மத்துவத்தை வ-யுறுத்திய பெரியாரின் பெயரில் சேலத்தில் அமைந்துள்ள பல்கலைக்கழகம் தொடங் கப்பட்ட நாளில் இருந்தே அரசியல் மற்றும், சாதி ரீதியான சர்ச்சையில் தொடர்ந்து அடிபட்டு வருகிறது. இந்நிலையில்தான் 2014-ல் துணைவேந்தரான சுவாமிநாதன் 2017-ல் அவர் பணிநிறைவு பெற்றபோதே, அவரால் போடப்பட்ட முறைகேடான பணி நியமனங்கள் குறித்த சர்ச்சைகள் எழுந்தன. அப்போது தேர் வாணையராக இருந்த லீலா மீதும் இப்போது லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய பேராசிரியர்கள் சிலர்...

vv

"154 ஆசிரியர் பணியிடங்கள் சுவாமிநாதன் காலத்தில் நிரப்பப்பட் டன. உதவி பேராசிரியருக்கு 20 லட்சம், இணை பேராசிரியருக்கு 30 லட்சம், பேராசிரியர் பணியிடத்திற்கு 4.5 லட்சம் ரூபாய் என பட்டியல் போட்டு பணம் வசூலித்தனர். தகுதி இல்லாதவர்கள் எல்லாம் பணியில் நியமிக்கப் பட்டனர். பின்னாளில், தேர்வாணையராக பணியாற்றிய பேராசிரியர் லீலாவும்கூட விதிகளுக்குப் புறம்பாக நியமிக்கப்பட்டவர்தான். பேராசிரியர் கள் லட்சுமி மனோகரி, புவனலதா, ரமேஷ்குமார், முருகேசன், வெங்கடா சலம், ஜோனாதுல்லா, செல்வ விநாயகம், வெங்கடேஷ்வரன், வெங்கடேசன், கார்த்திகேயன் என குறுக்கு வழியில் பணி நியமனம் பெற்றவர்களிடம் இப்போது காவல்துறையினர் விசாரணை நடத்தியிருக்கிறார்கள்.

Advertisment

சுவாமிநாதன் பரிந்துரை செய்த 46 ஆசிரியர்களின் நியமனத்திற்கு மட்டும் பாட வல்லுநர் குழு ஆட்சேபனை தெரிவித்தது. அதை நிராகரித்த சுவாமிநாதன், தன்னிடம் பணம் கொடுத்த 154 பேருக்கும் தன்னிச்சையாக கடிதம் அனுப்பி, உடனடியாக பணியில் சேரும்படி செய்தார். அதற்கு பக்கபலமாக அப்போது உதவியாளராக பணியாற்றிய ராஜமாணிக்கமும் இருந்தார்.

47 ஆசிரியரல்லா பணியாளர்களை நியமித்தபோதும், அவர்களிடம் இருந்து, தலா 3 லட்சம் முதல் 5 லட்சம் வரை சுவாமிநாதன் வசூலித்திருக்கிறார். இவ்வாறு முறை கேடாக நியமிக்கப்பட்ட ஆசிரியரல்லா பணியாளர்களில் சங்கீதா (பர்சார்), மோகனசுந்தரமூர்த்தி, சுகந்தி, நிர்மலாதேவி, குணசேகரன், செல்வராஜ், மருத துரை, கிருஷ்ணன், ராஜா, சிவானந்தம் ஆகியோரிடமும் லஞ்ச ஒழிப்புப்பிரிவு விசாரணை நடத்தி யுள்ளது''” என்கிறார்கள் ஆதங்கமாய்.

vv

Advertisment

இதுதவிர, பல்கலை மற்றும் இணைவு பெற்றுள்ள கல்லூரிகளின் தேர்வு முடிவுகளை வெளியிடும் பணிகளை, சென்னையைச் சேர்ந்த அரவிந்த் என்பவருக்குச் சொந்தமான "மெசர்ஸ் கேலேப்' என்ற தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் கொடுத்திருந்தார் சுவாமிநாதன். தேர்வுக்கான விடைத்தாள்களில் தேர்வர்களின் புகைப்படம், பெயர், டம்மி தேர்வு எண் அச்சிட்டு வழங்குவதும், விடைத்தாள் மதிப்பீடு செய்யப்பட்ட பிறகு பிரத்யேக சாப்ட்வேர் மூலம் மதிப்பெண்களையும், தேர்வு முடிவுகளையும் உள்ளீடு செய்து அனுப்புவதும்தான் கேலேப் நிறுவனத்தின் பணியாகும்.

