கஞ்சா பழக்கம் எவ்வ ளவு மோசமான விபரீதங்களை உருவாக்கும் என்பதற்கு இந்த சம்பவமே சான்று.
திருவண்ணாமலை அரு கிலுள்ள அரசுடையாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ரஜினி - காவேரி ஆகியோரின் மகள் சரண்யா. அங்குள்ள ஒரு கவரிங் நகைக்கடையில் வேலை செய்துவந்தார். அதே ஊரைச் சேர்ந்தவர் கோபி. ஆட்டோ ஓட்டுநரான கோபிக்கு திருமண மாகிவிட்டது. அவர் மனைவி விட்டுப் போய்விட்டார். இதை மறைத்து சரண்யாவை காதலித்து 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஒரு மகளும், இரண்டு மகன்களும் உள்ளனர்.
விவசாய கூலிவேலை செய்யும் தன் அம்மா காவேரியிடம் தினமும் செல்போன் மூலமாக சரண்யா பேசிவார். அதேபோல் கடந்த தீபாவளிக்கு முன்தினம், மகளின் போனுக்குக் காத்திருந் தார் அவர் அம்மா. ஆனாலும் மகள் லைனில் வரவில்லை. மகள் ஏதாவது வேலையாக இருப்பார் என அவரும் விட்டுவிட்டார். அடுத்தடுத்த நாட்களிலும் அம்மா போன் செய்தும் சரண்யா எடுக்கவில்லையாம்.
அதேபோல் சரண்யா வீட்டில், தீபாவளி முடிந்து பிள்ளைகள் பள்ளிக்கு போய்வருவதும், மாலை திரும்பி வந்து வீட்டிலேயே அடங்கிக் கிடப்பதுமாக இருக்க, இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர், பிள்ளைகளிடம் "உங்க அம்மா எங்கே?' என விசாரித்துள்ளனர். அதற்கு அவர்கள், "எங்கம்மா யார் கூடவோ ஓடிப்போய்டுச்சின்னு அப்பா சொன்னாரு. அம்மா கிடைக்கணும்னு எங்களைக் கோவிலுக்குக்கூட அப்பா அழைச்சிக்கிட்டு போனாரு'' என்று பரிதாபமாகச் சொன்னார்கள்.
இதில் அவர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி சரண்யாவின் அம்மா காவேரிக்கு அவர்கள் தகவல் கொடுத்துள்ளனர். இதில் அதிர்ந்துபோன சரண்யாவின் அம்மா, பதறி யடித்து ஓடிவந்தார். அக்கம் பக்கத்திலும் நெருங்கிய உற வினர்கள் வீடுகளி லும் மகளைப் பற்றி விசாரித்தார். சரி யான தகவல் கிடைக் காததால், அவருக்கு தன் மருமகன் மீது சந்தேகம் வந்திருக்கிறது.
காரணம், அந்த கோபி, கஞ்சாவுக்கு அடிமையானவ ராம். மேலும் வெளிப்பெண்களின் சகவாசமும் அவருக்கு உண்டாம். இதனால் சரண்யாவிடம் சண்டை போடுவது, கண்மூடித்தனமாக அவரை அடிப்பது என்று இருந்திருக்கிறான். அதனால் திருவண்ணாமலை நகர காவல் நிலையத்துக்குச் சென்று தன் மகள் சரண்யாவைக் காணவில்லை என்று கண்ணீரோடு புகார் கொடுத்தார் காவேரி.
புகாரில் மருமகன் கோபி மீது சந்தேகம் இருப்பதாகவும் கூறியுள்ளார். புகாரை வாங்கிய காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கி னர். கடைசியில் காணாமல் போன சரண்யா வைத் துண்டு துண்டாகக் கண்டுபிடித்தனர்.
