பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஜி-20 மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு விட்டு முதல்வர் ஸ்டாலினும், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும் சென்னை திரும்பி விட்டனர். இந்த பயணம், எடப்பாடி பழனிச்சாமிக்கு உற்சாகத்தைத் தந்துள்ளது என்கிறார்கள் அ.தி.மு.க.வின் மூத்த தலைவர்கள்.

ஜி-20 மாநாட்டினை ஒரு நாடு தலைமை யேற்று நடத்துவது அந்த நாட்டின் பெருமையை உலகிற்கு உணர்த்தும் வாய்ப்பாகப் பார்க்கப்படு கிறது. அந்த வகையில் அடுத்த வருடம் செப்டம்பர் மாதம் இந்தியாவில் நடக்கும் இந்த மாநாட்டிற்கு தலைமையேற்கிறது இந்தியா. பிரதமர் மோடியின் தனிப்பட்ட திறமையால் இந்த வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்திருப்பதாக பா.ஜ.க. பீற்றிக்கொண்டாலும், சுழற்சி அடிப்படையில் இயல்பாகவே இந்தியாவுக்கு கிடைத்தது; இதில் மோடியின் ரோல் எதுவும் இல்லை என்கின்றன காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்.

மாநில முதல்வர்கள், எதிர்க்கட்சித் தலைவர் கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஆகியோரிடம் மாநாடு குறித்து ஆலோசிப்பதற்கான கூட்டத்தை கடந்த 5-ந்தேதி டெல்லியில் கூட்டியிருந்தார் மோடி. இதில் கலந்துகொள்ள அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கடிதம் எழுதியிருந்தார்.

மாநாட்டில் கலந்துகொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் விரும்பவில்லை. அதனை டெல்லிக் கும் தெரிவித்தனர். ஆனால், ஸ்டாலின் அவசியம் கலந்துகொள்ள வேண்டும் என்பதை டி.ஆர்.பாலு மூலமாக அழுத்தம் கொடுத்தார் அமைச்சர் ஜோஷி. இதனை ஸ்டாலினின் கவனத்துக்கு டி.ஆர்.பாலு எடுத்துச்செல்ல, வேறுவழியின்றி சம்மதம் தெரிவித்து ப்ளைட் ஏறினார் ஸ்டாலின்.

Advertisment

அதேபோல, தமிழகத்தின் எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வில் அதிகாரப் போட்டி நடப்பதால் யாரை அழைப்பது என்கிற விவாதம் நடந்தது. எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிச்சாமி இருப்பதால், ப்ரோட்டகால்படி அவருக்கு மட்டும் கடிதம் அனுப்ப உத்தரவிட்டார் அமைச்சர் ஜோஷி.

இதனை டெல்லியிலுள்ள தனது லாபியஸ்டு கள் மூலம் தெரிந்துகொண்ட எடப்பாடி பழனிச் சாமி, மத்திய அரசு தனக்கு அனுப்பும் கடிதத்தில், தனது பெயருக்கு அருகில், அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டால் அரசியல் ரீதியாக அது தமக்கு உதவும் என யோசித்து, தனது லாபியஸ்டுகளிடம் தெரிவித்திருக்கிறார். அதன்படி அவர்கள் எடுத்த முயற்சியில், அப்படியே கடிதம் எழுதப்பட்டது.

டெல்லிக்கு செல்வதற்கு முதல்நாள் அந்த கடிதத்தை எடப்பாடி தரப்பே ரிலீஸ் செய்தது. அதில் இடைக்கால பொதுச்செயலாளர் என்று ஒன்றிய அரசு குறிப்பிட்டிருந்ததால், அ.தி.மு.க.வின் இரட்டைத் தலைமை விவகாரத்தில் எடப்பாடி யைத்தான் மோடியும் அமித்ஷாவும் ஆதரிக்கிறார் கள் என்றும், ஓ.பி.எஸ்.ஸை பா.ஜ.க. உதறுகிறது என்றும் பரபரப்பாகப் பேசப்பட்டது. எடப்பாடி எதிர்பார்த்ததும் இதைத்தான் என்பதால், அந்த பரபரப்பு அவருக்கு உற்சாகத்தைத் தந்தது.

Advertisment

இதனை கட்சியின் சீனியர்களிடம் பகிர்ந்து கொண்டதுடன், டிசம்பர் 5-ந் தேதி ஜெயலலிதா வின் நினைவு நாளில் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு உற்சாகமாக டெல்லிக்கு ப்ளைட் பிடித்தார் எடப்பாடி பழனிச்சாமி.

டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் மு.க.ஸ்டாலினும், ஹோட்டல் அசோகாவில் எடப்பாடி பழனிச்சாமியும் தங்கினர். டெல்லிக்கு ஸ்டாலின் வரும்போதெல்லாம் ஏர்போர்ட்டில் தி.மு.க. எம்.பி.க்கள் அனைவரும் புடைசூழ வரவேற்பளித்து தூள் பரத்துவார்கள்.

ஆனால், இந்தமுறை அவர் டெல்லியில் இறங்கியபோது எம்.பி.க்கள் வரவேற்பு அளித்தாலும் தயாநிதிமாறன், கதிர் ஆனந்த், எஸ்.ஆர்.பார்த்திபன், செந்தில்குமார், ராஜேஷ் குமார் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டவர்கள் ஏர்போர்ட்டுக்கு வரவில்லை. வராததற்கு ஆளாளுக்கு ஒரு காரணத்தை கட்சித் தலைமைக்கு தெரிவித்திருக்கிறார்கள்.

gg

பிரதமர் மோடி தலைமையில் ஜனாதிபதி மாளிகையில் மாலை 4 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. கூட்டத்திற்கு அழைக்கப்பட்டவர்கள் மட்டும்தான் கலந்து கொள்ள அனுமதி. அவர்களுடன் வேறு யாருக்கும் அனுமதியில்லை என ஸ்ட்ரிக்டாக இருந்தது நாடாளுமன்ற விவகாரத்துறை. அதற்கேற்பத்தான் சீட் அரேஜ்மெண்டும் இருந்தன.

