கொரோனா இரண்டாவது அலையின் கொடும் தாக்குதலில் இருந்து தமிழ்நாட்டைப் பாது காப்பதில் முனைப்பு காட்டிய முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கைகளாக இருந்தவர்கள் மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியமும், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவும். மக்களுக் கான ஆக்சிஜன் சப்ளையில் விரைவு நடவடிக்கை மேற் கொண்ட தங்கம் தென்னரசு, தொழில்துறைக்கான ஆக்சிஜனான முதலீடுகளை ஈர்ப்பதிலும் வேகம் காட்டி வருகிறார். முதலீட்டாளர் களின் முதல் முகவரி -தமிழ்நாடு என்ற முதல்வரின் திட்டத்தை செயல்படுத்துவதில் முனைப் புடன் இருக்கும் அவரிடம் நக்கீரன் சார்பில் கேள்விகளை முன்வைத்தோம்.

அ.தி.மு.க. ஆட்சியில் முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் 6 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் திரட்டப் பட்டதாக அறிவித்தார்கள். அதற்கேற்ப நிறுவனங்கள் தொடங்கப்பட்டனவா?

tt

தங்கம் தென்னரசு: கடந்த ஆட்சிக்காலத்தில் அறிவித்த அளவுக்கு முதலீடுகள் தமிழ்நாட் டுக்குள் வரவில்லை என்பதே உண்மை. அப்போது வந்த முத லீடுகளால் இங்கே உருவாக்கப் பட்ட நிறுவனங்களில் சிலவற்றை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமீபத்திய தொழில் துறை மாநாட்டில் தொடங்கி வைத்தார். மற்ற முதலீடுகள் எந்தளவு வந்துள்ளன என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. எனவே அதுகுறித்த முழுமை யான விவரங்களைக் கேட்டி ருக்கிறோம். அறிக்கை வெளியிடப்படும்.

Advertisment

தமிழ்நாட்டுத் தொழில் துறை -வணிக நிறுவனங்களில் வட மாநிலத்தவர்களின் ஆதிக் கம் அதிகரித்துவருகிறது. தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்களின் வேலைவாய்ப்பு கேள்விக்குறி யாகி உள்ளதே?

தங்கம் தென்னரசு: பெரும் பாலும், உடலுழைப்புத் தொழி லாளர்கள்தான் வட மாநிலங் களிலிருந்து தமிழ்நாட்டுக்கு வருகிறார்கள். சென்னை, சென் னையைச் சுற்றியுள்ள பகுதிகள், கோவை, திருப்பூர் போன்ற குறிப் பிட்ட சில பகுதிகளில் அதிகமாக இருக்கிறார்கள். அதனால்தான், தமிழ்நாட்டில் உள்ள தனியார் நிறுவனங்களில் தமிழர்களுக்கு 75% வேலைவாய்ப்பு என்ற வாக்குறுதியை அளித்தோம். அதனை நிறைவேற்றுவதில் இந்த அரசு முனைப்பாக இருக்கிறது.

தொழில் வளர்ச்சி பெற்ற கோவை மண்டலத்தில் விமான நிலைய விரிவாக்கம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை ஏற் படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுமா?

Advertisment

தங்கம் தென்னரசு: உள்கட்டமைப் பைப் பலப்படுத்தவேண்டிய தேவை, கோவைக்கு மட்டுமின்றி, தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளி லும் இருக்கிறது. உலகத்தரம் வாய்ந்த உள் கட்டமைப்பை உருவாக்குவோம் என்று தொழில் துறை மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர் கள் அறிவித்துள்ளார். முக்கியமாக, தமிழ்நாடு முழுவதும் முக்கிய தொழில் நகரங்களில் விமான வசதியை விரிவுபடுத்த வேண்டியிருக்கிறது. சென் னைக்கே இன்னொரு விமான நிலையம் வர வேண்டுமென்ற கோரிக்கை இருக்கிறது. அதன்படி பணிகள் நடந்துவருகின்றன. அடுத்ததாக, மதுரை விமான நிலையத்தை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டுவரு கிறது. விரிவாக்கம் நடைபெறவேண்டிய இடம், அதற்கான நில எடுப்பு, பணிகள் ஒருங்கிணைப்பு ஆகியவற்றுக்கான ஆய்வுகளையும் திட்டங் களையும் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடனேயே தொடங்கிவிட்டோம்.

