மிழகத்தில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை வஸ்துகளுக்கு அடுத் தப்படியாக காவல் துறைக்கு சவாலாக இருப்பது கட்டப் பஞ்சாயத்து, ரவுடி யிசம், விபச்சாரம், மசாஜ் சென்டர், சட்ட விரோதமான சூதாட்ட கிளப்புகள்தான். பல நேரங்களில் சூதாட்ட கிளப்புகளில் இருந்து, காவல்துறைக்கும் மாமூல் வருவதால் கண்டும் காணாமல் போய்விடுவது வழக்கம்.

திருச்சி நவல்பட்டு பெரிய சூரியூர் காட்டுப் பகுதியில் ஆள் நட மாட்டமில்லாத இடத்தில் திருவளர்ச்சிபட்டியைச் சேர்ந்த ஆர்.எஸ்.ஆர்.ரமேஷ் என்பவர் சட்ட விரோதமாக சூதாட்ட கிளப்பை நடத்தி வந்துள்ளார்.

dd

இதுபோன்று சட்டவிரோதமாகச் செயல்படும் கிளப்பு களுக்குச் சென்று அதன் உரிமையாளரை மிரட்டி பணம் பறிப்பதற்கு என்று ஒரு கும்பல் உள்ளது. திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் வசித்து வரும் பப்லு தலைமை யிலான அந்த ரவுடி கும்பல் கரூர், புதுக்கோட்டை, நாமக்கல், தஞ்சாவூர், கும்பகோணம் போன்ற பகுதிகளில் சட்டவிரோத மாக கிளப் நடத்து பவர்களை மிரட்டிப் பணம் பறிப்பதே தொழி லாக இருக்கின்றனர். அடியாட்கள், வெடிகுண்டு, துப்பாக்கியுடன் சென்று மாமூல் வசூலிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கும் இவர்களுக்கு கஞ்சா வியாபாரிகள், சூதாட்ட கிளப் நடத்துபவர்கள்தான் டார்கெட். சூதாட்ட கிளப்புகளில் பணக்காரர்கள் அதிகம் ஆடுவதால் இவர்களுடைய மிரட்டலுக்குப் பயந்தே மாமூல் தொகையைக் கொடுத்துள்ளார்கள் கிளப் உரிமையாளர்கள்.

கடந்த 2-ஆம் தேதி இரவு ஒரு தோப்பில் வெட்டுச் சீட்டாட்டம் நடந்துள்ளது. இந்த கும்பல் பப்லு தலைமையில் 10-க்கும் மேற்பட்ட ஆட்களுடன் வந்து ரமேஷைத் தேடியிருக்கின்றனர். இதை எப்படியோ தெரிந்துகொண்ட ரமேஷ் அங்கிருந்து தப்பி சூரியூரில் உள்ள தி.மு.க. பிரமுகர் ஒருவரின் வீட்டில் தஞ்சமடைந்துள்ளார்.

Advertisment

rr

ரமேஷை மிரட்டச் சென்ற பப்லு குரூப்பை அச்சமயத்தில் அங்கிருந்த ரமேஷ் குரூப்பைச் சேர்ந்த காந்தி மார்க்கெட் தக்காளி வியாபாரியான தீன் மற்றும் சிலர் அங்கிருந்து துரத்தியுள்ளனர். பப்லு தரப்பினர் பதிலுக்கு நாட்டு வெடிகுண்டு களை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் எதிராளிகளை மிரட்டியிருக்கின்றனர்.

அதேசமயம் பெரிய சூரியூர் இளைஞர்கள் அப்பகுதிக்கு விரைந்துவர, இதைக் கண்ட பப்லு தரப்பினர் அவர்களையும் கைத்துப்பாக்கியைக் காட்டி மிரட்டியுள்ளனர். இந்த மோதல் சம்பவம் அறிந்து, அந்த இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து கலவரத்தை அடக்கினர்.

இரு தரப்பினரும் மோதிக்கொண்டதில் ரமேஷ் தரப்பில் தீன் வெட்டுப்பட்டு பலத்த காயங்களுடன் ஒலிம்பியா தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். பப்லு குரூப்பில், பொதுமக்கள் அடித்ததில் உறையூரைச் சேர்ந்த அரவிந்தன் காயமடைந்துள்ளார். போலீசார் தலையிட்டு, விமல், ராஜி, கலைவாணன் ஆகியோரை கைதுசெய்துள்ளனர். மேலும் சிலரைத் தேடிவருகின்றனர்.

சட்டவிரோதமாக சூதாட்ட கிளப் நடத்திவரும் ரமேஷ், ஏற்கனவே பல இடங்களில் இதுபோன்ற கிளப் நடத்தி அதில் பல லட்சங்களை சம்பாதித்து வருவதோடு, கைனாங்கரை, பாரதிதாசன் பல்கலைக்கழக எதிர்ப்புறம், தஞ்சாவூர், கும்பகோணம் பகுதிகளில் ரூம் போட்டும், தோப்பிலும் சூதாட்ட கிளப்பை நடத்தி வந்துள்ளார். அடிக்கடி இடங்களை மாற்றியும் லோக்கல் காவல்துறையினரைக் கவனித்தும் நல்ல ஆதாயம் பார்த்துவந்துள்ளார்.

rr

Advertisment

கிளப் சம்பந்தமாக வரும் பிரச்சினைகளை, தன்னிடமுள்ள ஆட்களை வைத்து அதனைச் சரிசெய்து வந்த நிலையில், இந்த முறை பப்லு தரப்புடனான மோதல் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தியதால், அவர் தி.மு.க. பிரமுகரிடம் சரணடைந்துள்ளார்.

ஆர்.எஸ்.ஆர்.ரமேஷிடம் பலமுறை மாமூல் கேட்டும் கொடுக்காததால், அவரை போட்டுத் தள்ள பப்லு கும்பல் கிளம்பிவந்திருக்கிறது. வந்த இடத்தில் ரமேஷ் இல்லாததால் அங்கிருந்த கும்பலுக்கும் இவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வெடிகுண்டு வீசி கலவரமாகியுள்ளது.

பப்லு பின்னணியில் ஒரு சாதியத் தலைவரின் ஆதரவு இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே போலீசார் பெரிதாக எந்த நடவடிக் கையும் எடுக்காமல் கண்டும் காணாமல் இருந்துவருகின்றனர். அரசு இதில் தலையிட்டு ரவுடியிசத்தையும், கட்டப் பஞ்சாயத்தையும் சட்ட விரோத கிளப்புகளையும் ஒழித்தால்தான் தமிழகம் அமைதியாக இருக்கும்.