ஆனால், கூட்டத்தில் தன்னுடன் டி.ஆர்.பாலு இருக்க வேண்டும் என விரும்பிய மு.க.ஸ்டாலின், அதுகுறித்து வலியுறுத்த, நாடாளு மன்ற விவகாரத்துறையோ அதனை ஏற்க மறுத்தது. இறுதியில் இந்த பிரச்சனை மோடி வரை செல்ல, அவர் தலையிட்டதன் அடிப்படையில் டி.ஆர். பாலுவுக்கு சிறப்பு பாஸ் வழங்கப்பட்டு கடைசி நேரத்தில் அனுமதிக்கப்பட்டது. ஸ்டாலினுக்கு அருகே டி.ஆர்.பாலுவுக்கு சீட் போடப்பட்டதும் அதில் உட்கார்ந்தார் டி.ஆர்.பாலு.

அதேபோல, தன்னுடன் அ.தி.மு.க. தம்பிதுரை அல்லது சி.வி.சண்முகம் இருவரில் ஒருவரை அழைத்துச் செல்ல எடப்பாடி கடுமையாக முயற்சிக்க, அனுமதி கிடைக்கவில்லை. ஆலோசனைக் கூட்டத்தில், ’ஜி-20 மாநாட்டினை இந்தியா தலைமையேற்று நடத்தக் கிடைத்த வாய்ப்பு நமக்கெல்லாம் பெருமை’ என்கிற ரீதியில் உரையாற்றி, மோடியையும் சற்று புகழ்ந்தார் மு.க.ஸ்டாலின். இதே தொனியில் எடப்பாடியின் பேச்சும் இருந்தது. கூட்டம் முடிந்ததும் டீ-பார்ட்டி நடக்க, கலந்துகொண்ட முதலமைச்சர் கள், அரசியல் தலைவர்களை கௌரவிக்கும் வகையில் ஒவ்வொருவரையும் தேடித் தேடிச் சென்று, தனது மகிழ்ச்சியையும் நன்றியையும் பகிர்ந்துகொண்டார் மோடி. மு.க.ஸ்டாலினும் மோடியும் 5 நிமிடம் பேசிக்கொண்டனர். அந்த சந்திப்பில் பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்ட தைக் கடந்து,”"உங்களின் பேச்சு சிறப்பாக இருந் தது. சில பாயிண்டுகளை குறித்துக்கொண்டேன்'' என்று மோடி சொல்ல, ஸ்டாலின் முகத்தில் புன்னகை. எடப்பாடியிடம் பேசிய மோடி, "சென்னைக்கு நாளைக்கு போகலாம். இரவு டெல்லியில் தங்குங்கள்''’என்று சொல்லியிருக்கிறார். டீ-பார்ட்டி முடிந்ததும் சென்னைக்கு புறப்பட்டு விட்டார் ஸ்டாலின்.

மோடியின் உத்தரவில், 5-ந் தேதி இரவு டெல்லியில் தங்கியிருந்த எடப்பாடியை உள்துறை யைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள் சந்தித்துவிட் டுச் சென்றனர். அதேசமயம், எடப்பாடிக்கும் ஒன்றிய அரசுக்குமிடையே இயங்கும் லாபியஸ்டு களும் அவரைச் சந்தித்து விவாதித்தனர். இதற் கிடையே, ஏற்கனவே டெல்லியில் முகாமிட்டிருந்த பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையும், எடப் பாடியும் நள்ளிரவில் நீண்டநேரம் போனில் விவாதித்திருக்கிறார்கள்.

அசோகா ஹோட்டல் சந்திப்புகளைப் பற்றி விசாரித்தபோது, ’"அ.தி.மு.க.வில் உங்களுக்குள்ள இருப்பினை நாங்கள் உணர்ந்திருந்தாலும் ஓ.பி.எஸ். உள்ளிட்ட பா.ஜ.க. விசுவாசிகளையும் விட்டுவிட முடியாது. அதனால், பிரிந்தவர்களை ஒன்று சேர்ப்பதில் நீங்கள் பிடிவாதம் காட்டக்கூடாது' என எடப்பாடிக்கு உள்துறை அதிகாரிகள் அட் வைஸ் செய்துள்ளனர். அதற்கு, "பிரிந்தவர்களைச் சேர்ப்பதால் எந்த பலனும் இல்லை. அவர்களால் எந்த விசயத்தில் லாபம் என மோடிஜியும் அமித்சா ஜியும் நினைக்கிறார்களோ அதனை எங்களால் தர முடியும்' என சொல்லியிருக்கிறார் எடப்பாடி. இதேரீதியில் ஆலோசனை நடக்க... "நீதிமன்றத்தி லுள்ள வழக்கில் ஒரு முடிவு தெரியட்டும்... மீண்டும் விவாதிக்கலாம் எனச் சொல்லிவிட்டுச் சென்றனர் அந்த அதிகாரிகள்'’என்கிறது டெல்லி சோர்ஸ். அசோகா ஹோட்டலில் நடந்தவைகளை அசை போட்டவாறு 6-ந் தேதி மதியம் சென்னைக்கு கிளம்பினார் எடப்பாடி பழனிச்சாமி.