"ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு, உயர்கல்வி, ஊரக வளர்ச்சி உள்ளிட்ட 35 அரசுத் துறைகளில், என் கைவசம் 25 துறை இருக்கு.... உனக்கு எந்த துறையில் என்ன வேலை வேணும்னு எங்கிட்ட சொல்லு, நான் வாங்கித் தர்றேன். அவரைத் தெரியும், இவரைத் தெரியும்னு சொல்லமாட்டேன்... அத்தனை அமைச்சரும் நம்மகிட்டதான். ஏன் எடப்பாடி பழனிச்சாமியே என் பேச்சைத்தான் கேப்பாரு''ன்னு நம்புற மாதிரி பேசி கிட்டத்தட்ட நூறு இளைஞர்கள்ட்ட வேலை வாங்கித் தர்றதா சீட்டிங் செய்திருக்கிறார், கோவையை சேர்ந்த ஆத்மா சிவக்குமார் என்பவர்.

dd

பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான ஈரோடு புளியம்பட்டியை சேர்ந்த மாரிச்சாமியோ, "பத்தாவது வரைக்கும் படிச்ச என்கிட்ட நீலகிரி யைச் சேர்ந்த சுப்பிரமணிங்கிறவரு "எனக்கு தெரிந்த உறவுக்காரர் கோவையில் இருக்காரு. அவரு அத்தனை அமைச்சருக்கும் நெருக்கம். அமைச்சர் வேலுமணியோட அத்தனை விஷயங்களுக்கும் அவர்தான் பொறுப்பு. அவரைப் பார்த்தால் உனக்கு ஏதாவது அரசு வேலை கிடைக்கும்'னு உறுதியா சொன்னார். நானும் அவர் பேச்சை நம்பி கோவைக்குப் போய் நமது எம்.ஜி.ஆரில் நிருபராக வேலை பார்க்கிற ஆத்மா சிவகுமாரை சந்திச் சேன். அவரும் "அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் எனக்கு வேண்டியவர்தான். அவர்கிட்ட சொல்லி, உனக்கு வி.ஏ.ஓ. வேலை வாங்கித் தார்றேன். ஆனால் அதற்கு 10 லட்ச ரூபாய் செலவாகும்'னார். அவ ருடைய தோற்றமும், அவருடைய வீட்டுச் சுவரில் மாட்டியிருந்த அமைச்சர்களின் போட்டோக்களும் நம்பிக்கையை வரவழைக்க... நானும் 3 லட்ச ரூபாய் வரைக்கும் தவணை, தவணையாக கொடுக்க ஆரம் பிச்சேன். வருஷங்கள்தான் தாண்டிச்சே தவிர... வேலையும் கிடைக்கல, பணமும் வரல. விசாரிச்சதுல என்னைப் போல நூற்றுக்கணக்கானவங்கள இதே போல ஏமாத்துனது தெரிய வந்தது. அதனால மாவட்ட குற்றப் பிரிவில் புகார் செஞ்சேன்'' என்றார்.

கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரும் கடந்த வாரத்தில் சீட்டிங் மன்னன் ஆத்மா சிவக்குமாரை கைதுசெய்து சிறையிலடைத்தனர். மொத்தம் 68 புகார்களையும், அவற்றின் மதிப்பாக ரூ.2.17 கோடிகளையும் பதிவு செய்த மாவட்ட குற்றப்பிரிவு, இவருக்கு உறுதுணையாக செயல்பட் டார்கள் என மணிகண்டன், சத்யபாமா மற்றும் ஜெயகிருஷ்ணனை தேடிவருவது குறிப்பிடத்தக்கது.

Advertisment

cc

இதுகுறித்து பேசிய வழக்கறிஞர் சந்திர மோகனோ, "மாரிச்சாமி மட்டும் கிடையாது, படித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள்தான் இவனது குறி. ஐந்து விதமான மொழிகள் இவனுக்கு தெரியும். அனைவருக்கும் வேலை உண்டு, 25 அரசுத்துறைகளிலும் என்னிடம் ஆள் இருக்காங்க... எனக்கு பொன்னையன், வேலுமணி, ஆர்பி உதயகுமார், ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்.-னு அத்தனை பேரையும் தெரியும் என காட்டிக்கொள்வான்.

