"ஒரு பணக்காரக் குழந்தை யிடம் பணம் கிடைத்தால் அது என்னவெல்லாம் செய்யுமோ, அதுபோல் தறிகெட்டத்தனமாக பணத் தைச் செலவு செய்துகொண்டிருக்கிறது பா.ஜ.க. இதை தமிழகம் வந்த பிரதமரே உணர்ந்து டோஸ் விட்டிருக்கிறார்' என்கின்றன பா.ஜ.க. வட்டாரங்கள். சென்னை வந்த பிரதமர், தனது ரோட் ஷோவில் நின்றிருந்தவர்கள் இந்தியில் பேசியதைக் கேட்டு அதிர்ந்து போய்விட்டார். அவர்கள் பிரதமரைப் பார்த்து இந்தியில் ‘"ச்சார் சோ பார்'’ எனக் கத்தினார்கள். தமிழக மக்களுக்கு இந்தி தெரியாது. அவர்கள் எப்படி இந்தியில் கோஷமிட்டார்கள் என பிரதமர் விசாரித்தபோது, அவர்கள் சௌகார்பேட்டையிலிருந்து திரட்டப்பட்ட வட இந்தியர்கள் கூட்டம் என தெரியவந்தது. வட இந்தியர்கள், சென்னையில் பணிபுரியும் வெளி மாநிலத்தவர், மயிலாப்பூர், தி.நகர், நங்கநல்லூர் பகுதிகளில் வசிக்கும் பிராமணர்கள் என 7,000 பேரை திரட்டியிருக்கிறார்கள். ஒவ்வொரு பகுதிக்கும் 5,00,000 ரூபாய் கொடுத்திருக்கிறார்கள். பிரதமரின் ரோட் ஷோவுக்கு தி.நகர் தெருக்களில் பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் திரளுவார்கள் என பா.ஜ.க. கணக்கு போட்டது. ஆனால், பிரதமர் விசிட்டை காரணம் காட்டி பலமணி நேரம் முன்பே பா.ஜ.க. வண்டிகள் தவிர வேறு யாரையும் போலீசார் அனுமதிக்கவில்லை.
நாயுடு ஹால் என்கிற பிரபல துணிக்கடையில் வேலை செய்யும் பெண்களை அந்தக் கடையின் வாசலிலேயே நிற்கவைத்து கூட்டத்தைக் காண்பித்தது பா.ஜ.க. ‘எல்லா பெண்களும் ஒரே யூனிபார்முடன் நிற்கிறார்கள்’ என பிரதமரே அதிர்ந்துபோனார். பிரதமர் வருகைக்கு கூட்டம் இல்லையென மீடியாக்கள் ஒவ்வொரு பகுதியிலும் நின்றிருந்தவர்களை நம்பர் எண்ணிக்கையாகப் போட்டு ‘பத்து பேர், பதினைந்து பேர்’ என கணக்குப் போட்டு ஒளிபரப்பினார்கள். சமீபத் தில் பிரதமர் பேட்டியளித்த தொலைக் காட்சி, பிரதமர் கார் சென்றபின்பு ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத் திற்கு பொதுமக்கள் ஓடுவதை பரபரப்புச் செய்தியாக படம் பிடித்துக் காட்டியது.
சென்னையில்தான் இப்படியென் றால் சென்னையை அடுத்து பிரதமர் கலந்துகொண்ட மேட்டுப்பாளையம் பொதுக்கூட்டத்தில் நிலைமை அதைவிட மோசமாக இருந்தது. தூரம் தூரமாகப் போடப் பட்ட இருக்கைகள், அதில் அமர வைக்கப்பட்டிருந்த முதியவர்கள், வயதான பெண்கள், குழந்தைகள் ஆள்களே இல்லாத காலி சேர்களையெல்லாம் பார்த்து பிரதமர் முகம் சுளித்தார். ‘"பாரத் மாதாகி ஜே!'’ என்கிற பிரதமரின் கோஷத்தை திருப்பிச் சொல்வதற்கு ஆள் இல்லை. பா.ஜ.க. தொண்டர் களே காவிநிற தொப்பி போட்டு மிகக்குறைவான எண்ணிக்கையில் அமர்ந்திருப் பது கண்டு பிரதமரே அதிர்ந்துபோனார்.
