அ.தி.மு.க. ஆட்சியில் தொழில்துறை அமைச்சராக இருந்தவர் எம்.சி.சம்பத். இவரது காலகட்டத்தில் சிப்காட் இடங்களை முறைகேடாக விற்றுள்ளதாக தற்போது சர்ச்சை கிளம்பியுள்ளது. பெருந்துறை சிப்காட்டுக்காக 1991ஆம் ஆண்டு 250 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்தியது. அரசு கையகப்படுத்திய இடத்தின் உரிமையாளர் களில் 77 பேரிடமிருந்து மட்டும் பெற்றதாக கூறி 2016ஆம் ஆண்டில் கொங்கு வேளாளர் கல்வி நிறுவனம், 23.6 ஏக்கர் இடத்திற்கு மட்டும் அரசிடம் விதிவிலக்கு கேட்டுள்ளனர். இதற்கு அரசு தரப்பில், இது தொழிற்சாலை பயன்பாட்டிற்காக மட்டுமே தவிர, பள்ளிகளுக்கானff இடம் இல்லை என மறுக்கப்பட்டது. இதை யடுத்து, இதில் விதிவிலக்கு கோரி உயர்நீதி மன்றத்தில் முறையிட்டுள்ளனர். அதுவிஷயத்தில் அத்துறையின் செயலாளர் தான் முடிவெடுக்க வேண்டுமென்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவின் பேரில், இந்த இடம் தொழிற்சாலை பயன்பாட்டுக்கு மட்டுமே என்று அரசு மறுத்துவிட்டது.

அடுத்தகட்டமாக, அத்துறையின் அமைச்சர் சம்பத்திடம் சென்று, எங்கள் இடத்திற்கு விதிவிலக்கு பெற்றுத்தந்தால் ஒரு தொகையும், 5 ஏக்கர் நிலமும் தருவதாக உறுதியளித்த பின்னர், அப்போதைய சிப்காட் நிர்வாக இயக்குனரிடம், இவர்களுக்கு நிலத்திற்கு விதிவிலக்கு அளித்து தொழிற்பேட்டை இருக்கும் இடத்தில் பள்ளி கட்டுவதற்காக விதியை மீறி நிலம் ஒதுக்குமாறு அமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.. இந்த சூழ்நிலையில் 2021 தேர்தல் வரவே அந்த உத்தரவு அப்படியே கிடப்பில் போடப்பட்டது. அதன்பிறகு மேலும் இரண்டு சர்வே எண்ணுக்கு அனுமதி பெற்று, தற்போது மீதமுள்ள இடத்திற்கும் அனுமதி கேட்டுவருகிறார்களாம். சர்வே எண் 395,396ல் சிப்காட் பெயரில் உள்ள இடத்தை ஆக்கிரமிப்பு செய்து வேலி அமைத்து தங்களுடைய பயன் பாட்டில் வைத்துள்ளனர். இந்த அரசு பொறுப்பேற்று இரண்டு வருடம் ஆகியும் இவ்விவகாரத்தைக் கண்டுகொள்ளாமல் இருப்பதற் காக அங்குள்ள அதிகாரிகளைச் சரிக்கட்டியுள்ள னர்.

இது குறித்து முன்னாள் அமைச்சர் சம்பத்திடம் கேட்டபோது, "அது கல்வி நிறுவனமென்று கேள்விப்பட்டதே இல்லை'' என்றார். அப்பகுதி தாசில்தார் பூபதியிடம் கேட்டபோது, "எனக்கு தெரியவில்லை. நான் புதிதாக வந்துள்ளேன், விசாரிக்கறேன்'' என்றார். இதுகுறித்து சிப்காட் நிர்வாக இயக்குனர் சுந்தரவள்ளியிடம் கேட்டபோது, "நிச்சயம் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

Advertisment

ff

இதுபோன்று தமிழகத்தில் உள்ள அனைத்து சிப்காட் இடங்களையும் ஆக்கிரமிப்பு செய்து, விதிவிலக்கு கேட்பவர்களுக்கு விதிவிலக்கு கொடுத்துக்கொண்டே இருந்தால், அரசு தொழிற் பேட்டை நிலை கேள்விக் குறி ஆகிவிடும். இதனால் பு திதாகப் பொறுப் பேற்றிருக்கும் அமைச்சர் இதற்கு தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

-சே