இப்போதுவரை வேலைவாய்ப்புக்காக சென்னையை நோக்கியே தென்மாவட்ட இளைஞர்கள் வரவேண்டியுள்ளது. தென் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் என்ற முறையில் அப்பகுதிகளில் வேலைவாய்ப்பைப் பெருக்க நடவடிக்கை எடுப்பீர்களா?

th

தங்கம் தென்னரசு: தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை அதிகரிக்க நிறைய திட்டமிடல்கள் இருக்கின்றன. தொழில் பெருவழித் தடங்களில் சுத்திகரிப்பு ஆலைகள், ஜவுளி பூங்கா, ஐ.டி.பூங்கா உள்ளிட்ட பல்வேறு புதிய தொழில் நிறுவனங்கள் வரவுள்ளன. கங்கைகொண்டானில் ஒரு ஃபுட் பார்க் வருகிறது. நாங்குநேரி சிறப்புப் பொருளாதார மண்டலத்தை மீண்டும் செயல் படுத்துவதற்கான திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. திருநெல்வேலி, தூத்துக்குடியில் மினி டைட்டல் பார்க் அமைப்பதற்கான திட்டங்களும் உள்ளன.

சிவகாசி பட்டாசுத் தொழிலைப் பொறுத்தவரை, ஒருபுறம் பசுமைப் பட்டாசு குறித்த விழிப்புணர்வில் மத்திய அரசு முனைப்பு காட்டுகிறது. இன்னொருபுறம், பட்டாசு ஆலைகளில் ஏற்படும் விபத்துகள் அதிகரித்தபடி இருக்கின்றன. பட்டாசுதுறை சார்ந்த தொழிலாளர்களைப் பாதுகாக்க எத்தகைய நடவடிக்கை எடுக்கப்படும்?

தங்கம் தென்னரசு: பட்டாசுத்தொழில் என்பது வாழ்வாதாரம் சார்ந்த பிரச்சனை. இந்த துறையை நம்பி ஏழெட்டு லட்சம் பேர்வரை இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவரின் வாழ்வாதாரம் சார்ந்த தொழிலாக இது இருக்கிறது. அரசின் முறையான அனுமதி பெற்று, பாதுகாப்புக்காக அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளை முறைப்படிச் செயல்படுத்துவதன் மூலம் பட்டாசுத் தயாரிப்பில் பாதுகாப்பை பலப்படுத்தி, பட்டாசுத்தொழில் சார்ந்த அனைவரின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கும் நடவடிக்கையை அரசாங்கம் எடுக்கும்.

முதலீடுகளைத் திரட்டும்போது, புதிய பன்னாட்டு நிறுவனங்களை தமிழ்நாட்டுக்கு வரவேற்பது ஒருபுறமிருந்தாலும், ஏற்கனவே இயங்கிவரும் நிறுவனங்களை, நசிவடைந்த உள்ளூர் தொழில்களை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுமா?

தங்கம் தென்னரசு: வெளி முதலீடுகளை ஈர்ப்பதில் காட்டும் அதே அக்கறையை, நம் உள்ளூர் தொழில்களை மேம்படுத்துவதிலும் நிச்சயமாகக் காட்டுவோம். அடிப்படையாகவே நம்முடைய தமிழ்நாட்டின் தொழில் துறை பலமென்பது, ஜவுளித்துறை, தோல் பதனிடுதல் போன்றவற்றில் உள்ளது. எனவே நம்முடைய பாரம்பரியமான தொழில்களின் வளர்ச்சியை பல்வேறு வகைகளில் ஊக்குவிப்பதற்கான திட்டங்களையும் நாம் உறுதியாகச் செயல்படுத்துவோம்.