யலாத முதியவர்கள், வறுமைக் கோட்டிற்கும் கீழே உள்ளவர்கள், முடி யாதவர்கள் என பலதரப்பட்ட மக்களின் நலன் பொருட்டு கேரள முதல்வரான பினராயி விஜயன் ஏப்ரல் முதல் புதிய திட்டமொன்றை நடைமுறைப்படுத்தியுள் ளார். "நான் உங்களுடன் இருக்கிறேன்' என்ற இத்திட்டம் கேரள மக்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

ff

ஒருவேளை உணவுகூட முழுமையாகக் கிடைக்காமல் பசியில் உழல்பவர்கள், தேவையைக் கேட்பதற்குக்கூட சக்தியற்று மூலையில் முடங்கிப் போன முதியவர்கள், பிள்ளைகளால் புறக்கணிக்கப் பட்டு வயோதிகத்தால் வீட்டுத் திண்ணையில் கிடத்தப்பட்டவர்கள், ஆதாருக்கும் ரேசன் அட்டைக்கும் அலைந்து ஓய்ந்துபோனவர்கள் என்று மாநிலத்தின் மூலைமுடுக்குகளில் முனங்குபவர்களின் குரல் முதல்வர் பினராய் விஜயன் வரை போயிருக்கிறது.

Advertisment

அதிகாரிகள், அமைச்சர்களுடன் கலந் தாலோசித்து அவர்களுக்காக புனர்ஜென்ம திட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறார். இத்தகைய நபர்களின் விவரங்களையும் துல்லியமாகக் கணக் கிடுவதற்காக மாநிலத்தி லுள்ள அனைத்து வீடு களிலும் ஏறி இறங்கி யிருக்கிறார்கள் அதிகாரி கள். உள்ளாட்சிப் பிரதிநிதிகளுடன் அந்தந்த பகுதியின் அங்கன்வாடிப் பணியாளர்களும் இணைந்து அனைத்து வார்டுகளிலும் உள்ள நபர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.

ff

Advertisment

இந்தக் கணக்கெடுப்பில் ஒரு வீட்டில், குடும்பத்தில் இயலாத முதியவர்கள், பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டவர்கள், நடக்க இயலாதவர்கள், மாற்றுத்திறனாளிகள், வருமானமில்லாதவர், கண் பார்வை அற்றோர், அன்றாட உணவு கிடைக்காமல் தவிப்பவர்கள், முதியவர்கள், ரேசன், ஆதார் அட்டை இல்லாதோர், வீட்டிற்கு மின்வசதி கிடைக்காமல் தவிப்போர், விபத்தில் சிக்கி முடங் கியவர்கள், தனக்கான ரேசன் பொருட்களைக்கூட வாங்குவதற்கு ரேசன் கடைக்குச் செல்லமுடியாத சீனியர் சிட்டிசன்கள் என்று அவர்களின் பெயர்கள், மொபைல் எண்கள் என அனைத்தும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

கணக்கெடுப்பிற்குப் பின் ஆதார், ரேசன் கார்டு இல்லாதவர்களுக்கு அவை கிடைக்க ஏற்பாடு செய்ததுடன் மின் இணைப்பு கிடைக்காதவர் களுக்கு உடனடியான மின் இணைப்பும் தரப்பட்டிருக்கிறது. கேரள மாநிலம் முழுக்க சுமார் 5000 பேர் போதிய உணவு கிடைக்காமல் தவிப் பவர்கள் என்றும், அதற்காக படி இறங்கமுடியாத வயதான ஆண், பெண்கள் என்பதுமான விவரம் தெரியவந்திருக்கிறது.