இது குறித்து சரண்யாவின் அம்மா காவேரி யிடம் நாம் விசாரித்த போது, "தீபாவளிக்கு முன்னாடி வீட்டுக்கு வந்த என் மகள் சரண்யா, பட்டாசு எடுத்துக்கிட்டு அவ வீட்டுக்குப் போனாள். தீபாவளி முடிஞ்சி வர்றேன்னும் சொல்லியிருந்தாள். ஆனால் தீபாவளி முடிஞ்சும் வரல. அதுக்கு பிறகு போன் செய்தேன், எடுக்கல. பிறகுதான் சந்தேகமாகி போலீசில் புகார் கொடுத்தேன். அவர்கள் விசாரணை நடத்தி விட்டு, என் மகளை சடலமா மீட்டிருக்காங்க. அதிலும் துண்டு துண்டா பிளாஸ்டிக் கவர்ல இருந்த என் மகளின் உடலை மீட்டிருக்காங்க. இந்தக் கொடுமையை எங்கபோய்ச் சொல்றது? எங்க சரண்யாவை அந்த படுபாவி இப்படியா பண்ணுவான்?''’என்று அழத் தொடங்கினார்.
ஏரியாவாசிகளோ, "மனைவி காணாமல் போன எந்த சுவடும் இல்லாமல் கோபி இருந்து வந்தான். கோபியை அழைத்துவந்து போலீஸ் விசாரித்தபோது, முன்னுக்குப் பின் முரணாக பதில் தந்திருக்கான். இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் தங்கள் பாணியில் அவனை விசாரித்தபோது, எனக்கு தெரியாமல் என் மனைவி நிறைய கடன் வாங்கியிருந்தாள், அதுபற்றிக் கேட்டால் அவள் சரியாக பதில் சொல்லவில்லை. எனக்கு அவள் நடத்தையில் சந்தேகம் வந்தது. இதனால் எனக்கும் அவளுக்கும் அடிக்கடி தகராறு வந்தது. தீபாவளியன்று சண்டை வந்து அவளை அடித்தபோது, இறந்துவிட்டாள். எங்கே மாட்டிக்கொள்வோமோ எனப் பயந்து, இளநீர் வெட்டும் கத்தியால் அவளை 8 துண்டுகளாக வெட்டி, பிளாஸ்டிக் கவர்களில் போட்டு பேக் செய்து ஒரு ட்ராவல் ட்ராலி சூட்கேசில் வைத்துக்கொண்டேன். இதற்கு எனது அம்மா சிவகாமி உதவி செய்தார். எனது அம்மா மற்றும் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு திருச்செந்தூர் செல்வதாக கூறி என் நண்பரான கார் ஓட்டுநர் விமலை அழைத்துக்கொண்டு அவனது காரில் பெங்களூருக்கு புறப்பட் டேன். கார் டிக்கியில் அந்தப் பெட்டியை ஏற்றினேன். கிருஷ்ணகிரியில் என் அம்மாவுடன் பிள்ளைகளை ஒரு ஓட்டலில் சாப்பிட உட்கார வைத்துவிட்டு காரில் நானும் என் நண்பனும் சென்று கிருஷ்ணகிரி சூளகிரி காட்டில், என் மனைவியின் உடல் இருந்த சூட்கேஸை வீசிவிட்டு திரும்பி விட்டோம்னு சொல்லியிருக்கான். அதன்படி தான் சரண்யாவின் உடலை மீட்டிருக் கிறார்கள். இப்படியொரு நிலைமை யாருக்கும் வரக்கூடாது''’என்றார்கள் வருத்தமாய்.
கோபியின் நண் பர்கள் தரப்போ, "கோபி பார்க்க அமைதியாக இருப்பான். அவனும் அவனது சகோதரர்களும் கஞ்சா அடிமைகள். போதையில் வருபவர், போவோரிடம் அவர்கள் அடிக்கடி சண்டை போடுவார்கள். தன் மனைவி மீது குற்றம் சாட்டிய கோபி ஒன்றும் யோக்கியன் கிடையாது, இவனுக்கு பல பெண் களுடன் தொடர்பு இருந்தது. இதனால்தான் அவர்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டை வரும். மகன் செய்யும் தவறுகளுக்கு கோபி யின் அம்மா பயங்கர சப்போர்ட்டாக இருந்திருக்கிறார். இப்போது வசமாக மாட்டிக்கொண்டார்கள்''’என்றார்கள் கவலையாய்.
கோபியின் கஞ்சா வெறி, அவனை மிருகமாக்கியதன் விளைவுதான் சரண்யாவின் கொடூரமான கொலை. இந்தப் படுகொலை கோயில் நகரமான திருவண்ணாமலையை பகீரில் ஆழ்த்தியிருக்கிறது.