கிராமியக் கலைகளை வளர்க்க தமிழ்நாடு அரசு எடுத்துள்ள முயற்சி, நாட்டுப்புறக் கலைஞர் களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. வட தமிழ்நாட்டில் தெருக்கூத்து பிரபலம். கொங்கு மண்டலத்தில் வள்ளிக்கும்மி பிரபலம். தென் மாவட்டங்களில் வில்லுப்பாட்டு, கரகாட்டம், கிராமியப்பாட்டுகள் பிரபலம். நாட்டுப்புறக் கலைகளுக்கான வரவேற்பு குறைந்துவருகிறது. நாட்டுப்புறக் கலைஞர்களும் போதிய வாய்ப்பின்றி திண்டாடுகிறார்கள். நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு சரியான ஊதியமும் இல்லை. நாட்டுப்புறக் கலைகளைக் கற்றுத்தர முறையான பயிற்சி மையங்களும் இல்லை.
பரதநாட்டியத்துக்கு கல்லூரிகள், இசைப் பயிற்சிக் கூடங்கள் இருப்பதுபோல், தெருக்கூத்து, கோல்கால் ஆட்டம், புரவியாட்டம் போன்ற நாட்டுப்புறக் கலை களுக்கு பெரிய அளவில் பயிற்சிக்கூடங்கள் இல்லையே என்கிற ஏக்கம் இருந்துவந்தது. இதுகுறித்த கோரிக்கை கலை பண்பாட்டுத் துறைக்கு அமைச்சராகவுள்ள செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மூலமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு சென்றது. அதுகுறித்து அதிகாரிகள் மற்றும் அறிஞர்களுடன் நடந்த கலந்தாலோசனையில், தமிழ்நாட்டிலுள்ள 17 மாவட்ட இசைப்பள்ளிகள், 5 இசைக்கல்லூரிகள், 3 மையங்களில் கிராமியக் கலைகளைக் கற்றுத்தரலாம் என முடிவெடுக்கப்பட் டது. இதுகுறித்த தகவல்கள் இசைக்கல்லூரி, இசைப்பள்ளிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
வட தமிழ்நாட்டில் விழுப்புரம், திருவண்ணா மலை, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம் மாவட்டங்களில் தெருக்கூத்துக் கலை பிரபலம் என்பதால், தெருக்கூத்து, பெரிய மேளம், பம்பை, கிராமியப் பாடல்கள் பாடுவது குறித்த பயிற்சிகள் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தென் மாவட்டங் களில் வில்லுப்பாட்டு, கரகாட்டம், வள்ளிக்கும்மி, துடுப்பாட்டம், காவடியாட்டம், ஜிக்காட்டம், கோல்கால் ஆட்டம், புரவியாட்டம், டெல்டா மாவட்டங்களில் புலியாட்டம்,சாமியாட்டம், தப்பாட்டம் கற்றுத்தருவதற்கான பயிற்சி வகுப்புகள் கடந்த வாரத்தில் தொடங்கப் பட்டுள்ளன. இதுபற்றி திருவண்ணாமலை மாவட்ட இசைப்பள்ளி தலைமை யாசிரியர் ஷியாமளா கிருஷ்ணனிடம் கேட்டபோது, "பகுதிநேர நாட்டுப்புறக் கலைப்பயிற்சி என்கிற தலைப்பில் வாரத்தில் வெள்ளி, சனிக்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் மட்டும் பயிற்சி யளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியில் 17 வயது நிரம்பிய யாரும் சேரலாம். அதிகபட்ச வயது வரம்பில்லை. பள்ளிப்படிப்பு 8வது முடித் திருந்தால் தேர்வெழுத வைக்கப்படுவர். படிக்கவில்லையென்றால் தேர்வு இல்லை. ஆனால் இருவருக்குமே சான்றிதழ் தருவோம்'' என்றார்.
உயிர் பெறட்டும் நாட்டுப்புறக் கலைகள்!
-கிங்
படங்கள்: எம்.ஆர்.விவேகானந்தன்