கட்சியில் செல்வாக்கை நிலைநிறுத்திக் கொள்ளும் வகையில், தனக்கான பணப் பெட்டியாக சேலம் இளங்கோவ னைப் பயன்படுத்தி வந்தவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. கடந்த 2016-ல் "சுவாமி அய்யப்பன் கல்வி அறக் கட்டளை' என்ற பெயரில் திருச்சி முசிறியில் துவங்கி இளங்கோவன் நடத்திவந்தார். அதில் 26 பேர் நிர்வாகிகளாக இருந்த நிலையில், தற்போது 6 பேர் மட்டுமே நிர்வாகிகளாக நீடித்துவருகின்றனர்.
இளங்கோவன் மகன் பிரவீன் பெயரில் சுவாமி அய்யப்பன் கல்வி அறக் கட்டளையை துவங்கி அதன்கீழ் எம்.ஐ.டி. டெக்னாலஜி மற்றும் பாலிடெக்னிக், வேளாண்மை கல்லூரி உள்ளிட்டவற்றை நடத்திவந்துள்ளனர். மேலும் அ.தி.மு.க. ஆட்சியில் எந்த காவல்துறை உயரதிகாரிகள் வந்தாலும் இளங்கோவனின் மகன் பிரவீன் நேரடியாக சென்று அவர்களோடு தன்னுடைய நட்பை பலப்படுத்திக்கொள் வார்.
தி.மு.க. ஆட்சி அமைந்ததும் முன்னாள் முதல்வரின் பணப்பெட்டியான இளங்கோவன் மீது லஞ்ச ஒழிப்புத் துறையின் கவனம் திரும்பியது. அதில் திருச்சி மாவட்ட முதலீடுகளும் தப்ப வில்லை. இது முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தொடர்ச்சி யாகவே பார்க்கப்படுகிறது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி எம்.ஐ.டி டெக்னாலஜி கல்லூரியிலும், வேளாண் கல்லூரியிலும் சோதனை நடைபெற்றுள்ளது. இந்த இரு கல்லூரிகளையும் நிர்வகித்து வரும் இளங்கோவனின் மகன் பிரவீன்குமார், முசிறி வெள்ளாளப்பட்டியில் வீடு எடுத்து தற்போது வசித்து வருகிறார். லஞ்ச ஒழிப்புத் துறையினர் பிரவீன்குமார் தங்கியிருந்த வீட்டிலும் சோதனை நடத்தியுள்ளனர்.
அதேபோல் பொதுப்பணித்துறையில் பணி யாற்றிய ஏ.இ. ஸ்கொயர் நடராஜன் என்பவ ருடைய வீட்டிலும் இந்த சோதனை நடை பெற்றுள்ளது. இந்நிலையில் சுவாமி அய்யப்பா கல்வி அறக்கட்டளையில் ஒரு நிர்வாகியாக நடராஜனின் மகள் ஆதித்யா அங்கம் வகிப்பதால் அவருடைய வீட்டிலும் சோதனை நடை பெற்றுள்ளது. அதேபோல் இளங்கோவின் மகள் ஜெயா பெயரில் முசிறி எம்.ஐ.டி. கல்லூரிக்கு எதிர்புறம் உள்ள பெட்ரோல் பங்கின் ஏஜென்சி உள்ளது. பொதுப்பணித்துறை ஏ.இ. ஸ்கொயர் நடராஜன் மனைவி உமா பெயரில் அந்த பெட் ரோல் பங்க் தற்போது இயங்கிவருகிறது. எனவே அந்த பெட்ரோல் பங்க்கிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி உள்ளனர்.
இந்த சோதனையில் சாமி ஐயப்பா கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமாக பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.அதில் தாத்தையங்கார் பேட்டை பகுதியில் உள்ள 450 ஏக்கர் நிலத்தின் ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அதில் 100 ஏக்கர் நிலம் இளங்கோவ னுக்கு பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், வி.ஆர்.எஸ். ஏஜென்சிஸ் உரிமையாளர் சுந்தர் ஐயர் இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்திற்கு சைக்கிள் வழங்கியதால் இளங்கோவன், சுந்தர் ஐயரின் மனைவி வத்சலா வை சுவாமி ஐயப்பா கல்வி அறக்கட்டளையில் ஒரு உறுப்பினராக இணைத்துள்ளார். சுந்தர் ஐயருக்கு சிங்கப்பூர், மலேசியா, மொரிஷியஸ் உள்ளிட்ட நாடுகளில் சொத்துகள் இருப்பதால்... தற்போது லஞ்ச ஒழிப்புத் துறையிடம் சிக்கிய இளங்கோவனுக்கு சொந்தமான சொத்துக்கள் இந்த நாடுகளிலும் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
அதிலும், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு சொந்தமான சொத்துக்களும் முதலீடுகளும் இந்த நாடுகளில் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால், இளங்கோவ னிடம் அதிகாரிகள் தொடர்விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விசாரணையின்போது இளங்கோவன் எதுவும் சாப்பிடாமல் வெறும் பழரசங்களை மட்டும் அருந்திவிட்டு மிகுந்த மனஉளைச்சலில் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது. லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் முன்னாள் அமைச்சர்களைவிட இளங்கோவனிடம் இருக்கும் சொத்துக்கள்தான் அதிகமாம். அதற்கான ஆவணங்கள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.