கும்பமேளாவில் நடந்த தீ விபத்து ஆன்மிக பக்தர் களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. காட்டுத்தீ போல கொளுந்துவிட்டு எரிந்த தீ விபத்து, ஆட்சியாளர்களுக்கு ஆபத்தை உரு வாக்குவதற்கான சமிக்ஞை என்கிறார்கள் ஆன்மீக பக்தர்கள். இதனால் பா.ஜ.க. தலைவர்கள் அப் செட்டாகியிருப்பதாக தகவல்கள் பரவிவருகின்றன.

உத்தரப்பிரதேசம் என்பது பா.ஜ.க.வின் ஆன்மீக பூமி; புண்ணிய ஸ்தலம்! இங்கு நடக்கும் நல்லது, கெட்டது அனைத்தும் ஆன்மீகத்தோடு இணைந்தவை என்றே பா.ஜ.க.வினர் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.

ss

உ.பி.யில் உள்ள கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய 3 புனித நதிகள் சங்கமிக்கும் பிரயாக்ராஜ் நகரில் உள்ள திரிவேணி சங்கமம் பகுதியில், மகா கும்பமேளா கடந்த 13-ந் தேதி தொடங்கியது. 45 நாட்கள் இந்த ஆன்மிக விழா ஏகவிமரிசையாக நடக்கும். இந்த ஆன்மிக நிகழ்விற்காக தேசம் முழுவதுமிருந்து பல கோடி பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் குவிந்துள்ளனர். மகா கும்பமேளா நடக்கும் பிப்ரவரி 26-ந் தேதி 50 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் கூடுவர் என கணக்கிட் டுள்ளது உத்தரபிரதேச மாநில அரசு.

இந்த நிலையில், கும்பமேளாவிற்காக வருகிற பக்தர்கள் தங்குவதற்காக சுமார் 10,000 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ள கும்பமேளா நகரில் மடாதிபதிகள், ஆன்மிக பெரியோர்கள், சாமியார்கள், பக்தர்கள் ஆகியோர் தங்குவதற்காக ஆயிரக்கணக்கான கூடாரங்கள் அமைக்கப்பட்டுள் ளன. இந்த பகுதிகள் ஒவ்வொரு மண்டலமாக பிரிக்கப்பட்டுள்ளன. 19-வது மண்டலத்தில் அமைக்கப்பட்ட கூடாரங்களுக்கு அருகே, ஒரு கூடாரத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை அடுக்கி வைத்திருந்தனர்.

Advertisment

அடுக்கி வைக்கப்பட்டிருந்த சிலிண்டர்கள் 19-ந் தேதி மாலை திடீரென்று வெடித்துச் சிதறின. இதனால் தீ பிரளயம் உருவானது. இந்த தீ பிரளயத்தில் அருகே இருந்த பக்தர்களுக்கான கூடாரங்களில் சிலிண்டர்கள் தூக்கி வீசப்பட்டதில் கூடாரங்களும் தீப்பிடித்து எரிந்தன. காடுகளில் எரிமலை வெடித்தால் உருவாகும் தீப்பிழம்பைப் போல அந்த கூடாரங்கள் எரிந்தன. ஒரு கூடாரத்தில் இருந்து மற்றொரு கூடாரத்திற்கு தீ பரவியது. இதனால், 19-வது மண்டலத்தில் குவிந்திருந்த பக்தர்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். தீ பரவிய வேகம் கண்டு திரி வேணி சங்கமமே தீக்கிரையாகுமோ என ஆன்மிக பெரி யோர்கள் பயந்தனர். ஆனால், தீயணைப் புத்துறையினர் துரிதமாக செயல் பட்டு, போராடி தீ பரவலை கட்டுப் படுத்தி அணைத் தனர். இருப்பினும் 100-க்கும் மேலான கூடாரங்கள் தீக்கிரையாகி சாம்பலானது. இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை.

உத்தரப்பிரதேச மாநிலத்தையே உலுக்கிய இந்த தீ விபத்து குறித்து கும்பமேளா நிர்வாகம், ‘’நடந்த தீ விபத்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இதனை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. தீயணைப் புத்துறையினர் எடுத்த துரித நடவடிக்கையால் தீ பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. உடனடி நிவாரணம், பக்தர்களின் பாதுகாப்பு, மீட்பு நடவடிக்கைகள், பக்தர்களுக்கான மாற்று ஏற்பாடு ஆகியவற்றை உறுதிசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைவரின் பாதுகாப்பிற்காக கங்கை மாதாவை நாங்கள் பிரார்த்திக்கிறோம்''’என்று தெரிவித்திருக்கிறது.

மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். தீ ஏற்படுத்திய கோரத்தைக் கண்டு அதிர்ந்துபோனார். சம்பவ இடத்தை ஆய்வு செய்ததுடன், ”பக்தர்கள் தங்கும் கூடாரங்களுக்கு அருகே எரிவாயு சிலிண்டர்களை யார் குவித்து வைத்தது? தீ விபத்துக்கான காரணம் என்ன? சிலிண்டர் சப்ளை செய்த நிறுவனம் எது? சிலிண்டரில் லீக்கேஜ் இருந்திருந்ததா? என்றெல்லாம் அரசின் உயரதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியதுடன், தீ விபத்துக்கான காரணம் குறித்து முழு ரிப்போர்ட் எனக்கு வேண்டும். இனி இது போன்ற ஒரு சம்பவம் நடக்கக்கூடாது என்றும் கடுமையாக உத்தரவிட்டிருக்கிறார்

Advertisment

இந்த மாதம் 29-ந்தேதி மௌனி அமாவாசை. உ.பி.யில் இந்த அமாவாசையில் பிரத்யேகமாக ஆன்மிக பக்தர்களும், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினரும் வழிபடுவார்கள். இந்த மௌனி அமாவாசை நெருங்கிவருவதால் அதற்கான பிரத்யேக ஏற்பாடுகளை கவனித்துவந்தார் முதல்வர் யோகி. அந்த ஏற்பாடுகளில் அவர் கவனம் செலுத்திவந்த நிலையில், இந்த தீ விபத்து சம்பவம் அவரை மிகவும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

ஆன்மிகத்தில் மிகவும் பற்று வைத்துள்ள துறவியான யோகி ஆதித்யநாத், எதிர்பாராமல் தீ விபத்து ஏற்பட்டதாக கருதினாலும், ஏதோ விபரீதத்தை இந்த தீ விபத்து எச்சரிக்கை செய்கிறது என்று கருதுவதாகவும், அது குறித்து ஆன்மிக துறவிகளிடம் அவர் கலந்தாலோசித்து வருவ தாகவும் உ.பி.யிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், தீ விபத்து பற்றி யோகியை தொடர்புகொண்டு பிரதமர் மோடி விசாரித்திருக்கிறார். அவரிடம், ”"அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவுமில்லை. துறவிகளும், பக்தர்களும் பாதுகாப்பாக இருக்கிறார்கள். உடனடி தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சேதமடைந்த பக்தர்களின் கூடாரப் பகுதிகள் புதுப்பிக்கப்படுகிறது''” என்று விவரித்திருக்கிறார் யோகி. இதற்கிடையே தீ விபத்துக்கான காரணங்கள் குறித்து புலனாய்வு அமைப்புகளும் ஆராய்ந்து வருகின்றன.

உயிரிழப்புகள் ஏதும் நிகழவில்லை என்பது ஆறுதல் தந்தாலும், ஆன்மிக பக்தர்களிடம் பயம் மட்டும் விலகவில்லை என்கிறார்கள் தீ விபத்து குறித்துப் பேசும் ஆன்மிகவாதிகள். உ.பி.யில் உள்ள அகோரிகளோ, "நடந்த தீ விபத்தை சாதாரணமாக நினைக்கக்கூடாது. புண்ணிய ஸ்தலத்தில் தீ விபத்து ஏற்படவே கூடாது. அப்படி ஏற்பட்டால் அது அபசகுனம். நடக்கப்போகும் விபரீதத்தை எச்சரிக்கை செய்யவே இந்த தீ விபத்து நடந்துள்ளது. அதிகாரத்தில் இருப்பவர்களின் பதவிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்''’என்று எச்சரிக்கை செய்து வருகிறார்களாம்.

அகோரிகள் சொல்லிவரும் இந்த எச்சரிக்கையை அறிந்து அப்செட்டாகியிருக்கிறார் பிரதமர் மோடி!