"8-வது படிச்சிருக்கியா..? உனக்கு தோட்ட வேலை இருக்கு' எனக்கூறி சாதாரண ஆளுங்கள கூட இவன் விடுறது கிடையாது. இவன்மேல் ஏற்கனவே தூத்துக் குடி தெர்மல் காவல் நிலையத் திலயும், நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவிலயும் சீட்டிங் வழக்குகள் இருக்கு. வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த பணத்தில், லூனா நகர்ல அபார்ட்மெண்ட்டும், ஜெய கிருஷ்ணன் பெயரில் கவுண்டம் பாளையத்தில் வீடும் வாங்கி யிருக்கின்றனர். எங்களைப் பொறுத்தவரை பல்வேறு மாவட்டத்தில் ஆத்மா சிவக் குமாருக்கு வழக்கு இருப்பதால் அவனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தும், மோசடி செய்த பணத்தில் சொத்துக்கள் வாங்கியிருப்பதால் அதனை முடக்கி வைக்க வேண்டும்'' என்கிறார்.

அமைச்சர் பெயர்களைக் கூறி சீட்டிங்கில் ஈடுபட்டார் என ஆத்மா சிவக்குமார் கைது செய்யப்பட்டது ஒருபுறமிருக்க, "கோவை மாவட்ட செய் தித்துறை அலு வலகத்திலேயே வேலை வாங்கித் தருகிறேன்' என சீட்டிங் செய்து சஸ் பெண்ட் ஆகியிருக்கின் றார் அம்மணி ஒருவர்.

cc

"என்னென்ன லோன் கிடைக்கிறது எனத் தெரிய ஒரு தடவை மாவட்ட ஆட்சியர் அலு வலகத்திற்கு போனப்ப, சாந்திங்கிற பெண்மணி யின் அறிமுகம் கிடைச் சது. அவங்கள வச்சு பி.ஆர்.ஓ. ஆபீஸ்ல வேலை பார்க்கும் சுபஹான்நிஷா பழக்கமும் கிடைச்சது. ஒரு தடவை பத்திரப்பதிவுத் துறையில் வேலை வாய்ப்பு என்ற செய்தித்துறைக் குறிப்பை என்கிட்ட காமிச்சி, "பொள்ளாச்சியில் உள்ள பத்திரப்பதிவு துறை அலுவலகத்தில் உனக்கு வேலை வாங்கித் தர்றேன்'னு சொல்லி, அதுக்காக 4 லட்ச ருபாய் செலவாகும்னு பணத்தையும் வாங்கிக்கிட்டார். கொஞ்சநாள் கழிச்சி "உதவியாளர் பணிக்கு தேர்வு செய்திருப்பதாக' எனக்கு போஸ்ட் கார்டு வர... நானும் பொள்ளாச்சி பத்திரப் பதிவு அலுவலகத்துக்குப் போய் கேட்டேன்.

"ஏம்பா... எத்தனை பேரு இந்த மாதிரி கார்டை தூக்கிட்டு வர்றீங்க..?' என கேட்ட பிறகு தான், நான் ஏமாற்றப்பட்டது தெரிஞ்சு, கலெக்டர் ஆபீஸில் புகார் கொடுத்திருக்கேன். குடுத்த பணம் எப்ப கிடைக்கும்னு தெரியல'' என்றார் கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த சுதர்சன். மாவட்ட ஆட்சியர் சமீரனுக்கு இவ்விவகாரம் தெரியவர... தன்னுடைய பி.ஏ. ஜி.கோமதி மற்றும் பி.ஆர்.ஓ. மூலம் விசாரணையை துவக்கி சம்பவம் உண்மையென கண்டறியப்பட்டுள்ள நிலையில்... சீட்டிங்கில் ஈடுபட்ட கணக்காளர் சுபஹான்நிஷா மீது காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

"இன்னும் ஏமாந்தவர்கள் எத்தனை பேர்? யார், யார் சிக்குவார்களோ.? அடுத்தடுத்து இது தொடர்பாக புகார்கள் மேலும் வரலாம்' என்கிறது கோவை மாவட்ட காவல்துறையின் குற்றப்பிரிவு.

படங்கள்: விவேக்