"தேசத்தைக் காப்போம் என கோஷமி டும் தேசியக்கட்சியான பா.ஜ.க.வில் மாவட்ட தலைவர் ஒருவர், அதே கட்சியின் மாநகர துணைத்தலைவர் ஒருவரிடம் பண மோசடி செய்து, வழக்கு பதிவாகி 5 மாதங்கள் கடந்த நிலையில், உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று, தற்போது கைதாகும் வரை யிலும், அந்த மாவட்ட தலைவரை பொறுப்பி லிருந்து நீக்க வில்லை என்றால், ‘எங்கள் கட்சியில் என்னதான் நடக்கிறது?''’என கேள்வி எழுப்புகிறார்கள், அந்த மாவட்ட பா.ஜ.க.வினர். என்ன விவகாரம் இது?

bjp

விருதுநகர் மேற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் சுரேஷ்குமாரும், விருதுநகர் மேற்கு மாவட்ட துணைச்செயலாளர் கலையரசனும், சிவகாசியை அடுத்துள்ள திருத்தங்கல்லைச் சேர்ந்தவர்கள். இவ்விருவரும் சிவகாசி மாநகர பா.ஜ.க. துணைத்தலைவர் பாண்டியனிடம், அவருடைய மகன்களான கார்த்திக் மற்றும் முருகதாஸ் ஆகியோருக்கு தூத்துக்குடி கப்பல் துறைமுகத்திலும், தென்னக ரயில்வேயிலும் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, கடந்த 2017லில் ரூ.11 லட்சம் பெற்றனர். கடந்த 5 வருடங்களாக வேலை வாங்கித் தராமல், பணத்தையும் திருப்பித் தராமல் இழுத்தடித்தனர்.

இந்நிலையில், பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணா மலையிடம் பாண்டியன் முறையிட, ரூ.2 லட்சம் வீதம் 5 காசோலை களும், ரூ.1 லட்சத்துக்கு ஒரு காசோலையும் பாண்டியனிடம் தந்தனர். அதில் ஒரு காசோலையைத் திரும்பப் பெற்றுக்கொண்டு ரூ.2 லட்சம் ரொக்கம் கொடுத்துள்ளனர். மற்ற காசோலைகள் வங்கியிலிருந்து திரும்பியதால், சுரேஷ்குமார் மற்றும் கலையரசன் மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையிடம் பாண்டியன் புகாரளித்திருந்தார். அந்தப் புகாரில் பா.ஜ.க. மாநில பொதுச் செய லாளர் ராமஸ்ரீனிவாசனின் பெயரும் இருந்தது.

இதுகுறித்து நாம் ராமஸ்ரீனிவாசனிடம் கேட்டபோது, "நான் ரயில்வேயில் எந்த பொறுப் பிலும் இல்லை. ரயில்வே அதிகாரிகள் எதற்காக என்னை சிவகாசி பெல் ஹோட்டலுக்கு வந்து பார்க்கவேண்டும்? அவர்களிடம் பாண்டியன் பணம் கொடுத்த விபரம் எனக்கு தெரியாது. என் மீதான பொய்யான குற்றச்சாட்டு இது''’என்று மறுத்தார்.

  vv

Advertisment

15-12-2022 அன்று கலையரசனை விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். சுரேஷ்குமாருக்கு ஜாமீன் அளித்த உச்ச நீதிமன்றம், ரூ.5,50,000 ரொக்க ஜாமீன் செலுத்துமாறு அறிவுறுத்தியது. ரொக்க ஜாமீன் செலுத்துவதற்கான காலக்கெடு மே 12-ஆம் தேதி முடிந்தும் அத்தொகை செலுத்தப்படவில்லை. இந்நிலையில், விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினரால் சுரேஷ்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

பா.ஜ.க.வில் யாரோ ஒரு முக்கிய தலைவர், ஏதோ ஒரு காரணத்துக்காக சுரேஷ் குமாருக்கு தொடர்ந்து ஆதரவாகச் செயல்படுகிறார் எனச் சந்தேகம் கிளப்பு கிறார்கள் விருதுநகர் மாவட்ட பா.ஜ.க.வினர்.