டலூர் மாவட் டம் திட்டக்குடிக்கு சுமார் 70-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அத்தியா வசிய தேவைகளுக்காக வந்துசெல்ல வேண்டியது கட்டாயம். அப்படி வரும் பெண்களிடம் பண்டிகைக் கால கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி தங்கள் கைவரிசையை காட்டிவருகிறது திருட்டுப் பெண்கள் கூட்டம்.

f

அக்டோபர் 4-ஆம் தேதி திட்டக்குடி பஸ் நிலையத்தில் தனது ஊருக்கு செல்வதற்காக காத்திருந்தார் அஞ்சலம் என்ற பெண்மணியிடம் 2000 ரூபாய் பணமும், அவரது மொபைல் போனும் களவாடப்பட் டது. 16-ஆம் தேதி செங்கமேடு கிராமத்தைச் சேர்ந்த அன்பழகன் மனைவி ஆவரணம், தன் மகளுக்கு சீர்வரிசை செய்ய திட்டக்குடியிலுள்ள ஒரு நகை அடகுக்கடையில் அடமானம் வைத்திருந்த இரண்டு சவரன் நகையை மீட்டெடுக்க வந்திருந்தார். மீட்டுக்கொண்டு தன் ஊருக்கு செல்ல பஸ்ஸில் ஏறும்போது அவர் பர்ஸில் வைத்திருந்த இரண்டு சவரன் நகை களவாடப் பட்டது.

17-ஆம் தேதி வையங்குடி கிராமத்தைச் சேர்ந்த சுலோச்சனா என்ற 60 வயது மூதாட்டி 17,000 ரூபாயை எடுத்துக்கொண்டு திட்டக்குடி பஸ் நிலையம் வந்திறங்கியுள்ளார். அவர் இறங்கும்போது பெண்கள் கூட்டமாக முண்டியடித்துக்கொண்டு பஸ்ஸில் ஏறியுள்ளனர். அப்போது சுலோச்சனா வைத்திருந்த 17 ஆயிரம் ரொக்கம் களவாடப்பட்டது.

Advertisment

உளுந்தூர்பேட்டை நகரத்திலிருந்து பாண்டூர் செல்லும் சாலையில் தனியார் திருமண மண்டபத்திற்கு பின்பகுதியில் குடியிருந்து வருகிறார் வங்கி ஊழியர் ஸ்டீபன்ராஜ். கடந்த 20-ஆம் தேதி இவரது மனைவி ஜெனிபர் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். மதியம் சுமார் 12 மணியளவில் 5 பேர் கொண்ட பெண்கள் கும்பலாக அவர் வீட்டுக்கு வந்துள்ளனர். அவர்களில் ஒருவர் பெண் குழந்தை வைத்திருந்தார். இன்னொரு பெண் கர்ப்பிணி, மூன்று பேர் நடுத்தர வயது கடந்தவர்கள். இவர்கள் ஐந்து பேரும் கிராமத்திலிருந்து உளுந்தூர்பேட்டை டவுனுக்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக நடந்துவந்ததாகவும் தாகம்தணிக்க தண்ணீர் தருமாறும் கேட்டுள்ளனர். பரிதாபப்பட்ட ஜெனிபர் அவர்களுக்கு குடிக்க தண்ணீர் கொடுத்துள்ளார். அந்தப் பெண்கள் அவரிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தனர்.

ff

அப்போது 5 பெண்களில் ஒருவர் பின்பக்க கதவு வழியாக வீட்டிற்குள் புகுந்து சுவரில் மாட்டியிருந்த பீரோ சாவியை எடுத்து சத்தமில்லாமல் பீரோ வைத் திறந்து பத்து பவுன் நகையைத் திருடியுள்ளார். இதற்கிடையில் முன்பக்கம் ஜெனிபரிடம் பேச்சுக் கொடுத்துக்கொண்டிருந்த நான்கு பெண்களும் திடீரென மாயமானார்கள். இதனால் சந்தேகமடைந்த ஜெனிபர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ திறந்துகிடந்தது. அதிலிருந்து 10 பவுன் நகை களவுபோனது கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அக்கம்பக்கத்தில் இருந்தவர்களிடம் கூறி அழ, தெருவிலுள்ளவர்கள் மாயமான ஐந்து பெண்களையும் தெருத்தெருவாக தேடிச்சென்று, மேற்படி ஐந்து பெண்களையும் மடக்கிப்பிடித்து உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் குணபாலன், சப் இன்ஸ்பெக்டர் பிரித்தா மற்றும் போலீசார் பிடிபட்ட அந்த பெண்களிடம் விசாரணை நடத்தி நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர்களைச் சிறையிலடைத்துள்ளனர்.

Advertisment

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த 75 வயது அன்னபூரணி என்ற மூதாட்டி சமீபத்தில் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு மண்ணச்சநல்லூரில் பஸ் ஏறியுள்ளார். பஸ்ஸில் அவர் கழுத்தில் அணிந்திருந்த ஒன்றரை பவுன் செயின் திருடப்பட்டது. அழுதுபுரண்ட அன்ன பூரணி போலீசில் புகாரளித்தார்.

சமயபுரம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த இரு பெண்களை போலீசார் மடக்கிப்பிடித்தனர். அவர்களிடம் விசாரித்தபோது திருப்பூர் மாவட்டம் முத்துநாயக்கன்பட்டியைச் சேர்ந்த காளியம்மாள், ரேகா என்கிற கல்பனா என்பது தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் தங்கள் பாணியில் விசாரணை நடத்தியதில் அன்னபூரணியின் கழுத்திலிருந்து ஒன்றரை சவரன் செயின் திருடியதை ஒப்புக்கொண்டனர்.

ff

இவர்கள் கடந்த 15 ஆண்டுகளாக தஞ்சை மாவட்டம் சோழபுரம் பகுதியைச் சேர்ந்த சரத்குமார், திருச்சி அரியமங்கலத்தைச் சேர்ந்த சரவணன் ஆலோ சனைப்படி தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சென்று தங்கள் கை வரிசையைக் காட்டி யுள்ளனர். இங்கு மட்டுமின்றி, திருப்பதி, மும்பை, புனே, ஹைதராபாத் என பல மாநிலங்களுக்கும் சென்று திருட்டுத் தொழிலை விரிவுபடுத்தி களவாடியுள்ளனர். அன்னபூரணியின் ஒன்றரை பவுன் செயின் அல்லாமல் பல்வேறு பெண்களிடம் திருடிய 58 சவரன் நகை, அரைக்கிலோ வெள்ளி, 26 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்களிட மிருந்து மூன்று கோடிக்கான சொத்து ஆவணங்களையும். கைப்பற்றியுள்ளனர். இருவர் மீதும் வழக்கு பதிவுசெய்து சிறையில் அடைத் துள்ளனர்

திட்டக்குடியில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து டி.எஸ்.பி. காவியா, "இத்தகைய பண்டிகைக் கால திருட்டுகளைத் தடுப்பதற்கு, குற்றவாளிகளை பிடிப்பதற்கு போலீஸ் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக ஆண்- பெண் காவலர்கள் சீருடையில்லாமல் மக்களோடு மக்களாக கலந்து குற்றவாளிகளைக் கண்காணித்து வருகிறார்கள். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறோம். பொதுமக்க ளுக்கு தொடர்பு எண்கள் கொடுக்கப் பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் எந்த நேரத்தில் வேண்டுமானா லும் தகவல் தெரிவிக்கலாம்'' என்றார்.