கடந்த ஜூன் 18-ஆம் தேதி திருச்சி பிஷப் ஹீபர் பள்ளி அரங்கில் நியூஸ் 18 செய்தி நிறுவனம் நடத் திய மக்கள் மேடை நிகழ்ச்சியில், "இன்றைய தமிழ்நாடு பெரியாரின் மண்ணா? அல்லது ஆன்மீக மண்ணா?' என்ற தலைப்பின்கீழ் பட்டிமன்றம் நடைபெற்றது.
இதில் பெரியார் மண்தான் என்ற தலைப்பின்கீழ் திராவிட கழகத்தைச் சேர்ந்த அருள் மொழி, பாதிரியார் ஜெகத்கஸ்பர், அரசு கொறடா கோவை செழி யன் உள்ளிட்டோர் கலந்துகொண் டனர். ஆன்மீக மண்தான் என்ற தலைப்பின்கீழ் பேச தாம்ப்ராஸ் நாராயணன், சி.பி.இராதாகிருஷ் ணன், நகைச்சுவைப் பேச்சாளர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் ஆன்மீக மண்தான் என்ற தலைப்பில் முத லில் பேசிய தாம்ப்ராஸ் நாரா யணன் பேசிவிட்டு அமர்ந்தபின், பெரியார் மண்தான் என்ற தலைப் பில் பேசத் தொடங்கிய பேச் சாளர் அருள்மொழி தன்னுடைய பேச்சை துவங்குவதற்கு முன்பு முதல் வரிசையில் அமர்ந்திருந்த திருச்சி எம்.பி. சிவாவின் மகனும், சமீபத்தில் பா.ஜ.க.வில் தன்னை இணைத்துக்கொண்டு தமிழக ஓ.பி.சி. அணியின் மாநிலச் செய லாளராக பதவி வகித்துவரும் சூர்யா உள்ளிட்ட பா.ஜ.க.வினர், ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் அவரைப் பேசவிடாமல் கூச்ச லிட்டு நிகழ்ச்சிக்கு தொடர்ந்து இடையூறு செய்தனர்.
அருள்மொழி, ஜெகத்கஸ் பர் இருவரும் பெரியார் மண் தான் என்ற தலைப்பில் பேசும் போதெல்லாம் தொடர்ந்து அரங் கிற்குள் குழப்பங்களை ஏற்படுத்த, முடிவில் அது இருதரப்பினரிடை யே மோதலுக்கு வழிவகுத்தது. இதில் நியூஸ் 18 செய்தி நிறுவனத் தின் செய்தியாளரான விஜய கோபால் ஆர்.எஸ்.எஸ். அமைப் பின் பின்னணியில் உள்ளவர் என்பதால் திருச்சியிலுள்ள ஆர். எஸ்.எஸ். அமைப்பினரை கூட்டத் திற்கு வரவழைத்து கூச்சல் குழப் பங்கள் ஏற்படுத்த காரணமாக அமைந்ததாகக் கூறப்படுகிறது.
அரங்கிற்குள் நடைபெற்ற இந்த கூச்சல் குழப்பங்களையும் மோதல்களையும் காவல்துறை இறுதிவரை கண்டுகொள்ளாமல் அமைதிகாத்து பின்னர் இறுதி யாக இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி சமா தானம் செய்துவைத்தனர். இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து கூச்சல் குழப்பங்களை ஏற்படுத்தியவர் களை காவல்துறை வெளியேற்றாமல் வேடிக்கை பார்த்துக்கொண் டிருந்தது. இப்படிப்பட்ட பிரச் சனை ஏற்படும் என்பது முன்கூட்டியே தெரிந்திருந்தும் காவல்துறைக்கு, முன்கூட்டியே எந்தவித தகவலும் தெரிவிக்காமல் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்.க்கு ஆதர வாக உளவுத்துறை செயல்பட்ட தாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நடப்பது யார் ஆட்சி என்றும் கேட்கிறார்கள்.
இதுகுறித்து திருச்சி மாநகர காவல்துறை ஆணையரை இரு முறை தொடர்பு கொண்ட போதும் அவர் பதிலளிக்க வில்லை. மாநகர நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையரைத் தொடர்பு கொண்டபோது, "இந்த நிகழ்ச்சிக்கு 3 காவல் ஆய் வாளர்கள், டி.எஸ்.பி., துணை ஆணையர் அன்பு தலைமையில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அரங்கிற்குள் நடைபெற்ற பிரச்சினையில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானப் படுத்தி வெளியே கொண்டு வந்தது காவல்துறைதான்''’என்று கூறினார்.