ் தானும் ராணுவத்திற்காக இவ்வளவு கூடுதலான செலவை ஏன் செய்ய வேண்டும் என்று கேட்கிறார்கள். ராணுவச் செலவை கூடுதலாக்கும் பிரச்சனையை ஆழமாக யோசித்து, அதற்கு அரசு சொல்லும் காரணங்கள் அறிவுப்பூர்வமாக இல்லை.
அது பாகிஸ்தான் பிரச்சனையோ அல்லது இந்தியப் பிரச்சினை யோ அல்ல. முஸ்லீம், இந்து என்ற மதப் பிரச்சனையும் அல்ல. இத்தனைப் பிரச்சினைகளையும் உருவாக்கி அந்த திரைமறைவில் ராணுவ கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்தியாவை கொள்ளையடிக்கும் சூழ்ச்சி சார்ந்த பிரச்சனை அது. இதைச் சரியாகப் புரிந்துகொண்ட ஒரு தலைமுறை போராட்டத்தில் உருவாகிக் கொண்டிருப்பது எதிர்கால இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் ஒன்றாகும்.
(புரட்சிப் பயணம் தொடரும்)