இத்தகைய முதியவர்களின் முகவரிகள், அவர்களின் வீடுகளிருக்கும் ஏரியா போன்ற விவரங்கள் அந்தந்த வார்டுகளின் கவுன்சிலர்களிடம் தரப்பட் டுள்ளது. அந்தப் பட்டியலுடன் ஏற்கனவே அரசு அமைத்துள்ள அந்தந்த பகுதியின் மலிவு விலை உணவகத்தின் ஊழியர்களிடம் தொடர்புடைய வார்டு கவுன்சிலர்கள் தங்களுக்குத் தரப்பட்ட பட்டியலைக் கொடுத்து விடுவார்கள். உணவகப் பணியாளர்கள் அந்தப் பட்டியலின்படி குறிப்பிடப் பட்டிருக்கும் முதியவர்களின் வீடு தேடிச்சென்று காலை, மதியம், இரவு என அன்றாடம் மூன்று வேளைகளிலும் உணவுகளை இலவசமாகவே வழங்கிவிடுவர். இந்த பணிக்காக உணவக ஊழியர்களுக்கு தினசரி 500 ஊதியமாக அரசால் வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட அனைவருக்கும் உணவு தாமதமின்றி சென்றடைகிறதா என கண்காணிக்கும் பொறுப்பு அந்தந்த வார்டு கவுன்சிலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுவருகிறது.

fadf

இது ஒரு பக்கமெனில், இன்னொரு பக்கம் வீடு தேடிவரும் ரேசன் பொருட்கள் திட்டம். ஒரு ரேசன் கடைக்குச் சென்று கால்கடுக்க வரிசையில் நின்று தங்களுக்கான ரேசன் பொருட்களை வாங்க முடியாமல் தவிக்கும் முதியவர்கள், முடங்கியவர் கள் என்று விரல்விட்டு எண்ணக் கூடியவர்கள் தானிருப்பர். குறிப்பாக, ஒவ்வொரு ரேசன் கடை களின் அருகில் ஆட்டோ ஸ்டாண்ட் இருப்பது வழக்கம். அதில் ஏ.ஐ.டி.யு.சி, சி.ஐ.டி.யு., ஐ.என். டி.யு.சி., முஸ்லிம் அமைப்பு உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் யூனியன்களைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர்களிருப் பார்கள். அவர்களிடம் அந்த ரேசன் கடைப் பகுதியின் வாங்கமுடியா தவர்கள் முகவரிப் பட்டி யலும் அவர்களுக்கான ரேசன் பொருட் களும் தரப்படும். அதனை ஆட்டோ டிரைவர்கள் டெலிவரி செய்துவிடுவார்கள். இந்த முறையில், இயலாதவர்கள் அனைவருக்கும் மாதத்தின் 10-ஆம் தேதிக்குள்ளாக ரேசன் பொருட்கள் சப்ளை செய்யப்பட்டு விடுகிறது. இதற்காக அரசுக்குப் பத்து பைசா செலவு கிடையாது என்கிறார்கள்.

இத்திட்டத்திற்காக முதல்வர் பினராய் பினராய் விஜயன் முன்னதாகவே மாநிலத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் தொழிற்சங்க பிரதிநிதிகள், யூனியன் தலைவர்கள், ஆட்டோ டிரைவர்களின் பிரதிநிதிகளடங்கிய கூட்டத்தைக் கூட்டியவர், இந்த இயலாதோர் ரேசன் திட்டம் பற்றியும், அதை டெலிவரி செய்கிற முறை பற்றியும் அவர்களிடம் விரிவாகக் கலந்தாய்வு செய்ய, அவர்களும் சமூகப் பணி என்ற வகையில் மனமுவந்து இதனை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

பிசிறின்றி நடந்துவருகிற இத்திட்டங்களுக்கு "ஒப்பம்'’என்று பெயரிட்டிருக்கிறார் பினராய் விஜயன். மலையாளத்தில் "ஒப்பம்’என்பதின் தமிழாக்கம், நான் உங்களுடன் இருக்கிறேன்' என்பதாகும். இதுகுறித்து கொல்லம் ஆட்டோ டிரைவர் சித்தார்த், "எங்களப் பொறுத்தவரை இத ஒரு வேலைன்னு நெனைக்கல. அத எங்க வீட்டுக் குச் செய்யற கடமையா நாங்க நெனைக்கிறோம். எங்க ஃபேமிலில ஒருத்தர்னு நெனைச்சு செய்யுறோம்''’என்றார்.

கேரள காம்ரேடின் திட்டத்தைப் போலவே தமிழ்நாட்டிலும் மக்கள் நலத் திட்டங்களைக் கொண்டு வரவேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு!

-பி.சிவன்