இதற்காக ஒரு விடைத்தாளுக்கு 3 முதல் 5.25 ரூபாய் வரை விலைப்புள்ளி நிர்ண யிக்கப்பட்டு, 3.26 கோடி ரூபாய்க்கு சுவாமி நாதனும், அப்போதைய தேர்வாணையர் லீலா வும் ஒப்பந்தம் கொடுத் துள்ளனர். துணை வேந்தருக்கு 10 லட்சம் ரூபாய் வரையிலான ஒப்பந்தத்திற்கு மட்டுமே நிதி விடுவிக்கும் அதிகாரம் இருக்கிறது. ஆனால், கேலேப் நிறுவனத்திற்கு ஒவ்வொரு செமஸ்டருக்கும் 50 லட்சம் ரூபாயை உயர் கல்வித்துறையின் அனுமதியின்றி சுவாமிநாதன் விடுவிப்பு செய்திருக்கிறார் என்கிறது லஞ்ச ஒழிப்புப் பிரிவு.

உள்கட்டமைப்பு வசதி இல்லாத கல்லூரிகளைத் தொடங்குவதற்கும், புதிய பாடப் பிரிவுகளை தொடங்குவதற்கும் சுவாமிநாதனும் லீலாவும் கல்லூரி அதிபர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு அனுமதியளித்துள்ளனர்.

மேற்சொன்ன குற்றச்சாட்டுகள் அனைத் திலும் இந்தப் பல்கலையில் 18-8-2012 முதல் 17-8-2015 வரை பதிவாளராக பணியாற்றிய அங்கமுத்துவுக்கும் தொடர்பு இருக்கிறதாம். எனவே, துணைவேந்தர் சுவாமிநாதன், அப்போ தைய பதிவாளர் அங்கமுத்து, தேர்வாணையர் லீலா ஆகிய மூவர் மீதும் கூட்டுச்சதி, போலி ஆவணம் தயாரித்தல், மோசடி உள்ளிட்ட 7 பிரிவுகளில் சேலம் லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் அதிரடியாக வழக்கைப் பதிவு செய்துள்ளனர். இதில் எதிர்பாராத திருப்பமாக இந்த மூவரில் ஒருவரான அங்கமுத்து, கடந்த 18-12-2017-ல் தற்கொலை செய்துகொண்டார். இவரது தற்கொலை பின்னணியிலும் அதிர்ச்சிகரமான கிளைக்கதைகள் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

vv

பணி நியமனம் தொடர்பாக மாயமான கோப்புகள்தான் இந்த வழக்கில் முக்கிய துருப்புச் சீட்டு. அதையும் காவல் துறையினர் கண்டுபிடித் தாக வேண்டிய நெருக் கடியும் ஏற்பட்டுள்ளது.

நம்முடைய கள விசாரணையில், சுவாமி நாதனின் இந்த துணிகர முறைகேடுகளுக்கு அர சியல் பின்புலமும் ரொம்பவே பக்கபலமாக இருந்துள்ளதும் தெரிய வந்திருக்கிறது. அப்போதைய உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன், உயர் கல்வித்துறை செயலர் வரை தொடர்பில் இருந்ததாகச் சொல்கின்றனர்.

லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளதை அடுத்து சுவாமிநாதன், பெருந்துறையைச் சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலத்திடம் தஞ்சம் புகுந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. முன்னாள் அமைச்சர்கள் பழனியப்பன், தோப்பு வெங்கடாசலம் ஆகிய இருவருமே தற்போது தி.மு.க.வில் ஐக்கியமாகியிருப்பதால், விசாரணை எப்படிப் போகுமோ என்ற கேள்வியும் உள்ளது.