இதுவரை 560 கோடி ரூபாய் தமிழக பா.ஜ.க.வுக்கு மத்திய பா.ஜ.க. கொடுத்திருக் கிறது. இதுதவிர தனது செல்வாக்கில் 300 கோடி ரூபாயை தமிழக பா.ஜ.க. வசூல் செய்திருக்கிறது. வேட்பாளர் கள் செலவு, கட்சிக்காரர்கள் செலவு என பல நூறு கோடி ரூபாய்களை பா.ஜ.க. செலவு செய்து வருகிறது. இவ்வளவு செலவு செய்தும் பிரதமர் விசிட்டுக்கே ஆட்களைக் கொண்டுவர முடியாதது ஏன் என பிரதமர் அலுவலகம் விசாரணையில் இறங்கியது. டெல்லியிலிருந்து வரும் பணம் அனைத்தையும் சுருட்டுவதில்தான் தமிழக பா.ஜ.க. ஆர்வமாக இருக்கிறது. இதற்கென தமிழக பா.ஜ.க. பொதுச்செயலாளர் கேசவவிநாயகம், ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு ஆள் போட்டு வேட்பாளருடன் சுற்ற விட்டுள் ளார். யாரும் பணத்தைச் செலவு செய்வதில்லை. அதைச் சுருட்டுவதிலேயே குறியாக இருக்கிறார் கள். இப்படி வேட்பாளருக்கென கொடுக்கப் பட்ட பணம் பா.ஜ.க. மாநில நிர்வாகிகளின் பாக்கெட்டை நிறைத்துக் கொண்டிருக்கிறது.
எனக்கு சரியாக பணம் தரவில்லையென பல வேட் பாளர்கள் தலைமைக்கு புகார் வாசித்திருக்கிறார்கள். அதில் முக்கியமானவர் நெல்லை வேட்பாளர் நயினார் நாகேந் திரன். அவரிடம் பிடிபட்ட நாலுகோடி ரூபாய் பணத்தை திருப்பித் தாருங்கள் என தலைமையிடம் கோரிக்கை வைத்திருக்கிறார் நயினார். சிதம்பரம் வேட்பாளர் கார்த்தியாயினி, கேசவ விநாயகத்துக்கு கரெக்டாக கட்டிங் கொடுக்கிறேன்’என தனக்கு நெருக்கமானவர் களிடம் சொல்ல, இந்தத் தகவல் தலைமைக்கு எட்டியுள்ளது.
தேர்தலுக்கு நெருக்கத்தில் வாக்காளர் களுக்குக் கொடுப்பதற்கு என 500 கோடி ரூபாய் மத்திய தலைமையிடமிருந்து வரவிருக்கிறது. அதைப் பெறுவதற்காக ஏற்கெனவே கொடுத்த தொகையை செலவழித்து விட்டோம் என பொய்க்கணக்கு எழுதி சமர்ப்பித்து இருக்கிறார் கள் பா.ஜ.க. வேட்பாளர்கள். அந்தக் கணக்கில் இருக்கும் விவரங்களுக்கும் தேர்தலுக்கும் தொடர்பே இல்லை. அதனால் அதிர்ந்து போயிருக்கும் தேசியத் தலைமை, இறுதிக்கட் டப் பணம் கொடுத்தாலும் தமிழகத்தில் பா.ஜ.க. தேறுமா? அது வீண் செலவுதான் என யோசிக்க ஆரம்பித்து விட்டது. அதனால் டி.டி.வி., ஏ.சி.எஸ்., சௌமியா போன்ற நல்ல நிலையில் இருக்கும் வேட்பாளர்களைக் காண்பித்து பணம் கேட்டிருக்கிறார் ஆடுமலை. ஆனால், இம்மூவரும் பா.ஜ.க.வினர் அல்ல என்பதுதான் ஹைலைட்.